This article is from Aug 20, 2018

கேரள முகாமிற்கு காண்டம் கொடுக்கலாமா என கேட்டவர்..! அதிரடியாக வேலையில் இருந்து நீக்கிய ஓமன் நிறுவனம்.

கேரளாவில் கனமழை, வெள்ளத்தால் பல மாவட்டங்கள் பாதிப்பை கண்டன, லட்சக்கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ரூ.19,500 கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டு இருப்பதாகவும், 7 லட்சம் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்படுள்ளதாகவும் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்து இருந்தார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை தன்னார்வு அமைப்புகள், பிற மாநில அரசுகள், வெளிநாட்டு வாழ் மக்கள் என பலரும் செய்து வருகின்றனர். இதில், இணையதளத்தின் மூலம் உதவிகள் கோரப்பட்டு வந்தன. 

 

இந்நிலையில், ஃபேஸ்புக் பக்கத்தில் நிவாரண முகாம்களில் இருப்பவர்களுக்கு சானிடரி நாப்கின்ஸ் தேவை என்று கூறியதற்கு கீழே கமெண்ட்டில் “ மக்களுக்கு காண்டம் தேவையா ? “ என்று மலையாள மொழியில் பதிவிட்டவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்தது அவர் வேலை பார்க்கும் நிறுவனம்.

கேரளாவைச் சேர்ந்த Rahul cheru palayattu என்பவர் ஒமெனில் இருக்கும் bousher-ல் உள்ள லுலு ஹைபர் மார்க்கெட்டில் கேஷியர் ஆக பணிபுரிந்து வந்துள்ளார். தனது சொந்த தேசத்து மக்கள் வெள்ளத்தில் சிக்கிய நேரத்தில் உணர்வற்ற முறையில் தவறான கமெண்ட்டை சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். 

அவரின் கமெண்ட்டை அதிகளவில் யாரும் கவனிக்கவில்லை என்றாலும், அவர் பணிபுரியும் நிறுவனத்திற்கு தெரிந்து உள்ளது. ஆகையால், உடனடியாக பணியில் இருந்து நீக்கியுள்ளனர். மேலும், இறுதியாக செட்டில்மென்ட் தொகையை பெற்று கொள்ளுமாறு நிர்வாகம் அறிவுறுத்திவிட்டனர்.

இதன்பின் ஃபேஸ்புக் பக்கத்தில் லைவ் செய்த ராகுல் “ கேரளா மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும், என்னுடைய முட்டாள் தனத்தால் இது நடந்துள்ளது. அனைவரும் என்னை மன்னிக்க வேண்டுகிறேன் என்று கூறினார். மேலும், குடித்து இருந்ததால் அவ்வாறு செய்ததாகவும், அதனால் தன்னுடைய வேலையை இழந்து விட்டேன். இனி இதுபோல் நடக்காது “ என்று தெரிவித்து இருந்தார்.

தன் நாட்டு மக்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதை உணராமல் குடிப் போதையில் இருந்த ராகுல் கேலி செய்ததால் வேலையை இழந்து உள்ளார். உதவ மனமில்லை என்றாலும் உதவி புரிபவர்களை கேலி செய்யும் இவர்களை போன்ற மடையர்களுக்கு சரியான தண்டனையை வழங்கியது ஓமன் நிறுவனம்.   

 

Kerala man loses job in Oman for poking fun at plight of flood victims

Please complete the required fields.




Back to top button
loader