October 22, 2018

சென்னையில் காது கேளாத சிறுமிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை..

சென்னையில் உள்ள அயனாவரத்தில் 300 குடியிருப்புகளை கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வரும் 11 வயதே ஆன காது கேளாத சிறுமி 6 மாதங்களுக்கும் மேலாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளார். ஜனவரி மாதத்தில் இருந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் 23 பேருக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

7-ம் வகுப்பு படித்து வரும் சிறுமி நடுத்தரக் குடும்பத்தை சேர்ந்தவர். சிறுமியின் தந்தை வேலை நிமித்தமாக அடிக்கடி வெளியில் செல்வதாலும், சிறுமியின் தாயும் குழந்தை விளையாட செல்வதாக நினைத்து வீட்டிற்கு தாமதமாக வருவதைப் பற்றி கண்டு கொள்ளாமல் இருந்துள்ளார். சிறுமியின் மூத்த சகோதரி வெளிமாநிலத்தில் படித்து வருகிறார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு சிறுமியின் உடலில் இருக்கும் காயங்கள் பற்றி அவரின் மூத்த சகோதரிக்கு சந்தேகம் ஏற்பட்டு விசாரித்த போதே சிறுமிக்கு நடந்த கொடுமைகள் வெளிவந்தது. ஜனவரி மாதத்தில் இருந்து சிறுமியை அவ்வபோது பாலியல் வன்புணர்வு செய்து வந்தது தெரியவந்தது. இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் அயனாவரம் உதவி காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்தனர். இதன்பின் அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு “ போக்ஸோ “ சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

போலீஸ் விசாரணையில் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த சம்பவத்தில் 23 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதில், முதற்கட்டமாக 6 பேர் என மொத்தம் 17 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதில், 66 வயதான குடியிருப்பின் லிப்ட் ஆஃப்ரேடர் ரவிக்குமார் என்பவர் தான் சிறுமியை முதலில் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். வயதானவர் என்றதாலும், அனைவரிடமும் நன்றாக பழகும் எண்ணத்தாலும் சிறுமி ரவிக்குமாருடன் இயல்பாகவே பழகி உள்ளார். ஆனால், ரவிக்குமார் சிறுமியிடம் கத்தியைக் காட்டி பயமுறுத்தி பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். அதன்பின்னர், ரவிக்குமார் மூலம் பலரின் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார் சிறுமி.

சிறுமிக்கு போதை பொருள் கொடுத்த கொடூரர்கள்:  

சிறுமியை வன்புணர்வு செய்தவர்கள் போதைக்கு அடிமையானார்கள் என்பதால் ஒரு கட்டத்தில் சிறுமிக்கும் போதை மருந்துகளை கொடுத்து பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். அதனை வீடியோக்கள், படங்களாக எடுத்து சிறுமியை மிரட்டவும் செய்துள்ளனர். குடியிருப்பு பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் இல்லாத இடமாக பார்த்து சிறுமியை வன்புணர்வு செய்துள்ளனர். மொட்டை மாடி, லிப்ட், குடியிருப்பின் அடித்தளம், ஜிம் மற்றும் பொது கழிப்பிடம் போன்ற பகுதிகளில் சிறுமியை ஜனவரி மாதத்தில் இருந்து தொடர்ந்து பாலியல் வன்புணர்வு செய்து வந்துள்ளனர். 

1. முருகேசன் (54), 2. பரமசிவம் (60), 3. ரவிக்குமார் (66), 4. ஜெய்கணேஷ் (23)- ப்ளம்பர் 5. பாபு (36), 6.  பழனி (40)-காவலாளி  7. தீனதயாளன் (50) லிப்ட் இயக்குபவர் 8. அபிஷேக் (23)- குடியிருப்பு காவலாளி, 9. சுகுமாரன் (60)-குடியிருப்பு காவலாளி 10. பிரகாஷ் குடியிருப்பு காவலாளி (58) , 11. ராஜா குடியிருப்பில் ப்ளம்பர் (32),  12. சுரேஷ் (32)- ப்ளம்பர் 13. சூர்யா (23)- ப்ளம்பர் 14. ஜெயராமன் (26)- எலெக்ட்ரீசியன் 15. ராஜசேகர் (40) 16. குணசேகர்(55)-தோட்ட வேலை   17. உமாபதி (42) ஆகியோர் கைதாகியுள்ளனர்.

கைதானவர்களில் 7 பேர் 50 வயதை கடந்தவர்கள். பேத்தி வயதில் இருக்கும் குழந்தையை இரக்கமில்லாமல் போதை மருத்துகளை கொடுத்து, மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்து வந்துள்ளனர். 17 பேரும் போலீஸில் ஒருவர் பின் ஒருவராக குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளனர்.

குற்றவாளிகளுக்கு அடி :

சிறுமியிடம் இருந்து வாக்குமூலமானது மாஜிஸ்திரேட் மூலம் பதிவு செய்யப்பட்டது. பின் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. சென்னை மகளிர் நீதிமன்றத்தில் கைதான 17 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 31-ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். 

அதன்பின் நீதிமன்றத்தில் இருந்து குற்றவாளிகளை அழைத்து செல்ல படிக்கட்டின் வழியாக நீதிமன்றத்தின் வெளிபுறத்திற்கு செல்லும் பொழுது அங்கிருந்த வழக்கறிஞர்கள் கடுமையாக கோஷமிட்டனர். ஒரு கட்டத்தில் கையில் கிடைத்த குற்றவாளிகளில் சிலரை வழக்கறிஞர்கள் தாக்கவும் செய்தனர். 10 நிமிடம் விடாமல் தாக்கியுள்ளனர். நிலைமையை கண்டு சுதாரித்த போலீசார் குற்றவாளிகளை கோர்ட் உள்ளே இருக்கும் அறையில் வைத்து பூட்டினர்.

வழக்கறிஞர்கள் ஆஜராக மறுப்பு :

  சென்னை சிறுமியின் பாலியல் வன்புணர்வு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு சாதகமாக எந்தவொரு வழக்கறிஞரும் ஆஜராகமாட்டார்கள் என உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் மோகன கிருஷ்ணன் கூறியுள்ளார்.

11 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தவர்களுக்கும், அவர்களுக்கு துணை போனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும், இதில் சம்பந்தப்பட்ட சிலர் குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

போக்ஸோ “  சட்டத்தின்படி சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்யும் குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டும் குற்றங்கள் ஓய்ந்தபாடில்லை. கதுவா சிறுமி ஆசிபாவின் கொடூர பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை சம்பவத்தை தொடர்ந்து நாட்டில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் மீண்டும் தொடர்கிறது. குழந்தைகளுக்கு சமூகத்தில் நடந்து வரும் தவறான செயல்கள் குறித்து எச்சரிக்கை செய்வது இனி வரும் காலங்களில் அவசியமான ஒன்றாகி விட்டது. 

 

Chennai Girl, 11, Sedated And Raped By 17 Men; Accused Thrashed In Court

Lawyers thrash men accused in sexual assault of minor girl-chennai

Add new comment

Image CAPTCHA