This article is from Dec 28, 2017

சென்னை மீம்ஸ் விவசாயிகள் பெயரில் வாங்கிய பணம் என்ன ஆனது.. சர்ச்சையும் விடையும்..

இது சற்று பெரிய கதை தான். ஆனால் மிகப் பொறுமையாகப் படித்து தெரிந்துக் கொள்ள வேண்டுகிறேன்.

எல்லாக் கதைகளுக்கும் ஒரு முன்கதை உண்டு என்பார்கள். இந்த பெரிய ஊழல் கதைக்கு முன் ஒரு குட்டி ஊழல் கதை உண்டு. வயதான பெண்மணி ஒருவர் படத்தைப் போட்டு இந்த பாட்டி ஒரு அப்ஸ் செய்திருக்கிறார் என்று சென்னை மீம்ஸ் ஒரு மீம் போட்டது. அதை பொய் என்று நாம் நிரூபிக்க அதை அவர்கள் பக்கத்தில் இருந்து நீக்கி விட்டனர். இப்போது எதுக்குடா இந்த கதையை சொல்கிறேன் என்று உங்களுக்கு தோன்றலாம்.

இந்த பதிவையும், ஏற்பட்ட சர்ச்சையையும் பார்த்து விட்டு தான் சென்னை மீம்ஸின் அட்மின் திரு.சத்திய நாதன் எங்களைத் தொடர்புக் கொண்டார். என்னிடம் பேசிய சத்திய நாதன், மிகத் தவறாக சென்னை மீம்ஸ் செயல்பட்டு வருகின்றது என்றும், விவசாயிகள் பெயரைச் சொல்லி பெறப்பட்ட பணம் முறையாக சென்றடையவில்லை என்றும் குற்றம்சாட்டினார். Edudharma மூலம் fund raising செய்தனர் . FUNDS வந்தடைந்த பின் என்னை உடனடியாக பக்கத்தில் இருந்து நீக்கி விட்டனர் என்றும் தகவல் தெரிவித்தார். மேலும், இந்த பணத்தை முறையாக சேர்த்தீர்களா என்று கேட்டதிற்கும் சரியான பதில் அளிக்கவில்லை. அவர்களை எதிர்த்து நீங்கள் கேள்வி எழுப்பியிருப்பதால் இதையும் நீங்கள் கேட்க வேண்டும் என்றார். Edudharma இதில் சம்பந்தப்பட்டிருப்பதால் தனிப்பட்ட முறையில் அவர்களை தெரியும் என்பதால் அதில் ஒருவரை அழைத்து ஏற்கனவே சென்னை மீம்ஸ் மீது பலரும் குற்றம் சுமத்தி வருகின்றனர். அவர்களோடு நீங்களும் இயங்குகிறீர்கள். இப்போது பத்திரிகையாளர்கள் சிலரும் இந்த விவசாயிகள் பெயரைச் சொல்லி வாங்கிய பணம் முறையாக சேரவில்லை என்று சர்ச்சையை கிளப்புகிறார்கள். உங்கள் மீது தவறு என்றால் சரி செய்து கொள்ளுங்கள். ஒருவேளை சென்னை மீம்ஸ் தவறு செய்திருந்தால் அதை பொது வெளியில் சொல்வதும் உங்கள் கடமை. நல்லபடியாக வளர்ந்து வருகிறீர்கள். வீணாக பெயரைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தினேன். இந்த தகவல் Edudharma பாலாஜிக்கு சென்று அவர் மூலம் திரு.குணா சென்னை மீம்ஸ் என்னைத் தொடர்புக் கொண்டார். வேலையாக இருந்ததால் சிறிது நேரத்தில் மீண்டும் அழைத்தேன். சென்னை மீம்ஸ் செய்வது சரியில்லை என்றும், இந்த நிதி தவறாக கையாளப்பட்டது என்றும், அதில் 70,000 பணம் என்ன ஆனது என்றும் தெரியவில்லை. கேள்வி எழுப்பினால் முறையாக பதில் இல்லை, எங்களை நீக்கிவிட்டார்கள் என்றும் அவரே தானாக முன் வந்து சொன்னார். எல்லாம் தெரிந்தும் நீங்களும், Edudharma-வும் அமைதியாக இருப்பது ஏன் என்று கேட்டேன். இதற்கெல்லாம் காரணம் CO-FOUNDER பரத் என்றார். இலங்கை தமிழர்களை திட்டிவிட்டதாகக் கூறி அவரை நீக்கிவிட்டார்கள் என்று படித்த நியாபகம் இருக்கிறது என்று கேட்டேன். அதெல்லாம் பொய் அவரையெல்லாம் நீக்க முடியாது என்று கூறினார் குணா. அனேகமாக இது ஆகஸ்ட் மாதம் நடந்ததாக இருக்கக்கூடும்.

இதை அப்போதே நமது பக்கத்தில் எழுதாமல், அதே நேரத்தில் சரி செய்து கொள்ளுங்கள், நடவடிக்கை எடுங்கள் என்று Edudharma, சென்னை மீம்ஸ்க்கு தகவல் சொல்லப்பட்டது.

நேற்று பொதுவெளியில் SHARE FOR FARMERS பக்கத்திலேயே இது ஒரு scam என்று எழுதப்பட்டதால் அது உண்மையா பொய்யா என்று தீர்மானிக்காமல், குற்றச்சாட்டு எழுந்துள்ளது பொதுமக்கள் பணம், ஆதலால் கணக்குகளை பொதுமக்களிடம் ஒப்படைப்பது தான் சரி என்று கருத்தை மட்டுமே கூறி இருந்தோம்.

பின் initiated by என்று சென்னை மீம்ஸ், My Indian start up, edudharma சேர்ந்து ஆரம்பித்து இதை PROMOTION செய்துக் கொண்டு இருந்தனர். சென்னை மீம்ஸ் அட்மின் குழுவில் Edudharma-வுடைய பாலாஜியும் இருந்திருக்கிறார். Initiative செய்ததும், promotion செய்ததும் இந்த மூன்று பேருக்கும் தெரிந்தே நடத்திருக்கிறது. ஆனால், Edudharma founder திரு.பத்பநாபன் கோபாலன் நாங்கள் வெறும் crowd funding platform. எங்களுக்கு வரும் பணத்தை அந்தந்த நபர்களிடம் ஒப்படைத்து விட்டு விலகி விடுவோம். அவர்கள் தான் அதைப் பற்றி பொறுப்பு எடுத்துக் கொள்ள முடியும் என்கிறார். Initiate செய்திருக்கிறார், promotion செய்திருக்கிறார், அவர்களிடம் பணத்தை ஒப்படைக்கவும் செய்திருக்கிறார். ஆனால், அது ஒரு பிரைவேட் லிமிடெட் கம்பெனி அக்கன்வுன்டுக்கு அனுப்பிருக்கிறார்.

 

  1. ரூபாய்  6,52,65,000 இலக்காக வைத்து fund raising தொடங்கி இருக்கிறீர்கள். அதில் 4.43 லட்சம் உங்களிடம் வந்து சேர்ந்துள்ளது. நீங்கள் அவர்களுக்கு அனுப்பியது 4,17,618 ரூபாய். இப்படி ஒரு பெரிய தொகையை இலக்காகக் கொண்டு செயல்பட்ட நீங்கள் நாங்கள் வெறும் crowd funding platform என்று நழுவிக் கொள்ள காரணம் என்ன.
  2. உங்கள் நிறுவனம் உட்பட மூன்று நிறுவனங்கள் இதை initiate செய்வதாக அதிகாரபூர்வமாக உங்களது பக்கத்திலேயே லோகோவுடன் கூறி உள்ளீர்கள். ஒரு initiator நாங்கள் ஒரு platform மட்டுமே என்று கூறுவது எப்படி.
  3. Mad over memes(Chennai memes) என்கிற ஒரு விளம்பர நிறுவனத்திற்கு உங்கள் பணத்தை அனுப்பியது ஏன்?
  4. initiate செய்து, promotion செய்து பணத்தைப் பெற்று அதை ஒரு பிரைவேட் கம்பெனியிடம் கொடுத்து விட்டு இன்று அவனைத்தான் கேட்க வேண்டும் என்று கூறுவது, உங்களை நம்பி உங்கள் முகத்தை நம்பி பணம் தந்தவர்களுக்கு எப்படி இருக்கும்.
  5. நீங்கள் ஐந்தாவது மாதம் transfer செய்திருக்கிறீர்கள். இன்று 12 வது மாதம். இன்று வரை பயனாளிகளுக்கு ஏதும் சென்றடையவில்லை. இதைப் பற்றி பொது வெளியில் கேள்வி கேட்டீர்களா?. என்ற கேள்விகள் எல்லாம் Edudharma மனதிற்கு கேட்டு பதில் தரட்டும்.

சத்தியநாதன், ஸ்ரீ கணேஷ் தனி தனியே தொடர்புக் கொண்டு funds முறையாக சேரவில்லை என்றும், கேள்வி கேட்டதுக்கு எங்களை அட்மினில் இருந்து நீக்கிவிட்டனர் என்றும் கூறினார்கள். குணா நான் வெளியே வந்து விட்டேன் அங்கு பணம் கையாடல் நடந்தது உண்மைதான் என்கிறார். நேற்று நாம் கேள்வி எழுப்பிய பிறகு Edudharma, சென்னை மீம்ஸ் ஒரு letter pad காண்பித்து 12 மாடுகளை வழங்குவதற்கு இன்னொரு NGO-வை சேர்த்திருப்பதாக கூறியுள்ளார். அந்த NGO நிறுவனர் வெற்றிவேல் தனக்கு வெறும் 30,000 தான் தந்திருக்கிறார்கள் என்று சொன்ன பின்பு அந்த ஆதாரங்களை எல்லாம் விட்டு விட்டு வெற்றிவேல் மிரட்டப்பட்டிருக்கிறார் என்றும், அவரை மிரட்டியது நான் தான் என்றும் நேற்று சென்னை மீம்ஸில் குணா live செய்திருந்தார். ஆனால், முழுமையான பணத்தை அவர்களுக்கு தரவில்லை என்பதையும் அந்த வீடியோவில் சொல்கிறார். ஒரு தேதி இடாத பணத்தையும் குறிப்பிடாத ஒரு letter pad-ஐ நம்மிடம் ஆதாரமாக காட்டுகிறார்கள். அதில் 12 மாடுகள் முதல் தவணையாக கொடுக்கப்படுகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த letter pad-லும் சென்னை மீம்ஸ் தன்னை associated by என்றே காட்டிக் கொள்கிறது.

முதலில் அவர் பேசிய audio என்னிடம் உள்ளது என்று தெரிந்து கொண்டு, இன்று குணா என்னிடம் தொடர்புக் கொண்டு scam நடந்தது என்று நான் உங்களிடம் கூறியது உண்மைதான், சென்னை மீம்ஸ் எங்களிடம் சரியான தகவல் அளிக்கவில்லை என்றும், அலைபேசியை எடுக்கவில்லை என்றும் கூறியிருந்தேன். இது பற்றி நான் மீண்டும் சென்னை மீம்ஸில் live செய்கிறேன். அந்த பணம் மொத்தமும் எங்களிடம் இருக்கிறது. அதை முறையாக பயனாளிகளிடம் சென்றடையும்படி பார்த்துக் கொள்கிறேன். அதை நீங்களும் கண்காணிக்கும்படி கேட்டுக் கொண்டார். எது எப்படியோ YOUTURN நிறுவனமோ இல்லை நானோ இதில் தலையிட விரும்பவில்லை. பொது நபர்கள், வேறு சில பக்கங்களின் அட்மின்கள் போன்றவர்களை சேர்த்து கொண்டு முறையாக பணத்தை சேர்பித்து விடுங்கள் என்று கூறினேன். அது தொடர்பாக சென்னை மீம்ஸில் அவர் பேசிய வீடியோ : Chennai Memes Admin confession

6.5 கோடி இலக்காக கொண்டு நிதித் திரட்டப்பட்ட நிலையில், எங்களிடம் data இல்லை, பயனாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை என்றல்லாம் கூறுகிறார்கள்.

12 மாடுகளையும், 12 ஏழை விவசாயிகளையும் கண்டுபிடிக்க ஏழு மாதங்கள் ஆகியும் முடியவில்லை என்று கூறுவது ஏற்கக்கூடியதா. இப்படி எந்த அடிப்படை தகவலுமே இல்லாமல் எப்படி இவ்வளவு பெரிய தொகையை இலக்காக கொண்டு தொடங்கினீர்கள். இவர்களை நம்பி எதுதர்மா எப்படி பணத்தை ஒப்படைத்தது.

தனிப்பட்ட முறையில் எனக்கு தெரிந்த வரை Edudharma-வுடைய செயல்பாடு சரியாகவே இருந்திருக்கிறது. இதில் எப்படி சருக்கினார்களோ தெரியவில்லை. கையைத் தூக்கி இதுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்று தப்பித்து கொள்வது ஆச்சரியமாகவே உள்ளது. பணத்தை சரியாக சேர்த்து விடுவதாக சென்னை மீம்ஸ் பக்கத்தில் குணா வாக்களித்திருக்கிறார். அதை அப்படியே செய்ய வேண்டும் என்று நாங்களும் நினைக்கிறோம்.

அவர்களே பணம் இன்னும் அவர்களிடம் இருக்கிறது என்றும் , சரியாக சேர்ப்பேன் என்றும் , நடந்த தவறை live யில் ஏற்று சரி செய்வதாய் சொன்னதால். நாகரீகம் கருதி audio வெளியிடவில்லை. அவர் மறுப்பு வீடியோ லிங்க் மட்டும் கொடுத்து உள்ளோம்.

மாதம் 30000 பெற்றுக்கொண்டு தான் Chennai Memes Edudharma உடைய பதிவுகளை பரப்புகிறார்கள் என்று சொல்கிறார் பாலாஜி . ஒரு Medical emergency பதிவுக்கும் பணம் பெற்று தான் செய்வார்களா ? பண வெறி அல்லவா ? உதவி செய்வதற்கு மனம் வேண்டுமா பணம் வேண்டுமா ? இவர்களோடு சேர்ந்து இயங்கி இருக்க வேண்டுமா ? என்று யோசித்துக் கொள்ளுங்கள் .

மேலும் இந்த கேள்வியை முதலில் எழுப்பிய பக்கம் இது வே அதில் பல ஆதாரங்களையும் பதிவிட்டு வருகிறார் திரு.சத்திய நாதன் .லிங்க் கீழே

 லிங்கை தொடவும்….. ​​​

– ஐயன் கார்த்திகேயன் ,
You Turn.

இதன் தொடர்ச்சிக்கு: சென்னை மீம்ஸ் மற்றும் edudharma சர்ச்சையும், வேலைக்காரன் படம் பாணியில் கார்ப்ரேட் தந்திரமும்….

Please complete the required fields.




Back to top button
loader