This article is from Sep 04, 2018

‘ பாசிச பாஜக ஆட்சி ஒழிக ‘ நடந்தது என்ன ?

இந்திய அளவில் ட்ரென்ட் ஆகிய பாசிச பாஜக ஆட்சி ஒழிக என்ற ஹஷ்டாக். செப்டம்பர் 03-ம் தேதி தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தூத்துக்குடி சென்ற விமானத்தில் பயணித்த மாணவி சோபியா என்பவர் மத்திய பாஜக ஆட்சிக்கு எதிராக கோஷங்களை முழங்கியதாக கூறி வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டார்.

சோபியா கைது கண்டனத்துக்கு உரிய ஒன்றாக மாறியது. ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இந்திய அளவில் இந்த சம்பவம் ட்ரென்ட் ஆகியது. விமானத்தில் நடந்த நிகழ்வு குறித்து தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து இருந்தார்.

விமானத்தில் உடன் பயணித்த சோபியா என்ற மாணவி மத்திய பாஜகவிற்கு எதிராக கோஷங்களை முழங்கி உள்ளார். விமானத்தில் மற்ற பயணிகளுக்கு இடையூறுகள் ஏற்படக் கூடாது என அதை கண்டு கொள்ளாமல் அமைதியாக இருந்ததாகவும், ஏர்போர்ட் வரவேற்பு பகுதியில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய தருணத்தில் போலீசார் சமாதானம் செய்துள்ளனர். ஆனால், அதில் பலனில்லை என அவர் அளித்த பேட்டி மற்றும் வீடியோ காட்சி மூலம் தெரிகிறது. தமிழிசை அவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மாணவி சோபியா மீது புகார் அளித்து வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் தமிழிசை. சோபியா மீது பொது இடத்தில் இடையூறாக நடந்து கொண்டதாகக் கூறி IPC 290 கூடுதலாக தமிழ்நாடு சிட்டி போலீஸ் Act 1888-ன் கீழ்  section 75(1) போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

தமிழிசை சௌந்தர்ராஜனின் செயல் கண்டனத்துக்குரியது என தமிழக அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், கருத்து சுதந்திரம் பறிக்கப்படுவதாகவும் கண்டனங்கள் எழுகிறது.

சோபியா லோயிஸ் எழுத்தாளர் மற்றும் கனடாவில் கணித பிரிவில் ஆராய்ச்சி மேற்கோள்ளும் மாணவி. 28 வயதான மாணவி சோபியா தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் மற்றும் சேலம்-சென்னை பசுமை வழிச் சாலைக்கு எதிரான போராட்டங்களில் பங்கு பெற்றுள்ளார். கைதாகிய மாணவி சோபியாவை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எனினும், உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் சோபியாவிற்கு ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையில், சோபியாவின் தந்தை சாமி அவர்கள் காவல் துறையிடம் புகார் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில், “ சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும் விமானத்தில் சோபியா பாஜக ஆட்சி பற்றி கோஷம் எழுப்பினார். அப்பொழுது எதுவும் சொல்லாமல் விமான நிலைய வளாகத்தில் தமிழிசை சௌந்தர்ராஜனின் கட்சியை சேர்ந்தவர்கள் வழி மறித்து வெளியே போக விடாமல் தகாத வார்த்தைகளை கூறி மிரட்டினர். என் மனைவியையும், மகளையும் சட்டத்திற்கு புறம்பாக புகைப்படங்கள் எடுத்துள்ளனர். ஆக, அச்சுறுத்தல் இருப்பதால் நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையிடம் புகார் தெரிவித்து உள்ளார் “.

மாணவி சோபியாவின் வார்த்தைகளுக்கு பின்னால் ஓர் இயக்கம் உள்ளதாக என்றெல்லாம் கூறி பேட்டி அளித்துள்ளார் தமிழிசை. ஆனால், அவரின் ஆதரவாளர்கள் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளனர் என்று புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 “ அரசாங்கம் விமர்சிக்கப்படுவதை விரும்புகிறேன். விமர்சனம் ஜனநாயகத்தை வலிமையாக்கும் “ என்று இந்திய பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களே ட்விட்டர் பதிவில் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விமர்சனம், கருத்து சுதந்திரம் இந்தியாவில் பறிக்கப்படுவதாக கண்டனங்கள் எழுகிறது. பொது இடங்களில் ஒரு கட்சிக்கு ஆதரவாக கோஷமிடுவது எவ்விதத்தில் நியாயமோ.!! அதேபோன்று ஒருவருக்கு எதிராக கோஷமிடுவதும் நியாயம் தான் என சோபியாவிற்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சோபியாவிற்கு பின்னால் ஓர் இயக்கம் இருக்கக்கூடும் என்றெல்லாம் பொருத்தமற்ற குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளார் தமிழிசை சௌந்தர்ராஜன். தமிழிசை அவர்களின் இந்த விவகாரத்தால் பாஜக கட்சியின் பெயர் இந்திய அளவில் டாப் 5 ட்ரென்டிங்கில் உள்ளது.

Student Arrested For Shouting “Fascist BJP Government” On Plane Gets Bail

PM Modi tweet on criticism

BJP Twitter

 

Please complete the required fields.




Back to top button
loader