This article is from Nov 11, 2017

Is this good note or fake note?

பரவிய செய்தி

புதிய 500 ரூபாயில் அச்சு பிழை எற்பட்டுள்ளது , இருந்தாலும் இந்த ரூபாய் நோட்டுகள் செல்லும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது .

மதிப்பீடு

சுருக்கம்

வேக வேகமாக நோட்டுகள் செல்லாது என்று கூறி புதிய நோட்டுகளை வெளியிட்டால் இப்படித்தான் இருக்கும் .

விளக்கம்

ஆமாம் மக்களே இது உண்மையான செய்தி , புதிய 500 ரூபாய் நோட்டின் நடுவில் உள்ள கோட்டில் மாற்றம் உள்ளது என ஒருவர் புகார் அளித்துள்ளார் . ரிசர்வ் வங்கியும் இதனை ஒத்துக்கொண்டு உள்ளது .

பரபரப்பான சூழ்நிலையில் இவ்வாறு அச்சு பிழை எற்பட்டு இருக்கலாம் என்று பதில் அளித்துள்ளது . கள்ள நோட்டுகளை ஒழிக்க தான் பழைய நோட்டுகள் செல்லாது என்று கூறி புதிய நோட்டுகளை அறிமுகபடுத்தினார்கள் . ஆனால் அவர்களே பிழையோடுஅச்சடிக்கப்பட்ட நோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளனர் .

கள்ள நோட்டை அடிபவர்கள் கூட கனகச்சிதமாக நோட்டுகளை அடிகிறார்கள் . ஆனால் அரசாங்கத்தால் ஒரு நோட்டை கூட ஒழுங்காக தர முடியவில்லை . இவ்வாறு பல நோட்டுகள் அச்சு பிழையோடு நாட்டில் கிடைத்துள்ளது .

பல நோட்டுகளில் சீரியல் எண்கள் இல்லை , இதில் ஒரு கொடுமை என்னவென்றால் ஓர் புதிய 2000 ரூபாய் நோட்டில் காந்தியின் படமே அச்சடிக்காமல் இருந்தது . இவ்வாறு பல பிழைகள் இருந்தாலும் மக்கள் எதாவது புதிய நோட்டுகள் கிடைத்தால் போதும் என்று இருந்த தருணம் அது .

Please complete the required fields.




ஆதாரம்

Back to top button
loader