பிரபல பத்திரிகை செய்தியால் குழப்பம்!

காமராஜருக்கு மெரீனாவில் இடம் அளிக்க கருணாநிதி மறுத்தார் என மீண்டும் மீண்டும் வதந்திகள் சிலரால் பரப்பப்படுகிறது. மேலும், அதற்கு ஆதாரங்கள் இருப்பதாக THE Hindu ஆங்கில நாளிதழின் கட்டுரையை மேற்கோள்காட்டி பதிவிடுகின்றனர்.
கருணாநிதி காமராஜருக்கு மெரினாவில் நினைவகம் அமைக்க காங்கிரஸ் தரப்பில் கேட்டதாகவும் முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் பொது செயலாளர் பழ. நெடுமாறன் கண்ணதாசன் மற்றும் ஜெயகாந்தன் இந்த கோரிக்கையில் உறுதியாக இருந்ததாகவும் திண்டிவனம் ராமமூர்த்தி கூறியதாக ஆங்கில ஹிந்து பத்திரிகையில் செய்தி வந்திருந்தது.
காமராஜர் இறந்த தருணத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளராக இருந்த பழ.நெடுமாறன் அவர்கள் கூறியது , ” ஐயா காமராஜரின் உடலை தேனாம்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்திலேயே வைப்பதாக முடிவு செய்து இருந்தோம். ஆனால், கருணாநிதி அவர்கள் தாமாக முன்வந்து கிண்டியில் காமராஜரின் உடலை நல்லடக்கம் செய்வதாகவும், நிலம் வழங்குவதாகவும் கூறியுள்ளார். அவர்களும் அதை ஏற்றுக் கொண்டுள்ளனர் “. இவ்வாறு தி ஹிந்து பத்திரிகையின் தமிழ் நாளிதழில் வெளியாகி உள்ளது. மேலும், அன்றைய காங்கிரஸ் தரப்பில் எந்தவொரு கோரிக்கையும் முன்வைக்கப்படவில்லை என்பதே உண்மை. அதற்கான ஆதாரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மீண்டும் மீண்டும் வீண் வதந்தியை பரப்பி தேவையற்ற அரசியல் நாடகத்தை நிகழ்த்தப் பார்க்கிறார்கள்.
Realated news: காமராஜர் உடலை மெரீனாவில் புதைக்க மறுத்தாரா கருணாநிதி ?