ஆவின் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டில் எத்தனை சதவீதம் கொழுப்புச் சத்து உள்ளது – யூடர்ன் முன்னெடுத்த ஆய்வறிக்கை முடிவு !

வின் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டில் 6 சதவீதம் கொழுப்புச் சத்து இருப்பது ஆய்வக உதவியுடன் யூடர்ன் மேற்கொண்ட பரிசோதனையில் நிரூபணமாகியுள்ளது.

தமிழ்நாடு அரசு கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஆவின் நிறுவனத்தின் பச்சை நிற பால் பாக்கெட் (நிலைப்படுத்தப்பட்ட பால்) நிறுத்தப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியான நிலையில் அதற்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் எதிர்ப்புகள் வந்தது. எனவே அம்முடிவை அரசு கைவிட்டு மீண்டும் எப்போதும் போல பச்சை நிற பால் பாக்கெட் விநியோகம் செய்யப்படுகிறது. 

Archive link

இதற்கிடையில் ஆவினின் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டில் (நிறை கொழுப்பு பால்) 6 சதவீதம் கொழுப்புச் சத்து இருக்க வேண்டும். ஆனால், 4.79 சதவீதம் மட்டுமே கொழுப்புச் சத்து இருப்பதாக ‘Chennai Testing Laboratory’ என்னும் ஆய்வகத்தின் முடிவை பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை அவரது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 

அக்டோபர் மாதம் 31ம் தேதி வெளியிடப்பட்ட ஆய்வு முடிவினை அண்ணாமலை நவம்பர், 20ம் தேதி டிவிட்டரில் பதிவிட்டார். அந்த ஆய்வக அறிக்கையில் எந்த ஒரு இடத்திலும் ஆவின் எனக் குறிப்பிடப்படவில்லை. மேலும் பரிசோதனைக்கு அளிக்கப்பட்ட பால் ‘PET Container’ மூலம் கொடுக்கப்பட்டுள்ளது இது ஆவின் பால் தான் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை என்ற எதிர் வாதங்களும் பேசப்பட்டது.

அண்ணாமலையின் இந்த குற்றச்சாட்டு பற்றி பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேசுகையில், அண்ணாமலை வெளியிட்ட ஆய்வறிக்கை போலியானது எனக் கூறினார்.

யூடர்ன் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு : 

இந்த இருவேறு கருத்துக்களின் உண்மையினை கண்டறிவதற்காக ஆவின் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டை யூடர்ன் சார்பில் நவம்பர் 21ம் தேதி மூன்று ஆய்வகங்களில் பரிசோதனை அளித்தோம். அதில் அண்ணாமலை குறிப்பிட்டிருந்த ‘Chennai Testing Laboratory’ உட்பட ’Monarch Biotech’, ‘Scientific Food Testing’ ஆகிய ஆய்வகங்களும் அடங்கும். 

அவற்றின் முடிவுகள் : 

    • Chennai Testing Laboratory – 6.07%

    • Scientific Food Testing – 6.12%

    • Monarch Biotech – 6.11%

இந்த மூன்று ஆய்வகங்களில் Chennai Testing Laboratory மட்டும் தங்களது ஆய்வு முடிவுகளில் பரிசோதனை செய்யப்படும் நிறுவனத்தின் பெயரைக் குறிப்பிடுவதில்லை என அந்நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. மற்ற இரண்டு ஆய்வகங்களிலும் ஆவின் பெயர் குறிப்பிடப்பட்டே முடிவுகள் அளிக்கப்பட்டது.

1. Chennai Testing Laboratory, 2. Scientific Food Testing

மூன்று ஆய்வக முடிவுகளைக் கொண்டு பார்க்கையில் ஆவின் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டில் நிர்ணயிக்கப்பட்ட 6 சதவீதம் கொழுப்புச் சத்து இருப்பதை உறுதிப்படுத்த முடிகிறது. மேலும், SNF-யும் (Solids not fat) நிர்ணயிக்கப்பட்ட அளவான 9 சதவீதம் உள்ளது. 

Monarch Biotech

இதேபோல் தனியார் நிறுவனமான ‘ஆரோக்கியா’ பாலும் சோதனைக்கு அளிக்கப்பட்டது. அதிலும் நிர்ணயிக்கப்பட்ட அளவு கொழுப்புச் சத்து உள்ளதை  உறுதி செய்ய முடிந்தது. 

இந்த ஆய்வின் மூலம் ஆவின் ஆரஞ்சு நிற பால் பாக்கெட் கொழுப்புச் சத்து நிர்ணயிக்கப்பட்ட அளவை விடக் குறைவாக உள்ளது என அண்ணாமலை கூறிய குற்றச்சாட்டு உண்மை அல்ல என்பதை உறுதிப்படுத்த முடிகிறது.

மேலும் படிக்க : ஈரோடு தேர்தல் முடிந்தவுடன் ஆவின் தயிர் விலையை உயர்த்தியதாக அதிமுகவினர் பரப்பும் பழைய செய்தி !

இதற்கு முன்னர் ஆவின் குறித்துப் பரப்பப்பட்ட போலி செய்திகள் பற்றிய உண்மைகள் யூடர்னில் கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க : திமுக ஆட்சியில் ஆவின் பொருட்களில் ஹலால் சான்றிதழ் கொண்டு வந்ததாக வதந்தி பரப்பும் பாஜகவினர்

Please complete the required fields.




Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader