This article is from Mar 03, 2019

அபிநந்தன் பெயரில் போலி ட்வீட்டர் கணக்கு & நடனமாடும் வீடியோ.

மதிப்பீடு

இந்திய விங் கம்மாண்டர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த பொழுது பாகிஸ்தான் ராணுவ வீரர்களுடன் நடனமாடியதாக சமூக வலைதளத்தில் வைரலாகியது.

வீடியோ பதிவு தெளிவாக இல்லாத காரணத்தினாலும், அவர் அணிந்து இருந்த பச்சை நிற உடையில் ஒருவர் நடனமாடியதாலும் அபிநந்தன் தான் நடனமாடி உள்ளார் என நம்பினர். ஃபேஸ்புக்கில் அபிநந்தன் நடனம் என்று தேடினால் இவ்வாறு காண்பிக்கின்றது.

 

செய்தி : Fake 

அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவ வீரர்களுடன் நடனமாடியதாக பரவும் வீடியோவில் இருப்பவர் விங் கம்மாண்டர் அபிநந்தன் இல்லை, பாகிஸ்தான் ராணுவ அதிகாரி.

பிப்ரவரி 24 , 2019 பாகிஸ்தானை சேர்ந்த Dugdugee என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் PAF ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் நடனமாடுவதாக குறிப்பிட்டு இதைப் பதிவிட்டுள்ளனர்.

மேலும், வீடியோவில் இருப்பது அபிநந்தன் எனக் கூறுபவரின் உடையில் பாகிஸ்தான் கொடி இருப்பதும், அவரின் முகமும் தெளிவாக தெரிகிறது.

பாகிஸ்தான் ராணுவ வீரரை  அபிநந்தன் எனக் கூறி தவறாக பகிர்ந்து உள்ளனர். இந்திய அளவில் அனைத்து மொழிகளிலும் தவறாக பரவியும் உள்ளது.

அபிநந்தன் ட்வீட்டர் கணக்கு  : 

அபிநந்தன் பெயரில் பாகிஸ்தான் ராணுவத்தை புகழ்ந்து பேசியும், பாகிஸ்தான் மக்களுக்கு நன்றி தெரிவித்தும், இந்திய ஊடகங்கள் பற்றி பதிவிட்டு இருக்கும் இந்த ட்வீட்டர் பதிவு சமூக வலைதளங்களில் வைரல் ஆகியவை.  இந்த பதிவு 28 பிப்ரவரி-ல் பதிவிடப்படுள்ளது.

செய்தி : Fake 

அபிநந்தன் பெயரில் போலி ட்வீட்டர் கணக்குகள் மூலம் இவ்வாறு தொடர்ந்து பல ட்வீட்கள் இடப்பட்டுள்ளன. அபிநந்தன் பெயரில் உள்ள ட்வீட்டரில் அந்த கணக்கு பிப்ரவரி 2019-ல் தான் தொடங்கி உள்ளதாக காண்பிக்கின்றது. அவர் பாகிஸ்தான் வசம் இருந்த நேரத்தில் போலி ட்வீட்கள் வெளியாகி உள்ளன.

அபிநந்தன் பெயரில் வெளியான ட்வீட்களில் #pakistan_zindabad என்றெல்லாம் ஹஷ்டாக் இடம் பெறுவதை பார்க்கையில், நிச்சயம் இது பாகிஸ்தானியர் ஒருவர் போலியாக பதிவிட்ட பதிவுகள் என எளிதாக அறியலாம்.

மேலும், Abhinandan Varthaman என்ற பெயரில்  ” official ” ட்வீட்டர் பக்கம் என தாங்களே கூறிக் கொண்டு பல ட்விட்டர் கணக்குகள் அதிகமாக உள்ளன. ஆகையால், அபிநந்தன் பெயரில் வெளியாகும் பதிவுகள் எதுவாக இருந்தாலும் உண்மையா என அறிந்து பகிரவும்.

 

 

Please complete the required fields.




Back to top button
loader