This article is from Sep 16, 2018

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த நோயாளியை காப்பாற்றிய காவேரி மருத்துவமனை.!!

விஜயவாடாவைச் சேர்ந்த 60 வயதான சத்யநாராயணன் கொல்லா என்பருக்கு உயிருக்கே ஆபத்தான நிலையில் ஸ்டேன்ட் கிராஃப்ட் கொண்டு அயோர்டிக் அறுவை சிகிச்சை 2016 ஆம் ஆண்டில் நடைபெற்றது. இரண்டு ஆண்டுகள் கழித்து சில வாரங்களுக்கு முன்பாக அவரின் உடல்நிலை நலிவடைந்த காரணத்தினால் வருத்தமடைந்த குடும்பத்தினர் விஜயவாடாவில் உள்ள பல மருத்துவமனைகளை அணுகி உள்ளனர்.

சத்யநாராயணனுக்கு கசியும் பெருந்தமணி நாள நெளிவு காரணமாக சிறுநீரக செயலிழப்பு மற்றும் இரத்தம் இழப்பு ஏற்படுவதாக அறிய நேர்ந்தது. இவ்வகையான அயோர்டிக் நோய்களுக்கு சிகிச்சை வழங்கும் மருத்துவமனைகள் வெகு குறைவு.

அயோர்டிக் :

  அயோர்டா என்பது உடலில் இருக்கும் மிகப்பெரிய இரத்தநாளமான பெருந்தமணி ஆகும். இதயத்தில் இருந்து ஆக்சிஜனேற்றம் செய்யப்பட்ட இரத்தத்தினை உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் கொண்டு செல்வதே இதன் பணியாகும். அயோர்டிக் ஆன்யூரிசம் எனப்படும் அயோர்டாவின் சுவர்களில் வீக்கம் ஏற்படும் அல்லது அயோர்டாவின் குருக்குப்பகுதியில் கிழிசல் உண்டாகும் நிலை போன்ற பொதுவாக உருவாகும் நோய்களின் சிகிச்சையில் துளைப்பு தொழில்நுட்ப முறையே பின்பற்றப்படுகிறது.

சத்யநாராயணனுக்கு இதே நோய் என்பதால் அவருக்கு சிகிச்சை அளிப்பது பற்றி பெங்களூர், சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் அறுவை சிகிச்சை நிபுணர்களின் கருத்துகளை திரட்டியுள்ளனர் அவரின் குடும்பத்தினர். பல மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வழி இல்லையென அறிந்து இறுதியாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர்.

காவேரி மருத்துவமனையின் 24 மணிநேர அயோர்டிக் துறையில் CT ஸ்கேன் எடுக்கப்பட்டதில், மார்பு சுவற்றில் ஏறக்குறைய 10 செ,மீ அளவில் பெரிய அளவிலான நாள நெளிவு ஏற்பட்டுள்ளது என்றும், அதில் கசியத் துவங்கியதும் தெரிய வந்தது.

சத்யநாராயணனுக்கு நடைபெற்ற அறுவை சிகிச்சையில் மருத்துவக் குழுவில் இருந்த டாக்டர்.கோபால முருகன் ஆல் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட “ கேண்டிக் பிளக்கை  “ பயன்படுத்தி நாள நெளிவில் ஏற்பட்ட கசிவினை நிறுத்தும் வகையில் பொருத்தப்பட்டது. இதனால் இரத்த கசிவு நின்றது. சிகிச்சைக்கு பிறகு கண் விழித்தவர் ஒரு நாட்களில் நடக்க துவங்கினார்.

கேள்வி : அறுவை சிகிச்சை எப்பொழுது நடந்தது?

மருத்துவர் பதில் :செப்டம்பர் 7-ம் தேதி 16 பேர் கொண்ட மருத்துவக் குழு மற்றும் டெக்னிசியன்ஸ் ஒன்றிணைந்து நிகழ்த்தப்பட்டது.

கேள்வி : அயோர்டிக் நோயின் அறிகுறி என்ன ?

மருத்துவர் பதில் : முதுகு வலி, நெஞ்சு வலி போன்றவை.

கேள்வி : அயோர்டிக் எதனால் வருகிறது ?

மருத்துவர் பதில் :  பிறந்ததில் இருந்து வரலாம். நோய் தொற்றால், புகை பிடிக்கும் பழக்கத்தால், பாரம்பரிய இரத்த தொடர்பில் உள்ளவர்களுக்கு இருந்தால் கூட வர வாய்ப்பு உள்ளது.

கேள்வி : அறுவை சிகிச்சை செய்யப்பட்டவரின் உயிருக்கு ஆபத்து இல்லையே ?

மருத்துவர் பதில் : 75% உத்தரவு அளிக்கலாம். நலமாக உள்ளார். வருடம் ஒருமுறை அவரின் உடல்நிலை குறித்து கண்காணிக்கப்படும்.

கேள்வி : அறுவை சிகிச்சைக்கான மொத்த செலவு ?

மருத்துவர் பதில் :  உடலில் பொருத்தப்பட்ட கேண்டிக் பொருள் போன்றவை 8 லட்சம் மற்றும் மருத்துவமனை செலவு 3 லட்சம். இந்த அறுவை சிகிச்சைக்கான அரசு உதவிக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.   

சாவை நோக்கி பயணித்த ஒருவரை மீட்டு புது வாழ்வு அளிக்கப்பட்டது மகிழ்ச்சிகரமான ஒன்றாக உள்ளதாக என்கிறார்கள் மருத்துவர்கள்.

Please complete the required fields.




Back to top button
loader