This article is from Sep 30, 2018

சிறுமிகளின் வன்கொடுமை சம்பவங்கள்: பிரதமரின் கருத்தும், வதந்தியும்..!

கதுவா மற்றும் உன்னாவ் சிறுமிகளின் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சின்னச்சிறு குழந்தைகளுக்கு கூட அதிகளவில் பாலியல் வன்கொடுமைகள் இழைக்கப்படுவது பேரதிர்ச்சியை உண்டாகி வருகிறது. இவ்விரு கொடூர சம்பவத்தில் உன்னாவ் பெண் பலாத்கார சம்பவத்தில் பாஜக எம்.எல்ஏ நேரடியாக சம்பந்தப்பட்ட போதிலும் இதுநாள்வரை பிரதமர் மோடி எத்தகைய கருத்தையும் கூறாமல் மௌனம் சாதித்து வந்தார்.

இந்நிலையில், ஏப்ரல் 13-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் அம்பேத்கர் தேசிய நினைவரங்கத்தை திறந்து வைத்தார். அந்த நிகழ்ச்சியில் எதிர்கட்சிகள் முதல் பலரும் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் தன் மௌனத்தை களைத்து பேசியுள்ளார் மோடி.

“ கடந்த இரு நாட்களாக நிகழ்ந்த சம்பவங்கள் மேம்பட்ட சமூகத்திற்கு ஒரு சங்கடம். எந்த ஒரு குற்றவாளியும் தப்பிக்க முடியாது, முழுமையான நீதி வழங்கப்படும். அந்த மகள்களுக்கு நியாயமான நீதி கிடைக்கும். நாம் அனைவரும் தற்போது உள்ள இந்த சிக்கலை சரி செய்ய வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் இருக்க மாட்டார்கள் ” என்று கூறியுள்ளார். 

ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளத்தில் அதிவேகமாக செயல்பட்டு வரும் பிரதமர் மோடி அவர்கள் சிறுமிகளின் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் மட்டும் இத்தனை தினங்களுக்கு பிறகு வருத்தம் தெரிவித்து கருத்து கூறியதற்கும் பல எதிர்ப்புகள் எழுந்துள்ளன. எனினும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் புரியும் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும் என்று கூறியதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பாரதப் பிரதமர் சிறுமிகளுக்கு நீதி கிடைக்கும் என்று கருத்து கூறிய போதிலும், அதற்கு முன்பாக பாஜகவை சேர்ந்த தலைவர் ஒருவர் கூறிய கருத்துக்கள் சர்ச்சையை கிளம்பி உள்ளது. 

ம.பி பாஜக தலைவர் சர்ச்சை கருத்து : 

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்தியப்பிரதேச பாஜக தலைவர் நந்தக்குமார் சிங் சவுக்கான், “ காஷ்மீர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவர்கள் ஜெய் ஸ்ரீராம் என்று கூறியிருந்தால், அவர்கள் அனைவரும் பாகிஸ்தான் நாட்டின் கைக்கூலிகள்தான்.

ஏனென்றால் காஷ்மீரில் 1 சதவீதம் மட்டுமே ஹிந்துகள் உள்ளனர். அவர்களால் எவ்வாறு வாய் திறக்க முடியும். ஆக, இதற்கு பின்னால் பாகிஸ்தான் ஏஜெண்டுகள் உள்ளனர். இருப்பினும், இந்த சம்பவங்கள் மனிதநேயத்தின் மீது படிந்த கறை” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் நிகழும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களுக்கு பாகிஸ்தான் காரணம் என்று பாஜக தலைவர் கூறியதற்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.

ஆஷிஃபா சிறுமியை கொன்றது முஸ்லீம் இளைஞன்:

 கதுவா பகுதியில் இறந்த ஆஷிஃபா அப்பாவி சிறுமி தான். ஆனால், அச்சிறுமியை வன்கொடுமை செய்து கொன்றது இஸ்லாமிய பயங்கரவாதி, பழி யார் மீது? ஆர்.எஸ்.எஸ் அமைப்பை களங்கப்படுத்தவே இதுபோன்ற தவறான செய்திகளை பரப்புகின்றனர் என்ற ஒரு ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். ஆனால், அதில் காட்டபட்டவரின் புகைப்படம் காஷ்மீரில் நிகழ்ந்த மற்றொரு சம்பவம் தொடர்பானது என்பதே உண்மை. 

ஆஷிஃபா சிறுமி வன்கொடுமைக்குள்ளாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் நிகழ்ந்த அடுத்த ஒரு மாதத்தில் காஷ்மீரின் பஜல்டா பகுதியில் மட்ராசா இடத்தில் 7 வயது நாடோடி இனச் சிறுமியை பலாத்காரம் செய்த moulvi Shahnawaz என்ற முஸ்லீம் மதக்குரு கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட சிறுமி Nagrota primary health centre-யில் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

சிறுமியை பலாத்காரம் செய்தவரை கண்டுப்பிடிக்குமாறு Nagrota காவல் நிலையத்தில் புகார் அளிக்கபட்டது. இதையடுத்து, சிறுமியை பலாத்காரம் செய்த மட்ராசாவின் ஆசிரியர் moulvi Shahnawaz என்பவரை கைது செய்து எப்ஃஐஆர் பதிவு செய்யப்பட்டது. காஷ்மீரில் தொடர்ந்து நாடோடி இனச் சிறுமிகளுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமைகள் வேதனை அளிப்பதோடு, பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பின்மை குறித்து அச்சம் ஏற்படுத்துகிறது. ஆனால், ஒரு சிலர் வதந்தியின் மூலம் குற்றவாளிகளை நல்லவர்கள் போல் காட்ட முனைகின்றனர்.

ஹிந்து, முஸ்லீம், கிறிஸ்தவன் என்ற மத உணர்வை குழந்தைகளை வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்யும் மிருகங்களுக்கு ஆதரவாக பயன்படுத்தும் ஒரு சிலருக்கு கூறுவது என்னவென்றால், பெண்களை வன்கொடுமை செய்பவர்கள் மட்டுமல்ல அவர்களுக்கு ஆதரவு அளிப்பவர்களும் தண்டிக்கப்பட வேண்டிய மிருகங்கள்.

இந்தியாவில் பல பகுதிகளில் இந்து பெண்களை முஸ்லீம் இளைஞர்கள் கூட்டாக வன்புணர்வு செய்து எரித்த சம்பவங்கள் நடப்பதாகவும், முஸ்லீம் இன சிறுமிக்கு மட்டும் பெரியளவில் நீதி கேட்பதாகவும், இந்து பெண்களுக்கு ஏன் கேட்கவில்லை என்ற கேள்வி சமூக வலைத்தளத்தில் எழுகிறது. இந்தியாவில் அநீதியில் சிக்கி தவிக்கும் பெண்கள் அனைவரும் பெண்களே அவர்கள் எந்த மதம் என்று யாரும் பார்ப்பதில்லை. பெண்களுக்கு எதிராக அநீதி இழைக்கப்பட்டால், அது யாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்டனை பெற்று தருவது சமூகத்தின் தலையாயக் கடமை. 

 

Rapist Moulvi taken to nagorta PHC 

modi statement on Kathua and unnao rape case 

MP bjp chief sees pak hand in kathua rape case 

Please complete the required fields.




Back to top button
loader