இனி இதற்கெல்லாம் ஆதார் கட்டாயமில்லை: உச்ச நீதிமன்ற தீர்ப்பு.

எதற்கெடுத்தாலும் ஆதார் ஆதார் என்று கேட்கிறார்கள் என்பது சாமானிய மக்களின் குமுறல். அரசு நலத் திட்டங்கள் முதல் அனைத்து சேவைகளுக்கும் ஆதார் கட்டாயம் என மத்திய அரசு பல அறிவிப்புகளை அறிவித்தது. ஆதார் தொடங்கியது முதல் அதன் பாதுகாப்பு அம்சங்கள் வரையில் பல வழக்குகளை சந்தித்துள்ளது.

2012-ல் கர்நாடகா உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி முதல் முதலில் ஆதார் அடையாளம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். பல்வேறு வழக்குகளை சந்தித்த ஆதார் வரலாற்றில் மிக முக்கிய விவகாரத்தின் தீர்ப்பு இன்று வெளியாகி உள்ளது.

ஆதார் விவகாரத்தில் கருவிழி மற்றும் கைரேகையை பதிவிடுவது அடிப்படை உரிமைக்கு எதிரானது என்று கேள்விகள் எழுந்தன. இதனை விசாரிக்க 9 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு அமைக்கப்பட்டது. ஆதார் தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானது என்ற விவகாரத்தில் இறுதி தீர்ப்பு வெளியாகியுள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதி ஏகே.சிக்ரி இன்று(26-ம் தேதி) தீர்ப்பை வாசித்தார். அதில், சிறப்பானதை விட தனித்துவமானது என்பதே நல்லது. ஆதார் ஏழை மக்களுக்கும் அதிகாரத்தை அளிக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பயனுள்ளதாகவும், அடையாளத்தையும் அளிக்கிறது.

அடிப்படை அந்தரங்க தனிப்பட்ட உரிமைகளை பாதிக்கும் என கருதுவதற்கெல்லாம் ஆதார் கட்டாயமில்லை எனவும் அந்தரங்க தனிப்பட்ட உரிமைகளை பாதிக்க வாய்ப்பில்லை எனக் கருதுவதற்கு ஆதார் கட்டாயம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதன்படி, ஆதார் இவற்றிற்கு கட்டாயம்:

  • பான் கார்டு
  • வருமான வரி தாக்கலின் போது
  • மானியம் மற்றும் நலத்திட்டங்களுக்கு.

ஆதார் இவற்றிற்கு கட்டாயமில்லை:

  • வங்கி கணக்கு இணைப்பில்
  • சிம் கார்டு
  • கல்வி திட்டங்கள்(UGC, NEET, CBSC)
  • குழந்தைகள் பள்ளியில் சேர்வதற்கும் சர்வ ஷிக்சா அபியான் திட்டத்திற்கும் கட்டாயமில்லை (*வேறு மானியம் மற்றும் நலத்திட்டம் பெற அவசியம்)
  • தனியார் நிறுவனங்களில்.

ஆதார் சட்டத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Please complete the required fields.




Back to top button