கேரளா No.1, தமிழ்நாடு No.2 : 2020-21 நிதி ஆயோக் தரவரிசையில் தென்னகம் கலக்கல் !

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேங்களின் முன்னேற்றத்தைக் கண்டறிய ஐக்கிய நாடுகள் சபை மற்றும் நிதி ஆயோக் இணைத்து இந்தியாவின் நிலையான வளர்ச்சி இலக்குகள் குறியீடு மற்றும் தகவல் பலகை 2020-21-ன் மூன்றாம் பதிப்பை(அறிக்கை) வெளியிட்டு உள்ளன.

Advertisement

கல்வி, சுகாதாரம், பாலினம், பொருளாதார வளர்ச்சி, பருவநிலை மாற்றம், நிறுவனங்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முன்னேற்றம் மதிப்பிடப்பட்டு தரவரிசை கணக்கிடப்படுகிறது. இந்த அறிக்கை 2030 திட்டத்தின் கீழ் உள்ள சர்வதேச இலக்குகளின் விரிவான தன்மை மற்றும் தேசிய முன்னுரிமையை தெளிவாக எடுத்துரைப்பதாக கூறப்படுகிறது.

2020-21 நிதி ஆயோக் தரவரிசை மாநிலங்களுக்கான பட்டியலில் (16 இலக்குகளின் ஓட்டுமொத்த புள்ளிகள்) கேரளா 75 புள்ளிகள் உடன் முதலிடத்திலும், தமிழ்நாடு மற்றும் இமாச்சலப்பிரதேசம் தலா 74 புள்ளிகள் உடன் இரண்டாம் இடத்திலும், 72 புள்ளிகள் உடன் ஆந்திரா, கோவா, கர்நாடகா, உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் அடுத்தடுத்து உள்ளன. பீகார், அசாம், ஜார்கண்ட் மாநிலங்கள் மிகக் குறைவான புள்ளிகளை பெற்றுள்ளன. பீகார் 52 புள்ளிகள் உடன் கடைசி இடத்தில் உள்ளது.

வறுமை ஒழிப்பு பிரிவில், தமிழ்நாடு 86 புள்ளிகள் உடன் முதலிடத்தில் உள்ளது. சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ஒடிசா, ஜார்கண்ட், பீகார் உள்ளிட்ட மாநிலங்கள் வறுமை ஒழிப்பில் மிகக் குறைவான புள்ளிகளையே பெற்றுள்ளன. அந்த பிரிவில் பீகார் 32 புள்ளிகள் உடன் கடைசி இடத்தில் இருக்கிறது.

இலக்குகள்  முதலிடம் வகிக்கும் மாநிலங்கள் & யூனியன் பிரதேசங்கள் 
வறுமை ஒழிப்பு தமிழ்நாடு
பசியின்மை கேரளா மற்றும் சண்டிகர்
ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு குஜராத் மற்றும் டெல்லி
தரமான கல்வி கேரளா மற்றும் சண்டிகர்
பாலின சமநிலை சத்தீஸ்கர் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகள்
சுத்தமான குடிநீர் வழங்கல் கோவா மற்றும் லட்சத்தீவுகள்
எரிசக்தி ஆந்திரா, கோவா, தமிழ்நாடு உள்ளிட்ட 15 மாநிலங்கள் (100 புள்ளிகள்)
வேலை மற்றும் பொருளாதார வளர்ச்சி இமாச்சலப் பிரதேசம் மற்றும் சண்டிகர்
தொழிற்சாலை, உள்கட்டமைப்பு குஜராத், டெல்லி

Advertisement

2020-21-ல் ஒவ்வொரு பிரிவிலும் தமிழ்நாடு பெற்றுள்ள புள்ளிகள் :

மாநிலங்கள் அளவில், தமிழ்நாடு வறுமை ஒழிப்பில் 86 புள்ளிகள்(முதலிடம்), பசியின்மை 66 புள்ளிகள்(7ம் இடம்), ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு 81 புள்ளிகள்(3-ம் இடம்), தரமான கல்வி 69 புள்ளிகள் (5-ம் இடம்), பாலின சமநிலை 59 புள்ளிகள்(4-ம் இடம்), சுத்தமான குடிநீர் 87 புள்ளிகள் (9-ம் இடம்), வேலை மற்றும் பொருளாதார வளர்ச்சி 71 புள்ளிகள் (4-ம் இடம்) உடன் உள்ளன.

இந்தியாவின் ஒட்டுமொத்த SDG மதிப்பெண் 6 புள்ளிகள் உயர்ந்து உள்ளதை 2020-21 பட்டியல் காண்பிக்கிறது. 2019-ல் 60 ஆக இருந்த புள்ளிகள் 2020-ல் 66 ஆக உயர்ந்து உள்ளது.

Link :

SDG INDIA Index & Dashboard 2020-21

sdg-india-index-2020-21-released-know-top-performing-states-uts

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button