கேரளாவிற்கு பிற மாநிலங்கள் அளித்த நிதிகள்..!
கேரள வெள்ள பாதிப்பிற்கு பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் இருக்கும் மாநிலங்கள் நிவாரண நிதி என எதையும் அறிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இணையத்தில் வலம் வருகிறது. இந்தியாவில் உள்ள பெருவாரியான மாநிலங்கள் கேரளாவிற்கு உதவுவதற்காக நிதிகளை வழங்கி வருகின்றனர். இந்நிலையில், தவறான தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
3-4 நாட்களுக்கு முன்பு இந்த செய்தியுடன் இந்திய வரைபடம் ஒன்று பரவி வந்தது. ஆனால், தற்போது பல மாநிலங்கள் நிதி அளித்து விட்டனர். ஆனாலும் தொடர்ந்து அப்படங்கள் பகிரப்படுகிறது.
கேரளாவில் வெள்ளத்தால் ரூ.19,512 கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கேரளா முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்து இருந்தார். முதற்கட்டமாக ரூ.100 கோடியை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்தார், பின் ரூ.100 கோடியுடன் மேலும் கூடுதலாாக ரூ 500 கோடி வழங்குவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.
தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் கேரளாவிற்கு ரூ.25 கோடியை உடனடியாக வழங்குவதாகவும், 2.5 கோடி மதிப்பிலான குடிநீர் சுத்திகரிப்பு கருவிகளையம் வழங்குவதாக அறிவித்துள்ளார். டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கேரளாவிற்கு ரூ.10 கோடியும், ஆம் ஆத்மி கட்சியின் எம்பி, எம்எல்ஏக்களின் ஒரு மாத ஊதியத்தையும் வழங்குவதாக அறிவித்தார். ஆந்திரா அரசு சார்பில் ரூ.10 கோடியும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.
மாநிலங்கள் |
நிதி |
தெலுங்கானா |
25 கோடி |
மகாராஷ்டிரா |
20 கோடி |
உத்திரப்பிரதேசம் |
15 கோடி |
மத்தியப்பிரதேசம் |
10 கோடி |
தமிழ்நாடு |
10 கோடி |
ஆந்திரா |
10 கோடி |
கர்நாடகா |
10 கோடி |
டெல்லி |
10 கோடி |
பஞ்சாப் |
10 கோடி |
குஜராத் |
10 கோடி |
பீகார் |
10 கோடி |
ஓடிஸா |
5 கோடி |
ஜார்கண்ட் |
5 கோடி |
உத்தரகாண்ட் |
5 கோடி |
ஹிமாச்சல் பிரதேசம் |
5 கோடி |
புதுச்சேரி |
1 கோடி |
தமிழக அரசின் சார்பில் முதல் கட்டமாக ரூ.5 கோடி கேரள நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டது. பின் முதல்வர் பழனிச்சாமி மீண்டும் ரூ.5 கோடி வழங்குவதாக அறிவித்தார். மேலும், கேரளாவிற்கு மருந்து பொருட்களும், நிவாரண பொருட்களும் தமிழகத்தில் இருந்து அனுப்பப்படுகிறது. பஞ்சாப் மாநிலத்தின் முதல்வர் அமர்நாத் சிங் 5 கோடி ரூபாயை கேரள வெள்ள நிவாரண நிதிக்கு அளிப்பதாவும், ரூ.5 கோடி மதிப்பில் நிவாரணப் பொருட்களை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
பீகார் முதல்வர் நிதிஸ் குமார் ரூ.10 கோடியை வழங்குவதாகவும், ஓடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் ரூ.5 கோடியும் வழங்குவதாக அறிவித்தார். புதுச்சேரி முதல்வர் 1 கோடி வழங்குவதாக அறிவித்தார்.
மகாராஷ்டிரா மாநிலம் 20 கோடி, உத்திரப்பிரதேசம் 15 கோடி, குஜராத் 10 கோடி, மத்தியப்பிரதேசம் 10 கோடி, கர்நாடகா 10 கோடி, ஹிமாச்சல் பிரதேசம் 5 கோடி, ஜார்கண்ட் 5 கோடி, உத்தரகாண்ட் 5 கோடி என பல மாநிலங்கள் நிதி உதவி அளித்து வருகிறனர். மேலும், உணவுகள், தண்ணீர், உடைகள் என நிவாரண பொருட்கள், நிவாரணப் பணிகள் தொடர்பான உபகரணங்கள், உதவிகளையும் வழங்கி வருகின்றனர்.
Kerala floods: This is how much state has received as donation so far
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.