முல்லைப்பெரியார் அணையில் விரிசல் இல்லை! வதந்திகளை நம்ப வேண்டாம்.

கேரளா மாநிலத்தில் இந்த நூற்றாண்டில் இப்போது  பெய்து வருகின்ற பருவ மழை பெரும் பாதிப்பையும் உயிர் சேதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இடுக்கி மற்றும் வயநாடு பகுதி மிகவும் மோசமான பாதிப்புகளை சந்தித்துள்ளது. பாலக்காடு, எர்ணாகுளம், மலப்புரம்,கோழிக்கோடு ஆகிய இடங்களும் மிகவும் பாதிப்படைந்துள்ளன.

Advertisement

பதினான்கு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டது. பிரதமருடன் கேரள முதல்வர் பினராயி விஜயன் தொடர்பு கொண்டு மீட்பு பணிக்காக ஹெலிகாப்டர் மற்றும் மத்திய படையை அனுப்ப கோரினார். இறப்பு எண்ணிக்கை  160-க்கும் அதிகமாக உயர்ந்தது. லட்சக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

கேரள அரசு தொலைதொடர்பு இணைப்பு இணைப்புகள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வி-சட் (V-SAT) தொடர்பு இணைப்புகளைப் பயன்படுத்துமாறு கூறியுள்ளது.

கேரள வெள்ள பாதிப்புகளில் காணாமல் போனவர்களை பற்றி அறியவும் விபரங்கள் பகிரவும் goo.gl/WxuUFp லிங்கை பயன்படுத்தலாம்.

முதல்வரின் நிவாரண நிதி கணக்கிற்கு பணம் செலுத்தி உதவலாம். பங்களிப்பை அளிக்க donation.cmdrf.kerala.gov.in எனும் தளத்திற்கு சென்று நன்கொடை படிவத்தை நிரப்பி email  மற்றும் தொலைபேசி எண் கொடுக்கவேண்டும் . நன்கொடையை debitcard, creditcard மற்றும் நெட் பேங்கிங்  மூலம் செலுத்தலாம்.

காசோலை/வரைவோலை அல்லது இன்டர்நெட் பாங்கிங் மூலம் அளிக்க:

Advertisement

The Principal Secretary (Finance) Treasurer,

Chief Minister’s Distress Relief Fund,

Secretariat,

Thiruvananthapuram – 695001

 

ஆன்லைன்  நன்கொடை அளிக்க :

கணக்கு எண் : 67319948232

வங்கி : State Bank of India

கிளை : City branch, Thiruvananthapuram

IFS Code: SBIN0070028

PAN: AAAGD0584M

நன்கொடை பெறுபவர் பெயர்: CMDRF 

இந்த மோசமான நிலைமையிலும் எப்போதும்  போல் புரளிகள்  பரவி மேலும் பயத்தை உண்டாக்கி  பதற்றமடைய செய்கிறார்கள். முல்லை பெரியாறு அணையில் விரிசல் விழுந்துள்ளதாகவும் அருகே இருக்கும் மக்களுக்கு ஆபத்து எனவும் வதந்தியை பரவ விட கேரள அரசாங்க செயலர் டிங்கு பிஸ்வால் அதனை மறுத்து அறிக்கை வெளியுட்டுள்ளார். சமூகவலைத்தளங்களில் முல்லை பெரியாறு அணையில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக பொய்யான செய்தியை பரப்பி தேவையில்லாத  பதற்றத்தை ஏற்படுத்துகிறார்கள்.  இதை உருவாக்கியவர் யார் என்பதை கண்டறிய சைபர் செல் இயக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். 

கேரளா முதல்வர் ட்விட்டர் பக்கத்தில் “தவறான தகவல்களை  பகிர்வதை தவிருங்கள். வாட்ஸ்அப்பிலும் சமூக வலைத்தளங்களிலும் புரளிகளும் பொய்யான செய்திகளும் சுற்றி வருகின்றன. அதிகாரபூர்வ  அறிவிப்புகளை கவனியுங்கள் . முதல்வரின்  பேஸ்புக் மற்றும் ட்விட்டர் , அமைச்சர்,  மாவட்ட ஆட்சியாளர்கள், கேரள  காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை ஆகியோரின் பக்கங்களை பின்தொடருங்கள் ” என பதிவிடப்பட்டுள்ளது.

தெரியாமல் பகிரும் ஒவ்வொரு செய்தியும் உயிர் போக காரணமாகலாம் என உணர்ந்து உண்மையான செய்தியை பகிருங்கள். பாதிக்கப்பட்ட மக்கள்  மீண்டு வர உதவுங்கள்.

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
Back to top button