This article is from Oct 02, 2018

திருமண உறவிற்கு வெளியேயான பாலியல் உறவு குற்றமில்லை: உச்ச நீதிமன்றம்.

இந்திய சட்டப்பிரிவு 497 ஆனது திருமணமான பெண் ஒருவர் வேறு ஒரு ஆணுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்டால் அதில் ஆணிற்கு மட்டும் தண்டனை விதிக்கும்படி இப்பிரிவு வழி வகுக்கிறது. இதன்படி, குற்ற சுமத்தப்பட்ட ஆணிற்கு 5 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இவ்விரண்டும் விதிக்கப்படும். இதையே சிஆர்பிசி 198 பிரிவும் வலியுறுத்துகிறது.

இத்தகைய சட்டத்தில் ஆணிற்கு மட்டும் தண்டனை வழங்குவது ஆண்-பெண் பாலின பாகுபாடு காட்டப்படுவதாக கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்தனர். அந்த வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமித் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று(27-ம் தேதி) தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

கடந்த 150 வருட வரலாற்றில் திருமண உறவிற்கு வெளியேயான பாலியல் உறவு தொடர்பாக பல வழக்குகளை சந்தித்துள்ளது. திருமணமான பெண் வேறு ஒரு ஆணுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்டால் அது திருமணம் எனும் புனிதத்தை சீர்குலைக்கும் என்பது மத்திய அரசின் சார்பில் வைக்கப்பட்ட வாதமாகும்.

திருமணமான ஆண் ஒருவர் வேறு ஒரு பெண்ணுடனோ அல்லது திருமணமான பெண் கணவர் அல்லாத வேறு ஒரு ஆணுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்வது தொடர்பான வழக்கில் ஆணிற்கு மட்டுமே தண்டனை விதிப்பது மற்றும் பெண்களுக்கு மட்டும் பாகுபாடு காட்டுவது போன்ற தோற்றமளித்தாலும் ஆணாதிக்கம் மேலோங்கி இருப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

வேறு ஆணுடனான பாலியல் உறவு தொடர்பான தீர்ப்பில் நீதிபதிகள் கூறியவை :

  • திருமண உறவிற்கு வெளியேயான பாலியல் உறவு கணவன்-மனைவி விவாகரத்திற்கு காரணமாகிறது. அது கிருமினல் குற்றமில்லை.
  • திருமண உறவிற்கு வெளியேயான பாலியல் உறவில் கணவன்-மனைவி இருவருக்கும் தற்கொலைக்கு தூண்டாத நிலையில் அது குற்றமில்லை. ஒருவேளை தற்கொலைக்கு அது காரணம் எனில் ஆதாரங்கள் சமர்பிக்கலாம்.
  • ஆண்களுக்கு இணையாக பெண்களை நடத்த வேண்டும். இதில் பாகுபாடு காட்டுவது என்பது சட்ட விதிமீறல் ஆகும்.
  • கணவர்கள் என்பவர் திருமணமான பெண்களின் எஜமானர்கள் அல்ல. ஆணும் பெண்ணும் சமம்.
  • திருமண உறவிற்கு வெளியேயான பாலியல் உறவு குற்றமில்லை என்பதால் அதனால் ஆணிற்கு தண்டனை வழங்கும் 497 சட்டபிரிவு ரத்து செய்யப்படுகிறது.

497 சட்டப் பிரிவு ரத்து செய்வதன் விளைவால் திருமணமான பெண்கள் கணவர் அல்லாத வேறு ஒரு ஆணுடன் பாலியல் உறவை வைத்துக் கொண்டால் ஆணிற்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்படாது.

Please complete the required fields.




Back to top button
loader