2024ல் மோடி பிரதமரானதும் கர்நாடகா 2 ஆக பிரிக்கப்படும், 50 புதிய மாநிலங்கள் உருவாகும்: கர்நாடகா அமைச்சர்!

2024 மக்களவைத் தேர்தலுக்கு பிறகு கர்நாடகா இரண்டாகப் பிரிக்கப்படும், இந்தியாவில் 50 புதிய மாநிலங்கள் உருவாகும். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியே நடவடிக்கை எடுப்பார் என வட கர்நாடகா பகுதிக்கு தனி மாநிலம் வேண்டும் எனக் குரல் கொடுத்து வரும் பாஜக அமைச்சர் உமேஷ் கட்டி தெரிவித்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Twitter link | Archive link 

பாஜக ஆளும் கர்நாடகா மாநிலத்தின் உணவு மற்றும் வனத்துறை அமைச்சராக உள்ள உமேஷ் கட்டி ஜூன் 23-ம் தேதி பெலகாவி பார் அசோசியேஷன் நிகழ்வில் பேசிய போது ,” அடுத்த மக்களவைத் தேர்தலுக்கு பிறகு நாட்டில் 50-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் உருவாகும் என சமூக வலைதளங்களில் ஒரு விவாதம் ட்ரெண்டாகி வருகிறது. கர்நாடகம் முழுவதும் அதிகரித்துள்ள மக்கள் தொகை அடிப்படையில் வட கர்நாடகம் தனி மாநிலமாக மாறும் என்பது உறுதி. 2024 தேர்தலுக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி புதிய மாநிலங்களை உருவாக்குவார். உத்தரப்பிரதேசம் 4 ஆகவும், மகாராஷ்டிரா மூன்றாகவும், கர்நாடகா இரண்டு மாநிலங்களாகவும் மாறும் ” எனப் பேசியுள்ளார்.

பெங்களூரில் மக்கள் தொகை அதிகமாக உள்ளது. மக்களுக்கு தண்ணீர் வசதி இல்லாமல் பல மணி நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்க வேண்டி உள்ளது. வட கர்நாடகாவுக்கு மிகப்பெரிய அளவில் ஆற்றல் உள்ளது. இது எங்கள் கட்சியின் நிலைப்பாடு அல்ல, ஆனால் அது இந்த முறை கண்டிப்பாக நடக்க வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து இதை நிறைவேற்றுவோம் எனத் தெரிவித்து இருக்கிறார்.

Advertisement

இவர் 2019-ம் ஆண்டில் வட கர்நாடகாவிற்கு தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என அப்போதைய முதல்வர் எடியூரப்பாவிடம் கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் மாநிலங்கள் பிரிக்கப்படுவதை பார்த்து வருகிறோம். 2014-ல் ஆந்திராவில் இருந்து தெலங்கானா மாநிலம் பிரிக்கப்பட்டது , 2019-ல் ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.

மேலும் படிக்க : கொங்கு நாடு உருவாகுது, தமிழ்நாடு இரண்டாக பிரிகிறது என தினமலர் வெளியிட்ட தவறான செய்தி !

தமிழ்நாட்டில் பாஜக ஆதரவாளர்கள் கொங்கு மண்டலத்தை கொங்கு நாடாக பிரிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்ததை பார்க்க முடிந்தது. அந்நேரத்தில் கொங்கு நாடு உருவாகுவதாக தினமலர் நாளிதழ் பொய்யான செய்தியை வெளியிட்டது.

மேலும் படிக்க : 40 மாவட்டங்களுக்கு மேல் சென்றால் மாநிலம் இரண்டாக பிரிக்கப்படுமா ?

இந்தியாவில் அதிகரிக்கும் மக்கள் தொகை அடிப்படையில் மாநிலங்களை பிரிக்க வேண்டும் என்றால் முதலில் பிரிக்கப்பட வேண்டியது 21 கோடிக்கும் மேல் மக்கள் தொகை கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசம். அம்மாநிலத்தின் முதல்வராக மாயாவதி அவர்கள் இருந்த போதே அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டது. ஆனால், தற்போதுவரை அரசியல் காரணங்களால் அம்மாநிலம் பிரிக்கப்படாமலே உள்ளது.

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button