ரபேல் ஒப்பந்தத்தில் அம்பானியை மட்டும் இந்திய அரசு பரிந்துரை செய்ததா ?

2007 ஆம் ஆண்டில் அப்போதைய ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு இந்திய ராணுவத்திற்காக புதிய போர் விமானங்களை வாங்க முடிவெடுத்தது. இதற்கான டெண்டரில் இரு விமானங்கள் தேர்வு செய்யப்பட்டன. டஸ்சால்ட் ஏவியேஷனின் ரபேல் ( Dassault aviation rafale) மற்றும் ஐரோஃபைட்டர் திபூன் ஆகியவை தேர்வு செய்யப்பட்டது. இதில், விலை குறைவாக நிர்ணயிக்கப்பட்ட ரபேல் ரக விமானங்கள் இறுதியாக முடிவு செய்யப்பட்டன. எனினும், ரபேல் விமானம் வாங்குவதில் விலை தொடர்பான பேச்சுவார்த்தையானது காங்கிரஸ் ஆட்சியில் முழுமையாகவில்லை.

Advertisement

2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடி தலைமையிலான அரசு 36 ரபேல் விமானங்களை வாங்குவதாக அறிவிப்பை வெளியிட்டது. ஆனால், முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் தொடரப்பட்ட ஒப்பந்ததில் 18 விமானங்கள் நேரடியாக பிரான்சில் இருந்து கொண்டு வரப்படும், 108 ரபேல் விமானங்கள் இந்தியாவில் கட்டமைக்கப்படும் என்றே இருந்தது. ஆனால், மோடி அரசு 36 விமானங்களையும் நேரடியாக பிரான்சில் இருந்து இறக்குமதி செய்ய தீர்மானித்துள்ளனர்.

ரபேல் ரக விமானங்கள் தொடர்பான விலை நிர்ணயிக்கப்பட்ட ஒப்பந்தமானது 2016-ல் கையெழுத்தாகியது. அதில், 36 விமானங்கள் ரூ.58,000 கோடிக்கு வாங்குவதாக இடம்பெற்றுள்ளது. அதாவது, ஒரு விமானம் ரூ.1600 கோடியாகும். காங்கிரஸ் ஆட்சியில் 126 விமானங்கள் 54,000 கோடிக்கு வாங்க நிர்ணயிக்கப்பட்டது எனவும், ஒரு விமானத்திற்கு ரூ.526 கோடி என பேச்சுவார்த்தை நடைபெற்றதாக காங்கிரஸ் தரப்பில் கூறப்படுகிறது.

ஆதலால், மத்திய பிஜேபி அரசு ரபேல் விமான ஒப்பந்தத்தில் ஊழல் செய்துள்ளதாக குற்றம்சாற்றியுள்ளார்கள். காங்கிரஸ் ஆட்சியில் ரபேல் விமானம் தொடர்பான இறுதி ஒப்பந்தம் ஏதும் மேற்கொள்ளவில்லை. ஆகையால், விலை பற்றி நிர்ணயிக்க முடியாது. காரணம் டஸ்சால்ட் நிறுவனத்திடம் இருந்து 18 விமானங்கள் மட்டுமே நேரடியாக வாங்கப்படும், மீதமுள்ள 108 விமானங்கள் டஸ்சால்ட் மற்றும் Hindustan aeronautic limited(HAL) உடன் இணைந்து இந்தியாவில் உருவாக்கப்படும் என கூறப்படுகிறது.

மத்திய அரசு ரபேல் ரக விமான ஒப்பந்தத்தில் இருக்கும் விலை வேறுபாடுகளுக்கு அதில் இடம்பெறும் “ Indian specific enhancement “ மட்டுமே காரணம் எனவும், ஆதலால் விமானத்தின் அடிப்படை விலை 670-க்கு இருமடங்காக உயர்ந்தது என பாராளுமன்ற தகவல்கள் தெரிவித்தன. ஆனால், 2015-ல் வெளியான இந்தியா பிரான்ஸ் இணைப்பு அறிக்கையில், “ விமானம், இணை அமைப்புகள் மற்றும் ஆயுதங்கள் அனைத்தும் இந்திய ஏர் ஃபோர்ஸ் ஆல் சோதித்து மற்றும் அனுமதி வழங்கிய பிறகு அதே கட்டமைப்புடன் வழங்கப்படும் என இடம்பெற்றுள்ளது “,

ரபேல் ரக விமான ஒப்பந்ததில் எவ்வித வெளிப்படை தன்மையோ அல்லது புரிதலோ இல்லை. காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கப்பட்ட பேச்சுவார்த்தை மற்றும் தற்போதைய அரசின் நிலை பற்றி தெளிவாக எடுத்துரைக்க முடியவில்லை. ரபேல் பற்றிய மேலும் பல தகவல்களை அரசு தரப்பில் இருந்து வெளியிட்டால் மட்டுமே கூடுதல் தகவல்கள் தெரிவிக்க முடியும்.

காங்கிரஸ் vs பாஜக :

Advertisement

 ரபேல் விமான ஒப்பந்தம் மூலம் மத்திய பிஜேபி அரசு பல ஆயிரம் கோடி ஊழல் செய்து இருப்பதாகவும், மக்கள் பணத்தை வீணடித்து உள்ளனர் என்றும் கடுமையான குற்றச்சாட்டுகளை கூறிக் கொண்டே உள்ளனர். மேலும், ரபேல் ஒப்பந்ததில் இந்திய நிறுவனமான Hindustan aeronautic limited(HAL)-ஐ சேர்க்காமல் அம்பானியின் ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனம் இணைக்கப்பட்டதற்கு கண்டனங்களை தெரிவித்தனர்.

இதற்கிடையில், செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், “ ரபேல் விமான தொடர்பான ஒப்பந்தத்தில் எந்தவித முறைகேடும் நிகழவில்லை, ஒப்பந்தம் வெளிப்படை தன்மையுடன் உள்ளது. இந்திய விமானப்படையின் தேவை கருதியே இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ரபேல் விமானம் வாங்குவது தொடர்பான ஒப்பந்தங்கள் ஏதும் இறுதி செய்யப்படவில்லை “ என தெரிவித்து இருந்தார்.

பிரஞ்சின் ஐரோப்பா மற்றும் வெளியுறவு துறை அமைச்சகம் ” இந்திய தொழில்துறை பங்குதாரர்களின் தேர்விலோ அல்லது பிரஞ்ச் நிறுவனங்களின் தேர்விலோ பிரஞ்ச் அரசாங்கம் தலையிடாது. பிரஞ்ச் நிறுவனங்களுக்கு இந்திய பங்குதார நிறுவனங்களை தேர்வு செய்ய முழு சுதந்திரம் உள்ளது.” என தெரிவித்துள்ளது

ரபேல் ரக விமானங்கள் தொடர்பான சர்ச்சைகள் முடியாத நிலையில் தற்பொழுது மீண்டும் ஓர் புதிய பரபரப்பான செய்தியை பிரான்ஸின் முன்னாள் அதிபர் ஹாலண்டே பத்திரிகையில் தெரிவித்து இருந்தார்.

ரபேல் ரக விமானத்தின் டஸ்சால்ட்(Dassault) நிறுவனத்துடனான கூட்டுத் தயாரிப்பில் இந்திய அரசு கைகாட்டிய நிறுவனத்தையே(அம்பானியின் “ ரிலையன்ஸ் டிபென்ஸ் “) எனது ஆட்சி காலத்தில் ஒப்பந்தத்தில் இணைக்கப்பட்டது. இதில் பிரான்ஸ் அரசு முடிவு செய்ய ஏதுமில்லை என முன்னாள் அதிபர் ஹாலண்டே தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி கடுமையாக மத்திய அரசை தாக்கி பேசி வருகிறார். மத்திய அரசு பெரு முதலாளிகளுக்காக செயல்படுவதாகவும், முன்னாள் அதிபர் ஹாலண்டேவுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும் ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். 

பிரான்சின் முன்னாள் அதிபர் ஹாலண்டேவின் பரபரப்பான பேச்சை அடுத்து இந்திய பாதுகாப்புத்துறையின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட ட்விட்டரில் “முன்னாள் அதிபர் ஹாலண்டேவின் கருத்து சரிபார்க்கப்பட்டு வருகிறது, வணிக  முடிவுகளில் இந்திய அரசோ அல்லது பிரெஞ்சு அரசோ எதுவும் கூற முடியாது என்பதை இது வலியுறுத்துகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ இந்தியாவின் ரபேல் ஒப்பந்தத்தில் “ மேக் இன் இந்தியா “ கொள்கையால் டஸ்சால்ட்(Dassault) ஏவியேஷன் நிறுவனம் இந்தியாவின் ரிலையன்ஸ் குழுமத்துடன் பங்குதாரராக முடிவு எடுத்தது. இது டஸ்சால்ட் விருப்பம் என டஸ்சால்ட் தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளது “   

ரபேல் விமான ஒப்பந்தம் தொடங்கியது முதலே விலையில் ஆரம்பித்த சர்ச்சை அதில் பங்குதாரராக செயல்பட உள்ள ரிலையன்ஸ் நிறுவனம் வரை சர்ச்சை நீண்டுக்கொண்டே செல்கிறது. ஆட்சி முடியும் நேரம் நெருங்கி விட்டது, ஆனால் சர்ச்சை முடிந்தபாடில்லை..!!! 

மோடி அரசாங்கம் ரபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் டிபென்ஸ்-ஐ டஸ்சால்ட் ஏவியேஷன் உடன் பங்குதாரர் ஆக்க கூறியதா ? 

முன்னாள் பிரான்ஸ் அதிபர் ஹாலண்டே கூறியது விளக்கம் விடைத் தெரியா கேள்விகள்.. 

India-France Joint Statement during the visit of Prime Minister to France (April 9-11, 2015)

How much did the Rafale actually cost?

in india, francois hollande invites himself in the rafale aircarft business

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button