கலைஞர் மறைந்தார்..!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் , ஐந்து முறை தமிழகத்தின் முதல்வராக இருந்த கலைஞர் மு.கருணாநிதி உடல்நலக் குறைவு காரணமாக காவிரி மருத்துவமனையில் 10 நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்தார்.
கலைஞரின் உடல் உறுப்புகள் மருத்துவ சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளிக்க சவாலாக இருந்ததாக மருத்துவர்கள் அறிக்கையில் தெரிவித்தனர். இந்நிலையில், ஆகஸ்ட் 07-ம் தேதி கலைஞர் வயது மூப்பால் உடல்நலம் குன்றி இயற்கை எய்தினார்.