This article is from Aug 12, 2018

திருவள்ளுவரின் சாதி என்ன ?

திருவள்ளுவர் திருக்குறளில் அதிகமாக சமஸ்கிருதத்தை பயன்படுத்தி இருக்கிறார் என்றும், அதனால் அவர் ஒரு பிராமின் என்று முன்னாள் நீதி அரசர் மார்கண்டேய கட்ஜு பதிவிட்டு இருந்தார்.  

சரி அவர் சொன்னது ஒருபுறம் இருக்க, நாமும் இதைப் போன்ற பல லாஜிக்கை வைத்து அவரின் மதத்தை, சாதியை கண்டுபிடிக்கலாம் என்கிற முயற்சியில்,

திருவள்ளுவர் ஒரு தேவர் : 

 திருவள்ளுவரின் இயற்பெயர் என்றுத் தேடுகையில் அவருக்கு தேவர் என்றும் பெயர் இருப்பதை பார்க்க முடிந்தது. இதை வைத்து பார்கையில் அவர் தேவர் சாதியை சேர்ந்தவராக தான் இருக்க வேண்டும். நிற்க இன்னும் பல லாஜிக்கள் வருவதால் முழுமையாக கட்டுரையை படித்து முடிவுக்கு வர வேண்டுகிறோம்.

திருவள்ளுவர் விஸ்வகர்மா :

 திருவள்ளுவர் கையில் ஆணி வைத்து இருக்கிறார். ஆணி போன்ற பொருட்களை தச்சு வேலை செய்யும் ஆசாரிகளே பயன்படுத்துவார்கள். அதனால், அவர் விஸ்வகர்மாவை சேர்ந்தவராக தான் இருக்க வேண்டும்( எப்பா அது எழுத்து ஆணி தானே என்று லாஜிக் எல்லாம் பேசக் கூடாது ).  

திருவள்ளுவர் ஒரு நாடார் :

 திருவள்ளுவர் திருக்குறளை எழுத பயன்படுத்திய இன்னொரு பொருள் பனை ஓலை. அந்த காலத்தில் பனை மரங்களில் ஏறுகிற பணியை செய்தவர்கள் நாடார் சமுகத்தை சேர்ந்தவர்களே. 1330 குறள்கள் எழுதுவற்கு இவருக்கு பனை ஓலை கிடைத்து இருக்கிறது என்றால் அவர் அந்த சாதியாகத் தானே இருக்க வேண்டும்.

திருவள்ளுவர் ஒரு வள்ளுவர் :

 வள்ளுவர் என்ற சாதி பிரிவு தமிழகத்தில் உள்ளது. அவரின் பெயரிலேயே வள்ளுவர் என்று இருப்பதால் அவர் வள்ளுவர் சாதியை சேர்ந்தவர். திரு என்பது அவரின் பெயர் வள்ளுவர் என்பது சாதி. அந்த காலத்தில் சாதி பெயரை பின்னாடி போடும் பழக்கம் இருந்ததால் இப்படி வந்து இருக்கிறது.

திருவள்ளுவர் நாயக்கர் :

திருவள்ளுவருக்கு பிறப் பெயர்களில் நாயனார் என்றப் பெயரும் உண்டு. உண்மையில் பார்த்தால் அது எழுத்து பிழை. நாயக்கர் என்பது தான் மருவி நாயனார் ஆனது. அதனால் திருவள்ளுவர் நாயக்கர் சாதியை சேர்ந்தவர்.  

திருவள்ளுவர் ஒரு முஸ்லீம் :

 திருவள்ளுவர் நீண்ட தாடி வைத்து இருக்கிறார். இவ்வளவு பெரிய தாடியை எல்லாம் பெரும்பாலும் முஸ்லீம்கள் தான் வைத்து இருப்பார்கள். அதனால், இவர் முஸ்லீம் மதத்தை சேர்ந்தவராக தான் இருக்க வேண்டும்.

திருவள்ளுவர் ஒரு சிங் :

 மண்டை மேலே கொண்டை வைத்து இருப்பதால் திருவள்ளுவர் ஒரு சிங் ஆக தான் இருந்திருக்க வேண்டும். இது புரியாமல் பேசக்கூடாது.

திருவள்ளுவர் ஒரு வன்னியர்:

 இதற்கு பெரிதாக காரணம் ஏதுமில்லை. இதைப் போட்டால் தான் ரைமிங் ஆக உள்ளது. வள்ளுவ வன்னியர்..! பார்த்தீர்களா பிற சாதியை விட ரைமிங் ஆக செட் ஆவது இதற்கு மட்டும் தான். இதிலிருந்தே தெரியவில்லையா.

இதோடு நம்ம ஆராய்ச்சி முடிந்தது. ஆனால், பிற பெரும் ஆராய்ச்சியாளர்கள் கூறுவதையும் கேட்க வேண்டியது நமது கடமை.

திருவள்ளுவர் ஒரு கிறிஸ்தவர் :

திருவள்ளுவர் ஒரு பறையர் :

திருவள்ளுவர் சாதியையும், மதத்தையும் பேசும் அறிவிலிகள் தெரிந்து கொள்ள வேண்டியது கடவுள் வாழ்த்து பாட்டில் குறிப்பிட்ட கடவுளின் பெயரை எழுதாமல் வந்த செய்யுள் இது. இதுவே பல எதிர்ப்பை சம்பாரித்தது. இவர் பெயர், ஊர், தோற்றம் போன்ற தகவலுமே மிக உறுதியாக யாருக்கும் தெரியாது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

இதுவே உண்மை..!

திருக்குறளின் கருத்துகளை வைத்து விவாதித்து நம்மை செம்மைபடுத்த வேண்டுமே தவிர இதைப் போன்ற சாதி, மத ஆராய்ச்சி செய்து நேரத்தை வீணடிக்ககூடாது. தங்கப்பதக்கம் பெறும் விளையாட்டு வீரர்களின் திறமைக்கு வாழ்த்து சொல்லாமல், கூகுளில் அவர்களின் சாதி தேடும் நபர்களுக்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை.  

Please complete the required fields.




Back to top button
loader