கலைஞரின் உடல்நிலை..!

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களுக்கு திடீரென உடல்நிலை சரியில்லை என்ற செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், கலைஞருக்கு ஏற்பட்டுள்ள சிறுநீரக தொற்றுக்கு மருத்துவக் குழு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், பல அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் கலைஞரின் கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று மு.க.ஸ்டாலின் அவர்களிடம் நலம் விசாரித்து வருகிறார்கள். மேலும், பல மாநில அரசியல் தலைவர்கள், பிரதமர், குடியரசுத் தலைவர் சார்பில் ட்விட்டர் பதிவுகள் மற்றும் தொலைபேசி வாயிலாக கலைஞரின் நலம் குறித்து பேசி வருகிறார்கள்.
இந்த பரபரப்பான நிலையில் கலைஞரின் உடல்நலம் குறித்து வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அது தொடர்பாக திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கலைஞர் உடல்நலம் குறித்து பரவும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம், அவர் நலமுடன் உள்ளார். மேலும், சிகிச்சை நடைபெறுவதால் தொண்டர்கள், மக்கள் தலைவரை சந்திக்க வருவதை தவிர்க்குமாறு ஸ்டாலின் அவர்கள் தெரிவித்து உள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த துரைமுருகன் அவர்கள், ” நான் ஏன் பொய் சொல்ல போகிறேன். தலைவரின் உடல்நலம் நல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறது ” என்றுள்ளார். வீண் வதந்திகளை மக்கள் யாரும் நம்ப வேண்டாம்.