This article is from Sep 16, 2018

கேரளா கன்னியாஸ்திரியை வன்கொடுமை செய்த பிஷப்..!!

கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தரில் உள்ள பிஷப்பாக இருக்கும் கிறிஸ்தவ தேவாலய பாதிரியார் ஃபிராங்கோ மூலக்கல் என்பவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு ஒன்றை அளித்துள்ளார்.

2014 முதல் 2016 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கேரளாவின் கோட்டயத்தில் உள்ள குருவிலங்காடு பகுதியில் இயங்கி வரும் கான்வென்ட்டில் தங்கி இருந்த கன்னியாஸ்திரியை தொடர்ந்து 13 முறை பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக கன்னியாஸ்திரியின் சகோதரர் பிஷப் மீது புகார் பதிவு செய்தார். 

புகார் பதிவு செய்து 75 நாட்கள் கடந்து பிஷப் ஃபிராங்கோ மூலக்கல் மீது கைது உள்ளிட்ட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் கான்வென்ட்டில் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி உடன் இருக்கும் மற்ற கன்னியாஸ்திரிகள் பிஷப்க்கு எதிராக நடவடிக்கை எடுக்க கேரளாவில் பொது இடம் ஒன்றில்  போராட்டம் நடத்தினர். கன்னியாஸ்திரிகளின் போராட்டத்தால் நாடு முழுவதும் இச்செய்தி பரவி மாநில அரசு மற்றும் போலீஸ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.  

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு எதற்காக புகார் அளிக்கப்பட்டது என்று பல்வேறு கேள்விகள் எழுகிறது. ஆனால், கடந்த ஆண்டே கான்வென்ட்டின் உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் அங்கு நடந்த அநீதி பற்றி தெரிவித்ததாகவும், சமீபத்தில் தான் ஜலந்தர் டியோசெஸ் பிரநிதிகள் அவர்களை சந்தித்து கலந்துரையாடல் செய்ததாக கன்னியாஸ்திரி குடும்பத்தினர் ஊடகங்களில் தெரிவித்து உள்ளனர்.

ஜலந்தர் பிஷப் மீதான வன்கொடுமை வழக்கை கன்னியாஸ்திரி குடும்பத்தினர் திரும்ப பெறக் கூறி பணம் தருவதாகவும், மிரட்டப்படுவதாகவும் அவருக்கு ஆதரவாக ஆஜராகியிருந்த வழக்கறிஞர் தெரிவித்து இருந்தார்.

கன்னியாஸ்திரிக்கு வன்கொடுமை நடந்ததாகக் கூறிய இடத்தில் தடவியல் துறையினர் நடத்திய சோதனையில் பாலியல் வன்கொடுமை நடந்ததற்கான திடமான ஆதாரங்கள் ஏதும் கிடைக்கவில்லை. சம்பவம் நடந்து 2 வருடங்கள் ஆகியதால் தடயம் கிடைக்க சிக்கல் இருப்பதாக போலீஸ் தரப்பின் இரு மாதங்களுக்கு முன்பான அறிக்கை தெரிவித்தது

கன்னியாஸ்திரியை ஃபிராங்கோ மூலக்கல் பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான வழக்கில் பல்வேறு இடங்களில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஃபிராங்கோ மூலக்கல்-யிடம் விசாரணை நடந்தப்படுகிறது. சாட்சியங்கள், ஆதாரங்கள் என போலீஸ் விசாரித்து அறிக்கை சமர்பிக்க வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பான குற்றச்செயலில் ஆதாரங்களை கண்டுபிடிப்பதில் சிரமம் உள்ளதால் அவசரமாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. பிஷப்பை எப்பொழுது கைது செய்ய வேண்டும் என்பதை கேரள போலீஸ் முடிவு எடுக்கும் என நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.

பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கிய ஃபிராங்கோ மூலக்கல் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தேவாலய நிர்வாக பொறுப்புகளில் இருந்து பதவி விலகி உள்ளதாகவும், எனினும் பிஷப் ஆக பதவி தொடர்வார் எனவும் கூறப்படுகிறது. இதனை கன்னியாஸ்திரிகள் வரவேற்பதாக தெரிவித்துள்ளனர்.

கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமைக்கு காரணமான ஃபிராங்கோ மூலக்கல்க்கு எதிராக கேரள திரைத்துறையினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்தும், போராடியும் வருகிறார்கள்.

சில மாதங்களுக்கு முன்பு கேரளா தேவாலய பாதிரியார்கள் சிலர் பவ மன்னிப்பு கேட்க வந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நிகழ்வு பெரிதாக கண்டனங்களை பெற்றது. தற்போது மீண்டும் கிறிஸ்தவ தேவாலய பாதிரியார் பாலியல் வழக்கில் சிக்கியது கேரளாவில் தொடர்ச்சியாக நடைபெறும் வன்கொடுமை சம்பவங்களை பிரதிபலிக்கிறது. 

Rape accused Jalandhar Bishop Franco Mulakkal hands over charge to junior

Kerala nun rape: Bishop Mulakkal to appear before probe team

Kerala police to quiz Jalandhar Bishop after nun’s statement

Please complete the required fields.




Back to top button
loader