2022 பட்ஜெட்டில் கார்ப்பரேட் வரியைக் குறைத்ததாக தவறான செய்தி : இந்திய வருவமானவரித்துறை !

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2022 பட்ஜெட் அறிக்கையில், தனிநபர்களுக்கான வருமான வரி மற்றும் அதற்கான உச்ச வரம்பில் எந்த மாற்றமும் செய்யப்படாதது, பிற வரி விதிப்பு முறைகளும் அறிவிக்கப்பட்டது எதிர்க்கட்சிகளிடம் இருந்து எதிர்ப்பை சந்தித்தது. 2022 பட்ஜெட் அறிக்கை குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்களும் எழுந்து வருகின்றன.

இதற்கிடையில், 2022 பட்ஜெட் அறிக்கையில் கார்ப்பரேட் வரி விதிப்பு குறைக்கப்பட்டதாக தவறான செய்தி வெளியாகி வருகிறது என இந்திய வருமானவரித்துறை ட்விட்டரில் தெரிவித்து உள்ளது.

Twitter link  

” பட்ஜெட்டில் கார்ப்பரேட் வரி குறைப்பு குறித்து ஒரு போலி செய்தி பரப்பப்படுகிறது. உண்மை என்னவென்றால், கூட்டுறவு சங்கங்களுக்கான ஏஎம்டி 18.5%-ல் இருந்து 15% ஆகக் குறைக்கப்பட்டு உள்ளது ” என ட்விட்டரில் பதிவிட்டு உள்ளது.

மேலும், ” கூட்டுறவு சங்கங்களுக்கான மாற்று குறைந்தபட்ச வரி விகிதம் (ஏஎம்டி) 15% ஆக முன்மொழியப்பட்டு, நிறுவனங்களின் குறைந்தபட்ச மாற்று வரி செலுத்துவதற்கு இணையாகக் கொண்டுவரப்பட்டது. மேலும், கூட்டுறவு சங்கங்கள் மீதான கூடுதல் கட்டணம் தற்போதைய 12% லிருந்து 7% ஆக குறைக்கப்படும் ” என பட்ஜெட் குறித்து வெளியிட்ட ட்வீட் பதிவையும் சேர்த்து ந்திய வருமானவரித்துறை பதிவிட்டு உள்ளது.

Twitter link  

இதேபோல், ” NDTV சேனலில் 2022 பட்ஜெட் தொடர்பான அறிவிப்புகள் போது கார்ப்பரேட் வரி குறைப்பு என தவறானச் செய்தி வெளியிட்டதாக ” PIB Factcheck ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறது.

2022 பட்ஜெட்டில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரியில் மாற்றமில்லை, ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வருமான வரியைப் பொறுத்தவரையில் பலன்பெறும் காலக்கெடு நீட்டிக்கப்பட்டு உள்ளது. புதிதாக இணைக்கப்பட்ட உற்பத்தி நிறுவனங்களுக்கு  முன்பே அரசு அறிவித்த 15% கார்ப்பரேட் வரி விகிதத்தை ஓராண்டுக்கு நீட்டித்து உள்ளது.

Please complete the required fields.
Back to top button