அடுத்ததாக உயிரை பறிக்க வரும் மோமோ சேலஞ்ச்..!

மோமோ சேலஞ் “ பிதுங்கிய உருண்டை கண்கள், விரிந்த முடிகள், வெளிர் நிற தோலுடன் கொடூரமான சிரிப்பை உதிர்க்கும் முகம் தான் உலகம் முழுவதும் தற்போது வாட்ஸ் ஆஃப் வழியாக பிரபலமாகி வருகிறது.

Advertisement

மோமோ சேலஞ்:

சமீபத்தில் அர்ஜென்டினா நாட்டின் புனோஸ் ஐரேஸ் பகுதியில் 12 வயதுடைய சிறுமியின் மரணத்தில் நடைபெற்று வந்த விசாரணையில் சிறுமியின் போனில் உள்ள வாட்ஸ் ஆஃப் இல் மோமோ என்று டைப் செய்யப்பட்டதாக அறிக்கையில் கூறியுள்ளனர். 

MOMO CHALLENGE – செய்ய வேண்டியது என்ன என்பதை காண:

18 வயது கூட நிரம்பாத சிறுமி பயன்படுத்தி வந்த செல்போனை ஆராய்ந்ததில் போனில் உள்ள போட்டோக்கள் மற்றும் வாட்ஸ் ஆஃப் செய்திகள் அனைத்தும் ஹக் செய்யபட்டுள்ளது என தெரியவந்தது.

“ மோமோ சவாலில் இணையும் நபர்கள் முன்பின் தெரியாத நபருடன் பழக வேண்டும். மோமோக்கு சவாலில் நீங்கள் ஈடுபட மறுப்பு தெரிவித்தால் அதற்கு பதிலாக உங்களை மிரட்டும் விதத்தில் வன்முறையை சித்தரிக்கும் படங்கள் வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், உங்களின் தனிப்பட்ட தகவல்களும் வெளிப்படும் என்கின்றனர் “  

Advertisement

இதனால் சிறுமி தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தெரிவித்து உள்ளது. ஸ்மார்ட்போன் ஸ்க்ரீனில் தோன்றும் மோமோ சவாலில் பங்கு கொள்வதால் உளவியல் ரீதியாக பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

யார் மூலம் எங்கிருந்து துவங்கியது :

 “ இந்த மோமோ ஃபேஸ்புக்கில் பக்கத்தில் இருந்தே துவங்கி இருக்கும் என்கிறார்கள். ஒரு குழுவில் இருந்த சிலர் முன்பின் தெரியாத ஒரு எண் மூலம் அழைப்பு விடுக்க முடியுமா என சவால் விடுத்து கொண்டதில் இருந்து மோமோ தொடங்கி உள்ளது என UIDI காவல் துறை தெரிவிக்கின்றனர் “

மோமோ எனும் ஆபத்தான சவால் அமெரிக்கா, பிரான்ஸ், அர்ஜென்டினா மற்றும் நேபாளம் என உலகம் முழுவதும் பரவி உள்ளது. மோமோ சவாலில் என்னதான் இருக்கின்றது என்ற ஆர்வமே உங்களை ஆபத்தான வலைக்குள் சிக்க வைக்கின்றது. நிச்சயம் இந்த சவாலில் ஈடுபடுபவர்களின் தரவுகள் அனைத்தும் ஹக் செய்யப்பட்டு, மிரட்டப்படலாம் என பல நாடுகளில் உள்ள காவல்துறையினர் எச்சரித்து உள்ளனர். 

சோசியல் மீடியாவில் உதித்து இருக்கும் இதுபோன்ற ஆபத்தான விளையாட்டுகளில் பெரும்பாலும் இளம் வயதினரே ஆர்வத்துடன் பங்கு பெறுகின்றனர். மோமோ சவாலை ஏற்பதால் உடன் இருப்பவரை கொலை செய்ய முயற்சி செய்ய மற்றும் தற்கொலை செய்ய மனரீதியாக பாதிப்புகளை உண்டாகிறது. 

“ மெக்சிகோ , ஸ்பெயின் உள்ளிட்ட பல நாடுகளில் சமூக வலைத்தளங்களில் நேரடியாகவே காவல்துறையினர் மோமோ சவாலை குழந்தைகள் மேற்கொள்ளாமல் இருக்க பெற்றோர்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர். ஸ்பெயின் காவல்துறை #pasadechorradas என்ற ஹஷ்டக் மூலம் எச்சரிக்கை விடுத்து வருகிறது “

வாட்ஸ் ஆஃப் மூலம் அதிகம் பரவுவதாகக் கூறும் மோமோ சவால் எங்கிருந்து தொடங்கப்பட்டது என்பதை கூறுவது அனைவருக்கும் சவாலாக உள்ளது. இதுவரை தொடங்கிய இடம் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், அதில் இடம்பெற்ற முகம் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்ற தகவல் கிடைத்துள்ளது. 

“ மோமோவின் கொடூரமான முகம் 2016-ல் ஜப்பானின் டோக்கியோவில் உள்ள வெண்ணிலா கேலரியில் நடைபெற்ற கண்காட்சியில் வைக்கப்பட்ட சிலைக்கு சொந்தமானது. அருவருப்பான முகம் மற்றும் பறவையின் உடல் கால்கள் என அமைந்து இருந்த அந்த சிலையுடன் பலரும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு சோசியல் மீடியாவில் பதிவிட்டு உள்ளனர். அதை எடுத்து முகத்தை மட்டும் கிராப் செய்து சில மாறுதல்களை செய்து பயன்படுத்தி உள்ளனர் “

“ ப்ளூ வேல் “

  ரஷ்யாவில் தொடங்கி உலகம் முழுவதும் பலரின் உயிரைப் பறித்த ப்ளூ வேல் விளையாட்டு உடன் மோமோ சவாலை ஒப்பிட்டு வருகின்றனர். இரண்டிலும் மக்களின் தகவல்கள் திருடப்பட்டு அவர்களை அச்சுறுத்தி தற்கொலை செய்ய தூண்டியது என்பதே காரணம். 

ஐ.பி.எஸ் அதிகாரி அரவிந்தன் கூறுவதை காண: 

மோமோ சவால் வாட்ஸ் ஆஃப் மூலம் அதிகம் பரவினாலும் குழந்தைகளுக்கான மைன்ஃகிராப்ட் விளையாட்டு மூலமாகவும் கவனம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. முன்பின் அறியப்படாத எண்ணுடன் தொடர்பு கொள்ளவோ, அதனுடன் செய்திகள் பரிமாறிக் கொள்ளவோ வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பதின்பருவத்தில் குழந்தைகளுக்கு ஸ்மார்ட்போன்கள் வழங்குவதால் அவர்கள் சோசியல் மீடியாவில் மூழ்கி உள்ளனர். இதில் பெற்றோர்களே கவனம் செலுத்த வேண்டும். பெற்றோர்களே தங்களின் குழந்தைகளை கண்காணிக்க வேண்டும்.  சவால்கள் உங்களின் சாவிற்கு வழிவகுக்கும் என்பதை மறவாமல் இருங்கள்..! 

 

‘Momo’ is the latest terrifying game to sweep the web

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button