This article is from Jul 09, 2018

குழந்தைகளின் ஆபாச படங்கள் & பாலியல் வன்புணர்வு வீடியோ குறித்து புகார் அளிக்க helpline..!

ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் குழந்தைகள் முதல் பல பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் படங்கள், பாலியல் வன்புணர்வு வீடியோக்கள் என பெண்களுக்கு எதிரான நடக்கும் கொடுமைகளை பற்றி புகார்கள் தெரிவிக்க helpline ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

Fake id மூலம் பெண்களை ஆபாசமாக காண்பிக்கும் பதிவுகள், ஆஃப், விளம்பரங்கள், வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் தவறாக சித்தரிக்கும் செயல் இன்றைய காலத்தில் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமின்றி, பாலியல் வன்புணர்வு செய்யப்படும் வீடியோக்களை கூட தைரியமாக இணையத்தில் பதிவு செய்யவும் துணிகிறார்கள். இது பெண்களுக்கு எதிரான குற்றங்களை அதிகரிக்க ஒரு காரணியாக அமையும். 

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஆன்லைன் மூலம் தவறான செயல்கள் அதிகம் நடைபெறுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. ஆன்லைன் மூலம் நடக்கும் தவறுகள் வெளி உலகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி நடைமுறையில் குற்றங்கள் அதிகம் நிகழ வழிவகுக்கிறது. நாட்டில் பாலியல் வன்புணர்வு வீடியோக்களை பணம் செலுத்தி பார்க்கும் அளவிற்கு கொடுமைகள் அரங்கேறி வருகிறது.

கடத்தலுக்கு எதிரான ஆர்வலர் சுனிதா கிருஷ்ணன் என்பவர் ஹைதராபாத்தில் NGO ஆக உள்ளார். இவர் 2015 பிப்ரவரியில் “ shame the rapist “ என்ற தலைப்பில் ஓர் பிரச்சாரத்தை மேற்கொண்டார். இதற்கு காரணம் தன் வாட்ஸ் ஆஃப்பிற்கே ஓர் பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யும் வீடியோ வந்ததை அடுத்து இது போன்ற வீடியோக்கள் பரவினால் குற்றங்கள் அதிகரிக்கக்கூடும் என எண்ணி பிரச்சாரத்தை மேற்கொண்டார். 

இவ்வாறான வீடியோக்கள், படங்கள் பற்றி புகார் அளிக்குமாறு சமூக வலைத்தளங்களில் பரப்புரை செய்தார். பிரச்சாரம் தொடங்கிய 24 மணி நேரத்தில் 9 வீடியோக்கள் கிடைத்தன. அவற்றை பற்றி இந்தியாவின் தலைமை நீதிபதிக்கு கடிதத்தில் தெரிவித்துள்ளார். இதையடுத்து நீதிபதி மதன் லோகூர், லலித் ஆகியோர் கொண்ட அமர்வு இணையத்தில் பரவும் பாலியல் வன்புணர்வு வீடியோக்கள் மற்றும் தவறான வீடியோக்கள் பற்றி நடவடிக்கை எடுக்க ஒரு குழுவை அமைக்க உத்தரவு விட்டது. இந்த குழுவின் மூலம் தொழில்நுட்ப ரீதியாக ஆன்லைன் தவறுகளை தடுக்கும் தீர்வை கண்டறிய முற்பட்டனர்.

உச்ச நீதிமன்றத்தின் முடிவை ஏற்றுக் கொண்டு 2017-ல் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அதுமட்டுமின்றி மத்திய அரசு, இணையத்தில் தவறான வீடியோக்களை பதிவு செய்வது குறித்த புகார்கள் தெரிவிக்க ஆன்லைன் போர்டல் மற்றும் அவசர உதவி எண்ணை அறிவிக்கவும் அறிவுறுத்தியது. 

மத்திய உள்துறை அமைச்சகம், குழந்தைகளை ஆபாசமாக காண்பிக்கும் படம், வீடியோ மற்றும் பாலியல் வன்புணர்வு போன்ற வீடியோக்கள் பற்றி புகார் அளிக்க “ ஆன்லைன் போர்டல் www.cyberpolice.gov.in மற்றும் helpline number 155260 தொடங்கியுள்ளனர் “

விளம்பரங்கள் முதல் பல விசயங்களில் பெண்கள் ஆபாசமாக காட்டப்படுவதால், சமூக வலைத்தளங்கள் உள்ளிட்டவற்றிலும் ஆபாசம் என்ற வார்த்தை மேலோங்கி வருகிறது. ஆபாச படங்கள் மக்கள் மத்தியில் தவறான எண்ணத்தை ஊக்குவிக்கிறது. இதனால், பெண்களுக்கு பாலியல் ரீதியாக கொடுமைகள் அதிகரிக்கின்றது. 

ஒரு பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்து அதை வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிடும் அளவிற்கு ஒரு குற்றத்தை தைரியமாக செய்யும் எண்ணம் உருவாகி விட்டது. அவற்றை ஆரம்பத்திலேயே தடுக்கவில்லை என்றால் நாட்டில் பாலியல் குற்றச் சம்பவங்கள் அதிகரிக்கக்கூடும். தொழில்நுட்ப ரீதியாக ஆபாச வீடியோக்கள் வலம் வருவதை தடுக்க தீவிர நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும்.

‘ அதிவேகமாக தொடர்பு கொள்ளவதற்காக உருவாக்கப்பட்ட சமூக வலைத்தளங்கள் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சமூகத்தை உருவாக்கும் காரணிகளில் ஒன்றாக மாறுகிறது என்பது வேதனையான ஒன்று “.

Please complete the required fields.




Back to top button
loader