2020 நீட் தேர்வு முடிவு அறிவிப்பில் குளறுபடிகள்| எழுதியது 3 ஆயிரம், தேர்ச்சி 88 ஆயிரம் என வெளியீடு !

கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே நடைபெற்று முடிந்த 2020 நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷான்க் தன் ட்விட்டர் பக்கத்தில் தேர்வு முடிவுகளை பகிர்ந்து உள்ளார். ஆனால், நீட் தேர்வு முடிவில் மாநில அளவில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்களில் குளறுபடிகள் பல உள்ளன.
#NEET2020RESULTS #NEET2020 #NEETUG pic.twitter.com/Z1vDVKJ60O
— Dr. Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) October 16, 2020
2020-ம் ஆண்டில் திரிபுராவில் தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை 3,536 பேர், ஆனால் வெளியான அறிவிப்பில் 88,889 பேர் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது. தெலங்கானாவில் 50,392 பேர் எழுதி 1,738 பேர் தேர்ச்சி ஆன நிலையில் தேர்ச்சி சதவீதம் 49.15% என்றுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் 1,56,992 பேர் தேர்வு எழுதி 7,323 தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால், தேர்ச்சி சதவீதம் 60.79% எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் 12,047 பேர் தேர்வு எழுதி 37,301 பேர் தேர்ச்சி என குளறுபடிகளோடு முடிவு வெளியாகி இருக்கிறது.
இதுமட்டுமின்றி, 2020 ஆகஸ்ட் மாதம் தேசிய தேர்வு முகமை (NTA) வெளியிட்ட அறிக்கையில் இருக்கும் மாநில அளவில் 2019, 2020 நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கையும், தற்போது வெளியாகி உள்ள முடிவில் இருக்கும் மாணவர்களின் எண்ணிக்கையிலும் மாற்றம் உள்ளது. 2020 நீட் தேர்வு முடிவுகளில் குளறுபடிகள் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
Link :