This article is from Sep 10, 2018

வெள்ளத்தில் முதுகை படிக்கட்டாக்கி உதவிய மீனவருக்கு பரிசாக கார்..!!

கேரளாவில் வெள்ளப் பாதிப்பின் போது மீனவ சமூகத்தை சேர்ந்த 3 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் தங்களது படகுகளை கொண்டு மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர். எவ்வித பலனையும் எதிர்பார்க்காமல் தங்கள் கையில் இருந்த பணத்தை செலவிட்டு பாதித்த மக்களை மீட்கும் பணியில் இறங்கினர்.

மீட்பு பணியில் படகுகளில் ஏறுவதற்கு சிரமப்பட்ட பெண்களுக்கு படிக்கட்டாக மாறிய மீனவரின் மனிதாபிமான செயல் மிகப் பிரபலமடைந்தவை. தன் முதுகை படிக்கட்டாக மாற்றி அதில் ஏறி படகுகளில் பெண்கள் அமரும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி அந்த நண்பருக்கு பாராட்டுகள் குவிந்தன.

அத்தகைய பாராட்டுக்குரிய செயலை செய்தவர் மலப்புரத்தை சேர்ந்த  32 வயதான ஜெய்ஷால் ஆவார். வெள்ளத்தில் கடற்படை வீரர்களுக்கு இணையாக மீட்பு பணிகளில் ஈடுபட்ட மீனவர்களுள் ஒருவர். மலப்புர மாவட்டத்தில் நடைபெற்ற மீட்பு பனியின் போது ஜெய்ஷால் தன் முதுகை படிக்கட்டாக மாற்றி பெண்களுக்கு உதவினார். ஜெய்ஷால் மற்றும் அவரது குழுவினர் 250-க்கும் மேற்பட்டவர்களை வெள்ளத்தில் இருந்து மீட்டுள்ளனர்.

கேரளாவில் உள்ள Trauma care  என்ற தன்னார்வு அமைப்பில் இருந்து வரும் ஜெய்ஷால் 2002 ஆம் ஆண்டு முதல் பல்வேறு மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெள்ளத்தின் மீட்பு பணியின் போது முதுகை படிக்கட்டாக மாற்றி பெண்கள் படகில் ஏற உதவிய மீனவருக்கு கார் பரிசாக கிடைத்துள்ளது “ 

கேரளா மீனவர் ஜெய்ஷாலின் மீட்பு பணியை பாராட்டிய கோழிக்கோட்டை சேர்ந்த மகேந்திரா கார் நிறுவனத்தின் டீலர் கார் ஒன்றை பரிசாக வழங்கி உள்ளார். மகேந்திரா நிறுவனத்தின் புதிய காரான மாரஸோ காரை இதுவரை எவரும் வாங்கவில்லை. அதை வாங்கியவர் மற்றும் பரிசாக பெற்ற பெருமை ஜெய்ஷால்க்கே..!! 

கேரளா மாநிலத்தின் தொழில்துறை அமைச்சரான ராமசந்திரன் ஜெய்ஷாலுக்கு மாரஸோ காரின் சாவினை வழங்கி உள்ளார். புதிய காரை பரிசாக பெற்ற ஜெய்ஷால் பரிசசை எதிர்பார்த்து உதவி செய்யவில்லை எனவும், தன் கடமையை மட்டுமே செய்ததாகவும் கூறியுள்ளார்

கேரள வெள்ளத்தில் ஜெய்ஷால் போன்று ஆயிரக்கணக்கான மீனவர்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு உள்ளனர். மீட்பு பணியில் சிறந்த பங்களிப்பை வழங்கிய 200 மீனவர்களுக்கு கடற்படை காவல் பணி வழங்குவதாக கேரளாவின் நிதியமைச்சர் ட்விட்டரில் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Kerala Fisherman Over Whose Back Women Climbed To Safety Gifted A Car

Please complete the required fields.




Back to top button
loader