10% இட ஒதுக்கீடுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு !

பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு(General category) 10 % இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முடிவெடுத்தது. இது தொடர்பாக இந்திய அரசியலமைப்பு சட்டம் 124வது திருத்தத்தை(மசோதா) 2019 கொண்டு வர லோக் சபா மற்றும் ராஜ்ய சபா ஆகிய இரு அவையிலும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

தேர்தல் நேரம் என்பதால் மத்திய அரசின் “ பொருளாதரத்தில் பின்தங்கிய GC-க்கு ” இட ஒதுக்கீடு மசோதாவிற்கு எதிர்ப்புகள் பலமாக இல்லை. எதிர்ப்பால் ஓட்டு வங்கி பாதிக்கப்படும் என்ற காரணத்தினால் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க அரசியல் கட்சிகள் தயாராக இல்லை என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர்.

லோக்சபாவில் 10%  இட ஒதுக்கீடு தொடர்பான மசோதாவிற்கு எதிர்க் கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட பலரும் ஆதரவு அளித்தனர். தமிழகத்தின் அதிமுக, திமுக கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து ராஜ்யசபாவில் 165 ஓட்டுகள் ஆதரவாகவும், 7 ஓட்டுகள் எதிராகவும் விழுந்தன. ஆக, இரு அவையிலும் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதால் குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு மசோதா அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் “ பொருளாதாரம் “ அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு சாத்தியகூறுகள் இல்லை என்றும், அவ்வாறு செய்வது அரசிலமைப்பு சட்டத்திற்கு எதிரானவை என்ற கருத்து நிலவுகிறது.

பொருளாதாரத்தின் பின்தங்கியவர்கள் என்ற அடிப்படையில் முற்பட்ட சமூகத்தினருக்கு(GC) 10 சதவீதம் அளிப்பதால் இட ஒதுக்கீடு 50-ல் இருந்து 60 % ஆக உயரும். 50 சதவீதத்திற்கு அதிகமாக இட ஒதுக்கீடு செல்லக் கூடாது என ஏற்கனவே உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. மத்திய அரசின் இட ஒதுக்கீடு மசோதா பற்றி இரு விசயங்களை தெளிவுப்படுத்த வேண்டும்.

  • முதலில் இட ஒதுக்கீடு 60% ஆக உயர்வது அரசியல் சாசனத்திற்கு பொருந்தா ஒன்று. இவ்வாறு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கும் போது GC, URC or Forward பிரிவினருக்கான வாய்ப்புகள் சுருங்க நேரிடும். இது அரசியலமைப்பு நெருக்கடிக்கு வழிவகுக்கும்.
  • இதற்கு மாற்றாக, OBC, SC, ST மூன்று பிரிவும் தக்க வைத்து இருக்கும் 50 சதவீத இட ஒதுக்கீட்டில் 10% பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு வழங்க நேரிடும்.  இதனால் மெரிட்-ல் வருபவர்களுக்கு 41% சதவீதம் என்பதால் Article 14-ஐ பாதிப்படையும்.

 “ தற்போது வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டில் 49.5%-ல், Other backword classes 27 %, scheduled castes 15%, scheduled tribes 7.5% என பிரித்து வழங்கப்படுகிறது “.

பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட சமூகத்தினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. Youth for equality என்ற அமைப்பும், Kaushal Kant Mishra ஆகியோர் இணைந்து வழக்கு தொடர்ந்துள்ளனர்.

ஐ.ஏ.எஸ்-ல் இட ஒதுக்கீடு : 

இட ஒதுக்கீடு முறையால் குறைந்த மதிப்பெண் கொண்ட SC, ST பிரிவினர் எளிதாக அரசு வேலையிலும், அரசு வேலையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் கூட இட ஒதுக்கீட்டால் மீண்டும் அரசு வேலையை பெறுவதாக அதிகம் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு. இதற்கு எடுத்துக்காட்டாக டினா தாபி என்ற தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண் 2015 UPSC தேர்வில் முதல் இடம் பிடித்து வெற்றிப் பெற்றதே கூறப்படும்.

டினா தாபி வெற்றி பெற்ற போது SC இட ஒதுக்கீட்டால் தான் UPSC தேர்வில் வென்றார் என்ற குற்றச்சாட்டுகளை வேகமாக பரப்பினர். டினா தாபியின் பெற்றோர் இருவரும் அரசு அதிகாரிகளே. டினா தாபி முயற்சித்த UPSC தேர்வின் Prelims போது மட்டுமே SC பிரிவில் தேர்வாகியுள்ளார். ஆனால், இறுதி Main மற்றும் நேர்முகத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றே தேர்வாகினார். Prelims-ல் வாங்கும் மதிப்பெண் மற்ற மெயின் மற்றும் நேர்முகத் தேர்வில் கணிக்கிடப்படாது. அவர் வங்கியர் மொத்த மதிப்பெண் 195.39 . 

இட ஒதுக்கீடு என்பதைத் தாண்டி அவருக்கென திறமை இருப்பதால் தானே UPSC தேர்வில் முதல் மாணவியாக வர முடிந்து இருக்கும். மேலும், டினா தாபி பெயரில் போலி கணக்குகள் தொடங்கப்பட்டு முகநூலில் தவறாக பதிவுகள் வெளியாகின. 99 ரேங்க் வாங்கியவர் தேர்வாகவில்லை, 355 ரேங்க் வாங்கியவர் தேர்வாகினர் என்பது பொருந்தாத குற்றச்சாட்டு. ஒவ்வொரு பிரிவினருக்கும் உள்ள சில இடங்களில் திறமையானவர்கள் தேர்வாகிறார்கள் என்பதே நிதர்சனம்.

உச்ச நீதிமன்றத்தில் 10%  இட ஒதுக்கீடு தொடர்பான மசோதா ஏற்கப்படாது என அறிவிக்கப்பட்டாலும் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. இவை அரசியல் நகர்வுகள் மட்டுமே !

 

Bill for 10% reservation for poor in general category challenged in SC

BREAKING-Economic Reservation : Constitution Amendment Challenged In SC As Violating Basic Structure

Please complete the required fields.




Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close