உயிரை பணயம் வைத்து நாட்டை காக்கும் வீரர்களின் படங்களா?

பரவிய செய்தி
காஷ்மீர் பள்ளதாக்கின் ஆபத்தானா பகுதியில் இந்தியா இராணுவ வீரர்கள் உயிரை பணையம் வைத்து பாதுகாப்பு பணியில் உள்ளனர் . இதை இராணுவ வீரர்களை கேலி செய்பவர்களுக்கு பகிருங்கள் .
மதிப்பீடு
சுருக்கம்
பொய்களை பரப்பி இராணுவ வீரர்களை இழிவுப்படுத்த வேண்டாம் ..
விளக்கம்
சமூக வலைதளங்களில் இராணுவ வீரர்கள் இருவர் காஷ்மீர் பள்ளத்தாக்கின் ஆபத்தான பகுதியின் ஒரு மரக்கிளையில் உயிரை பணயம் வைத்து பாதுகாப்பு பணியில் உள்ளது போன்ற ஒரு படம் உலாவி வருகின்றது .
மனதிற்கு வருத்தமாக இருந்தாலும் இதுவும் ஒரு புரளி என்பது தான் உண்மை . இது போட்டோஷாப் மூலம் இணைக்கப்பட்ட புகைப்படம் . இராணுவ வீரர்கள் இருவர் பயிற்சி எடுக்கும் புகைப்படத்தை பள்ளதாக்கில் உள்ள மரக்கிளையோடு இணைக்கப்பட்டுள்ளது .
இதை செய்தவருக்கு கொஞ்சம் கூட அறிவு இல்லை என்று தான் கூற வேண்டும் . அரசியல்வாதிகள் , நடிகர்களின் தொண்டர்கள் தான் விளம்பரத்திற்காக போட்டோஷாப் போன்ற வேலைகளை செய்கிறார்கள் என்றால் , இராணுவ வீரர்களின் பெயர்களை கூறி எதற்காக இத்தகைய செயலை செய்ய வேண்டும் .
இதை தொடர்ந்து பல புகைப்படங்கள் இராணுவ வீரர்களின் பெயரை கூறி சமூக வலைதளங்களில் அதிகமாக பரவுகின்றன . இராணுவ வீரர்களுக்கு பெருமை சேர்க்க இவ்வித செயல்களை செய்ய வேண்டாம் . அவர்களுக்கு உண்டான நற்பெயரை கெடுக்க கூடிய செயலாகும் ..