This article is from Dec 31, 2021

2021-ல் யூடர்ன் இணையதளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட டாப் 10 கட்டுரைகள் !

2021-ம் ஆண்டும் தவறான தகவல்கள், போலிச் செய்திகள், பொய்கள், வதந்திகளுக்கு பஞ்சமில்லாத ஆண்டாக கடந்து தற்போது முடிவடைய உள்ளது. அதற்கு இணையாக நாம் புரளியை களையெடுத்து வருகிறோம். அப்படி இந்த ஆண்டில் யூடர்ன் இணையதளத்தில் வெளியான ஃபேக்ட் செக் மற்றும் செய்திக் கட்டுரைகளில் அதிக வாசிப்பைப் பெற்றவைகள் குறித்து இக்கட்டுரையில் காண்போம்.

1. சிவகுமார் திருப்பதி விவகாரம் : 

படிக்க : இளம்பெண்ணுடன் திருப்பதியில் உல்லாசம் என சிவகுமார் பற்றி அவதூறு தலைப்பால் வதந்தி !

திருப்பதி தேவஸ்தானம் பற்றி நடிகர் சிவகுமார் பேசியது தொடர்பாக வெளியிட்ட செய்தியில் தவறான தலைப்பை வைத்து அவதூறு பரப்பியதாக நாம் வெளியிட்ட ஃபேக்ட் செக் கட்டுரை 1.14 லட்சம் பேரால் வாசிக்கப்பட்டது. யூடர்ன் இணையதளத்தில் அதிக வாசிப்பைப் பெற்றக் கட்டுரை இதுவே.

2. ஜெய்பீம்-இறையன்பு : 

படிக்க : நினைத்ததை சாதித்தது “ஜெய் பீம்” : மாவட்டந்தோறும் கள ஆய்விற்கு உத்தரவிட்ட இறையன்பு !

ஜெய்பீம் திரைப்படத்தின் தாக்கத்தால் நரிக்குறவர், பழங்குடியினர், இதர விளிம்பு நிலை மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்குவது தொடர்பாக கள ஆய்வை மேற்கொள்ள கூறி மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியது தொடர்பாக யூடர்ன் வெளியிட்ட செய்திக் கட்டுரை 51 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களால் வாசிக்கப்பட்டது.

3. புனித் ராஜ்குமார் மரணம் : 

படிக்க : நடிகர் புனித் ராஜ்குமாரின் இறுதி நிமிட சிசிடிவி எனப் பரவும் தவறான வீடியோ !

உடற்பயிற்சி செய்த பிறகு நெஞ்சுவலியில் மயங்கி விழுந்த இளைஞரின் வீடியோவை கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாரின் இறுதி நிமிட சிசிடிவி காட்சி எனத் தவறாகப் பரப்பினர். இதுகுறித்து நாம் வெளியிட்ட ஃபேக்ட் செக் கட்டுரை 41 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களால் வாசிக்கப்பட்டது.

4. கே.டி.ராகவன்-தினமலர் : 

படிக்க : கே.டி.ராகவன் விவகாரத்தில் தினமலர் வைத்த தலைப்பு என எடிட் செய்து பரப்பும் நையாண்டிப் பதிவு !

பாஜக தலைவர் கே.டி.ராகவன் விவகாரத்தில் தினமலர் நாளிதழ் வைத்த தலைப்பு என எடிட் செய்து பரப்பப்பட்ட நாளிதழ் பக்கம் குறித்து வெளியிடப்பட்ட ஃபேக்ட் செக் கட்டுரை 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாசிப்பைப் பெற்றது.

5. அப்பா-மகள், அம்மா-மகன் திருமணம்: 

படிக்க : அப்பா மகளையும், அம்மா மகனையும் திருமணம் செய்து கொண்டதாக பரப்பப்படும் வதந்தி !

ஒரு முஸ்லீம் குடும்பத்தில் அப்பா மகளைத் திருமணம் செய்து கொண்ட ஆத்திரத்தில் அம்மா மகனை திருமணம் செய்து கொண்டதாக பரப்பப்பட்ட வதந்தி பற்றி யூடர்ன் வெளியிட்ட ஃபேக்ட் செக் கட்டுரை 30 ஆயிரம் பேரால் வாசிக்கப்பட்டது.

6. திருப்பதி அர்ச்சகர் ரெய்டு : 

படிக்க : திருப்பதி கோவில் அர்ச்சகர் வீட்டில் 128 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டதா ?

திருப்பதி திம்பத்தில் பணியாற்றும் 16 அர்ச்சகர்களில் ஒருவரின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 128 கிலோ தங்கம், 150 கோடி ரொக்கம், 70 கோடி மதிப்புள்ள வைரங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறி வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகை மீட்கப்பட்ட வீடியோவை வைத்து வதந்தி பரப்பியுள்ளனர். இது குறித்து வெளியிட்ட ஃபேக்ட் செக் கட்டுரை 21 ஆயிரத்திற்கும் மேல் தொடர்ந்து வாசிக்கப்பட்டு வருகிறது.

7. தயிர் சாதம்: 

படிக்க : தயிர் சாதம் சாப்பிட்டால் மூளைக்கு நல்லதா ? தயிரில் மட்டுமே டிரிப்டோபன் வேதிப்பொருள் கிடைக்கிறதா ?

மூளையில் டிரிப்டோபன் என்ற வேதிப்பொருளை வெளியிடக்கூடிய ஒரே இந்திய உணவு “தயிர் சாதம் ” மட்டுமே என வெளியான தவறான தகவல் குறித்து வெளியிடப்பட்ட ஃபேக்ட் செக் கட்டுரை 21 ஆயிரம் வாசிப்பைப் பெற்றது.

8. பெட்ரோல் விலை பிரபலங்கள் கருத்து :

படிக்க : வைரலாகும் 2012ல் பெட்ரோல் விலை உயர்விற்கு பிரபலங்கள் பதிவிட்ட ட்வீட்கள் !

2010-2012ம் ஆண்டுகளில் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து பாலிவுட் நடிகர் அக்சய் குமார், அமிதாப்பச்சன் உள்ளிட்ட பிரபலங்கள், தற்போதைய ஆளும் பாஜக கட்சியைச் சேர்ந்தவர்கள் ட்விட்டரில் பதிவிட்டது குறித்து வெளியிட்ட செய்திக் கட்டுரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாசிப்பைப் பெற்றது.

9. அனைத்து சாதி அர்ச்சகர் : 

படிக்க : கார், பைக் கழுவுறவங்களா அர்ச்சகர் ஆக்கினால்… வைரலாகும் வன்ம பதிவுகள் !

தமிழக அரசு அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் திட்டத்தின் கீழ் பணி ஆணை வழங்கிய பிறகு கார் பைக் கழுவுறவனை எல்லாம் அர்ச்சகர் ஆக்குனா இப்படித்தான் என பழைய புகைப்படங்களை வைத்து வன்மத்துடன் வதந்திகளை பரப்பி வந்தனர். இதுகுறித்து யூடர்ன் வெளியிட்ட கட்டுரைகளில் ஒன்று 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாசிப்பைப் பெற்றது.

10. நடிகர் சூர்யா-இருளர் அறக்கட்டளை :  

படிக்க : இல்லாத அறக்கட்டளைக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்தாரா நடிகர் சூர்யா?

ஜெய்பீம் திரைப்படம் வெளியான போது நடிகர் சூர்யா இல்லாத இருளர் அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி நிதியை நன்கொடையாக அளித்ததாக பரப்பப்பட்ட வதந்தி குறித்து வெளியிட்ட ஃபேக்ட் செக் கட்டுரை 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாசிப்பைப் பெற்றது.

Please complete the required fields.




Back to top button
loader