அமெரிக்காவை கலக்கிய You Turn!

அமெரிக்காவை கலக்கிய You Turn. நமது பணியை மிகவும் விரும்பிய அமெரிக்க தமிழ் நண்பர்கள் தங்கள் volleyball குழுவிற்கு நமது பெயரை வைத்துள்ளனர். அமெரிக்கா நியூஜெர்ஸியில் நடைபெற்ற TRADITIONS VOLLEYBALL TOURNAMENT 2018-இல் YOUTURN குழு வெற்றிப்பெற்று கோப்பையை தட்டிச்சென்றது.
2018 ஆண்டுக்கான பாரம்பரிய கைப்பந்து போட்டி ஜுன் மாதம் 10 ஞாயிற்று கிழமை நியூஜெர்ஸியில் உள்ள தெற்கு ப்ளைன்பீல்ட்டில் நடைப்பெற்றது. இதில் YOUTURN அணி கலந்துக்கொண்டு சிறப்பாக விளையாடியது. நமது YOUTURN நிறுவனரான விக்னேஷ் காளிதாசனின் நண்பரான இளையபெருமாள் மற்றும் மற்ற நண்பர்கள் நம் பக்கம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்தே உறுதுணையாகவும் அவ்வப்போது புரளிகளுக்கு எதிராக விவாதிப்பதும் உண்டு. வாலிபால் போட்டி அறிவிக்கப்பட்டவுடன் சமூகவலைதளத்தில் மறைமுக விஷமாக பரவிக்கிடக்கும் புரளிகளையும் வதந்திகளையும் வெளிச்சம் போட்டு காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்த தங்கள் அணியின் பெயரை YOUTURN என பதிவு செய்தார்கள்.
அணியின் பிரதிநிதி இளையபெருமாள் , கேப்டன் ஜான் கென்னடி, லோகநாதன் முனுசாமி, இளையபெருமாள், முருகன் கிருஷ்ணன் , சுந்தர் கோபாலன் , அரவிந்தன் பன்னீர்செல்வம், மறுந்தீஷ் கோபால், பிரவீன் குமார் ராஜேந்திரா, ராஜேஷ்குமார் தங்கராஜ், தவமணி களியவர்த்தன், அருண் குணசேகரன்,ஃப்ராங்கிளின் ராஜேஷ்.
வாலிபால் போட்டி ஜூன் காலையிலேயே அமர்க்களமாக தொடங்கியது. GROUP A, GROUP B,GROUP C,GROUP D என நான்கு குழுக்களில் ஒரு குழுவிற்கு 6 குழுக்கள் வீதம் மொத்தம் 24 அணிகள் . குழுவில் உள்ள ஒவ்வொரு அணியும் மீதமுள்ள 5 அணிகளுடனும் போட்டியிட வேண்டும். Group A -வில் youturn தன் முதல் ஆட்டத்தை காலை 10:40-க்கு TRADITION EAGLE அணியுடன் தொடங்கியது. போட்டிகளில் நன்றாக விளையாடும் அணிகள் மேஜர் லீக்கிலும் சுமாராக விளையாடிய அணிகள் மைனர் லீக்கிலும் பிரிக்கப்படும் . அதன்படி அதில் அபாரமாக வெற்றிக்கண்ட youturn 11:05 மணி, 1:35 மணி, 9 மணி மற்றும் 11:55 மணி முறையே HILLSBOROUGH KNIGHTS, WOODBRIDGE TEAM, F5, CAESARS என அனைத்து அணிகளுடனும் அருமையாக விளையாடியதால் மேஜர் லீக்கிற்கான காலிறுதி போட்டியில் Strawberry Spikers உடன் களமாடி வெற்றி அடைந்து அரை இறுதி சுற்றுக்கு சென்றது. வாலிபால் போட்டி நடைபெற்ற உள்ளரங்கத்தில் இருந்த பலரின் பார்வையும் அணியின் மீது திரும்பியது முக்கியமாக ஜான் கென்னடி சிறப்பாக விளையாடி நட்சத்திர வீரராக ஜொலித்தார்.
பலரும் அணியின் பெயர் காரணத்தை ஆர்வத்துடன் கேட்டு பாராட்டினர் . மாலை 3 மணியளவில் அரை இறுதிப்போட்டியில் TRADITIONS அணியை எதிர்கொண்டு போட்டியில் விளையாடி அதையும் விட்டு வைக்காமல் அடித்து துவைத்து 4 மணிக்கு Edison Warriors முன் போய் நின்றது. எந்த பால் போட்டாலும் அடிக்கிறான்டா மாதிரி எந்த அணிக்கூட விளையாண்டாலும் ஜெயிக்கிறாய்ங்கடா என்ற ரீதியில் அதிக புள்ளிகள் பெற்று கோப்பையை கைப்பற்றியது YOUTURN! .
ஜான் கென்னடி ஆட்ட நாயகன் விருதினை பெற்றார். அணி வெற்றியோடு சமூக வலைத்தள புரளிகளை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்திய YOUTURN வாலிபால் அணியினர் அடுத்து வரும் போட்டிகளில் அனைத்திலும் இதே பெயருடன் விளையாட போவதாக கூறினர். இந்த TRADITIONS VOLLEYBALL TOURNAMENT போட்டித் தொடரில் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த அமெரிக்கவாழ் இந்தியர்களும் கலந்துக்கொண்டனர் . பலரும் YOUTURN பெயர் ஏன் என கேட்டனர். புரளிகளை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வைத்ததாகவும் ஓரு வருடமாக தமிழில் பக்கத்தினை நடத்தி வருவதை தெரிந்தவுடன் பாராட்டியதோடு அவர்கள் ஊரிலும் மொழியிலும் கூட இப்படி இருந்தால் நல்லா இருக்குமே இனி நாங்களும் எங்கள் கண்ணில் படும் செய்திகள் உண்மையா என ஆராய்ந்தப்பின் பகிர்வோம் எனக்கூறியது மகிழ்ச்சி.
மிகப்பெரிய வெற்றியுடன் அடுத்ததாக ஜூன் 8-ஆம் தேதியில் நியூ ஜெர்சி கிழக்கு பிருன்ஸ்விஸ்க்கில் பல்வேறு மாநில வீரர்கள் பங்கேற்ற நடந்த NATS கோடைக்கால கைப்பந்து போட்டித்தொடரில் கலந்துக்கொண்டு அனைத்து போட்டியிலும் சிறப்பாக விளையாடி வெற்றிப்பெற்று இறுதிப்போட்டியில் RUNNER-UP கோப்பையை வென்றது. YOUTURN அணி அதோடு நில்லாமல் ஜூலை மாதம் 21-ஆம் தேதி மைத்ரி கைப்பந்து போட்டியில் கலக்கலாக விளையாடி அதிலும் RUNNER-UP வென்று இன்னொரு சாதனையை புரிந்தது. பொய் செய்திகளை உடைத்து உண்மையின் பக்கம் துணை நிற்கும் YOUTURN அணியின் வெற்றி தொடரும்