This article is from Aug 13, 2018

மான்சாண்டோ நிறுவனக் களைக்கொல்லி மருந்தில் புற்றுநோய் உருவாக்கும் ரசாயனம்..!

மான்சாண்டோ அமெரிக்காவைச் சேர்ந்த ரசாயனம் மற்றும் விவசாயத்திற்கான களைகள் அழிப்பு மருந்து உள்ளிட்டவை தயாரிக்கும் பெருநிறுவனம். மேலும், மரபணு மாற்றப்பட்ட விதைகளை உருவாக்கும், பல நாடுகளில் கிளைகள் கொண்டு தன் வர்த்தகத்தை விரிவுபடுத்தி வருகிறது. 

சமீபத்தில் மான்சாண்டோ நிறுவனம் தனக்கு எதிரான வழக்கு ஒன்றில் தோல்வி அடைந்துள்ளது. அந்நிறுவனத்தின் களைக்கொல்லி மருந்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தோல்வி அடைந்து அந்நிறுவனத்தின் தயாரிப்பு மனிதர்களுக்கும் பாதிப்பை உண்டாக்கும் என நிரூபிக்கப்பட்டுள்ளது. 

மான்சாண்டோ நிறுவனத்தின் மீதான குற்றச்சாட்டு என்பது அந்நிறுவனத்தின் களைக்கொல்லி மருந்தான “ Roundup “ இல் க்ளைபோசெட் என்ற ரசாயனம் புற்றுநோயை உண்டாகும் என்பதே. இந்த பெரும் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்தவர் சாதாரண தோட்டப்பணியாள் ஆவார். 

வடக்கு சான் பிரான்ஸிகோவில் உள்ள பெனிசியா மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 46 வயதுடைய ஜான்சன் என்பவர் 2012-ல் இருந்து தோட்டப் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். பள்ளி மைதானத்தில் இருக்கும் களைச் செடிகளின் மீது களைக்கொல்லிகளை தெளிக்கும் பணியை செய்வதில் பல மணி நேரங்கள் கூட ஆகும். இதில் பயன்படுத்தப்பட்டது மான்சாண்டோவின் களைக்கொல்லிகளே..!

 ” 2014-ல் தவானே ஜான்சனுக்கு Non-Hodgkin’s lymphoma என்ற வெள்ளை அணுக்களை பாதிக்கும் புற்றுநோய் இருப்பதாக கண்டறியப்பட்டது. இதனையடுத்து, அவரின் மருத்துவ செலவிற்கே இரு வெவ்வேறு பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார். இதற்கு காரணம் மான்சாண்டோவின் களைக்கொல்லியே என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ஜான்சன் “. 

எட்டு வாரக் கால விசாரணையின் முடிவில் மான்சாண்டோ நிறுவனத்திற்கு எதிராக அதிகளவில் ஆதாரங்கள் இருந்ததை அடுத்து மான்சாண்டோ நிறுவனத்தின் “ Roundup “ களைக்கொல்லியில் உள்ள க்ளைபோசெட் என்ற ரசாயனம் புற்றுநோயை உண்டாகும் எனவும், இது குறித்து அந்நிறுவனம் மக்களுக்கு எச்சரிக்கை செய்ய தவறி விட்டதாக கலிஃபோர்னியா  நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்டவரும், வழக்கை தொடர்ந்தவருமான ஜான்சனுக்கு மான்சாண்டோ நிறுவனம் 289 மில்லியன் டாலரை இழப்பீடாக வழங்க ஆணை பிறப்பித்துள்ளது.

ஆனால், மான்சாண்டோ நிறுவனம் க்ளைபோசெட் என்ற ரசாயனம் புற்றுநோயை உண்டாகும் என கூறுவதை மறுத்துள்ளது. மேலும், இது தொடர்பாக மேல்முறையீடு செய்யப் போவதாக நிறுவனத்தின் துணைத்தலைவர் ஸ்காட் பார்ட்ரிஜ் தெரிவித்துள்ளார். எனினும், அமெரிக்கா முழுவதும் மான்சாண்டோ நிறுவனம் இதேபோன்ற 5000 வழக்குகளை எதிர்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சமீபத்தில்தான் அந்நிறுவனத்தை ஜெர்மனியின் மருந்து நிறுவனமான பேயர் நிறுவனம் 62 மில்லியன் கொடுத்து வாங்கியதாகக் கூறப்படுகிறது. 

2015-ல் உலக சுகாதார அமைப்பின் International agency for research on cancer க்ளைபோசெட் மனிதர்களுக்கு புற்றுநோயை  உருவாக்கும் என தெரிவித்து இருந்தது. 

இந்தியாவில் மான்சாண்டோ : 

  “ Roundup “ களைக்கொல்லி இந்தியா உள்ளிட்ட 130 நாடுகளில் பதிவு செய்யப்பட்டு, 100-க்கும் மேற்பட்ட பயிர்களுக்கு பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கூட விற்கப்படும் இந்த களைக்கொல்லி மருந்துகள் ஆன்லைன் மூலமும் விற்கப்படுகிறது.  

 களைக்கொல்லி மருந்துகள், ரசாயனங்கள் மட்டுமின்றி மரபணுமாற்ற விதைகளையும் உருவாக்கி விற்பனை செய்யும் நிறுவனமாக மாசாண்டோ உள்ளது. இந்தியாவில் மரபணு மாற்றப்பட்ட பருத்தி விதைகளை உருவாக்க அந்நிறுவனம் விண்ணப்பித்து இருந்தது. ஆனால், உள்ளூர் விதை நிறுவனங்களுடன் அதற்கான தொழில்நுட்பத்தை பகிர்ந்து கொள்ள இந்தியா கட்டயாப்படுத்துவதாக கூறி விண்ணப்பத்தை 2016-ல் திரும்பப் பெற்றது. 

“ இயற்கையாய் உருவானதை மாற்றி அதிக மகசூலுக்கும், பூச்சி பாதிப்பு இல்லாத பயிர்கள் என மரபணுமாற்ற விதைகளையும், பூச்சிக்கொல்லிகளையும், களைக்கொல்லிகளையும் அதிகளவில் பயன்படுத்தி ஒரு கட்டத்தில் மனிதனின் உடலே விஷமாக மாறும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை உணர வைக்கிறது “   

 

Monsanto ordered to pay $289m as jury rules weedkiller caused man’s cancer

Please complete the required fields.




Back to top button
loader