உயிருக்கே ஆபத்தான கிகி சேலஞ்ச்..!

சேலஞ்ச் என்ற ஹஷ்டாக் செய்து வீடியோக்களை பதிவிடுவது சமூக வலைத்தளங்களில் ட்ரென்ட் ஆகக் கூடியவை. பிரபலமானவர்கள் தொடங்கி வைக்க சாமானியர்களும் தங்களை பிரபலமாக்கி கொள்ள சேலஞ்ச் வீடியோக்களை செய்து பதிவிடுவது வழக்கமாகிவிட்டது.
ஐஸ் பக்கெட் சேலஞ்ச் உலகளவில் ட்ரென்ட் ஆகி சேலஞ்ச் வீடியோக்களின் வருகைக்கு அடித்தளமிட்டது. இதன்பின் fitness சேலஞ்ச் இந்தியாவில் மிகப்பெரிய அளவில் ட்ரென்ட் ஆகியது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூட தனது உடற்பயிற்சி வீடியோவை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
ரைஸ் பக்கெட், மரம் நடுவது போன்ற சேலஞ்ச் வீடியோக்கள் நல்ல நோக்கத்தை கொண்டவைகளாக இருந்தாலும், சில சேலஞ்ச் வீடியோக்கள் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்து விடுகிறது. அப்படி ஆபத்தான சேலஞ்ச் தான் ட்ரென்ட் ஆகி வரும் கிகி சேலஞ்ச்.
” கனேடியன் பாப் பாடகர் ட்ரேக் பாடிய கிகி டு யூ லவ் மீ என்ற பாடல் இணையத்தில் மிகப்பெரிய சேலஞ்ச் ஆக மாறியுள்ளது. In my feeling challenge என்ற ஹஷ்டாக் உடன் ட்ரேக் பாடிய இப்பாடலை ஓட விட்டு காரில் இருந்து இறங்கி அப்பாடலுக்கு ஏற்ப நடனமாடிக் கொண்டே பின்னர் காரில் ஏறி உட்கார வேண்டும் “.
” முதலில் கார் போன்ற வாகனங்கள் ஏதுமில்லாமல் தான் இந்த # In my feeling challenge வீடியோ மேற்கொள்ளப்பட்டு பதிவிடப்பட்டது. முதன் முதலில் நகைச்சுவை நடிகர் shiggy என்பவர் இன்ஸ்டாகிராமில் கிகி டு யூ லவ் மீ என்ற பாடலுக்கு நடனமாடிய வீடியோவை பதிவிட்டார். ஆனால், ஆவர் காரில் இருந்து இறங்கி ஆடவில்லை. அவரது நண்பர் வீடியோ எடுக்க அவர் நடனமாடி இருப்பார் “.
இதேபோன்று ஹாலிவுட் நடிகர் Will Smith கிகி டு யூ லவ் மீ பாடலுக்கு உயரமானப் பகுதியில் நடமாடும் வீடியோவை பதிவிட்டு இருந்தார். இவ்வாறு பிரபலங்கள் கிகி வீடியோவை பதிவிட உலகளவில் ட்ரென்ட் ஆகி விட்டது. காரில் இருந்து இறங்கி நடனமாடிக் கொண்டே வருவது இந்தியாவிலும் பரவத் தொடங்கியது.
இப்பொழுது தென்னிந்தியாவிலும் பிரபலமாகும் விதத்தில் சினிமா நடிகர்கள் கூட இந்த சேலஞ்ச்-ஐ செய்து வருகின்றனர். திரைப்பட நடிகை ரெஜினா கிகி சேலஞ்ச் பாடலுக்கு நடமாடும் வீடியோவை வெளியிட்டு உள்ளார்.
உண்மையில், இந்த சேலஞ்ச் இல் இருக்கும் ஆபத்து என்னவென்றால் காரில் இருந்து இறங்கி பாடலுக்கு நடனமாடும் பொழுது காரில் இருக்கும் கேமராவை பார்த்தே நடனமாடிக் கொண்டு இருப்பர். இதனால் எதிரே வரும் வாகனமோ, போஸ்ட் கம்பம் அல்லது ஏதேனும் ஒன்றின் மீது மோதி ஏற்படும் ஆபத்து பற்றி அவர்களுக்கு தெரிவதில்லை.
கிகி சேலஞ்ச் வீடியோவில் ஆடும் பொழுது மோதிக் கொண்ட காட்சிகள் கூட இணையத்தில் வைரலாகியது. இதனால் உயிருக்கே ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகையால், இந்த கிகி சேலஞ்ச் மேற்கொள்வது தவறான செயல், ஒருவேளை இதை யாரெனும் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பல மாநில போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
” கிகி சேலஞ்ச் செய்வது ஆபத்து என்பதால் இதற்கு பெங்களூர் போலீசார் எச்சரிக்கை செய்துள்ளனர். மேலும், டெல்லி, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநில போலீஸ் துறையின் சார்பில் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது “.
கிகி சேலஞ்ச் மேற்கொள்பவர்களின் மீது Indian penal code 258 Section 70(b)-ன் படி வழக்கு பதிவு செய்யப்படும் என ஹைதராபாத் போலீசார் தெரிவித்துள்ளனர்.
சேலஞ்ச் வீடியோக்கள் செய்வதால் பிரபலமானவராக ஆகலாம் என்ற ஆசை மக்கள் மத்தியில் மேலோங்கி உள்ளது. இதுபோன்ற ஆபத்தை விளைவிக்கும் சேலஞ்ச்-ஐ விடுத்து நல்ல நோக்கத்தை கொண்ட சேலஞ்ச் வீடியோக்களை மக்கள் மேற்கொள்வது சிறந்ததாக இருக்கும்.
What is Kiki challenge and why police say that it is dangerous?
Warning against viral KiKi challenge issued
Kiki Challenge: Jaipur Police Uses Dark Humour To Warn Against Viral Trend