நிலக்கரி இறக்குமதி வரியை குறைத்து அதானிக்கு உதவும் மோடி அரசு ?

இந்தியாவின் 2வது மிகப்பெரிய பணக்காரராக உள்ள குஜராத்தைச் சேர்ந்த கெளதம் அதானியின் அதிவேக வளர்சிக்கு ஆளும் பாஜக அரசும், பிரதமர் மோடியும் பெரிதும் உதவுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் அரசியல் களத்தில் எழுவதை பார்த்து வருகிறோம்.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி, நரேந்திர மோடி அரசு தொழிலதிபர் அதானிக்கு உதவும் வகையில் நாட்டிற்கு தேவையான நிலக்கரியை இறக்குமதி செய்வதற்கான வரியை குறைத்தும், ஒப்பந்தங்களை வழங்கி இருப்பதாகவும், ஆளும் அரசை ” கார்ப்பரேட் வகுப்புவாத கூட்டணி ” எனக் கூறி கடுமையாக விமர்சித்து இருக்கிறார்.

Archive link 

அதானியின் ஆஸ்திரேலியா நிலக்கரி சுரங்கம் : 

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் 16.5 பில்லியன் டாலர்கள் மதிப்பில் மிகப்பெரிய கர்மைக்கல் நிலக்கரி சுரங்கத் திட்டத்தை அமைக்க அதானி நிறுவனத்திற்கு ஆஸ்திரேலியா அரசு 2017-ல் ஒப்புதல் அளித்த போதே அந்நாட்டு மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

2021-ம் ஆண்டு டிசம்பரில் சுற்றுச்சூழல் அமைப்புகளின் போராட்டங்களுக்கு மத்தியில் ஆஸ்திரேலியாவின் கர்மைக்கல் நிலக்கரி சுரங்கத்தில் இருந்து எடுக்கப்பட்ட நிலக்கரிகளை ஏற்றுமதி செய்ய அதானி நிறுவனம் தொடங்கியது. கர்மைக்கல் நிலக்கரி சுரங்கத்தில் இருந்து ஆண்டிற்கு 10 மில்லியன் டன் நிலக்கரியை எடுக்க அதானி நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.

” 2022 ஏப்ரல் மாதம் நிலக்கரி விநியோகம் இல்லாததால் இந்தியா கடுமையான மின் பற்றாக்குறையை சந்தித்தது. மாதத்தின் 8 நாட்களில் 100 மில்லியன் யூனிட்களுக்கு ஆற்றல் பற்றாக்குறை ஏற்பட்டது ” என எகனாமிக் டைம்ஸ் செய்தியில் வெளியானது.

இந்தியாவில் நிலவிய நிலக்கரி பற்றாக்குறை காரணத்தால் தேவைக்காக இறக்குமதி செய்யப்படும் நிலக்கரிக்கு விதிக்கப்படும் வரியை 2.5%-ல் இருந்து 0% ஆக குறைத்து இந்திய அரசு மே  21-ம் தேதி அறிவித்து இருந்தது.

மேலும், ” இந்த ஆண்டு ஜூலை முதல் 2023 ஜூலைக்குள் 12 மில்லியன் டன்(1.2 கோடி டன்) நிலக்கரியை கோல் இந்தியா நிறுவனம் இறக்குமதி செய்யுமாறு இந்திய அரசு தெரிவித்து உள்ளது ” என ஜூன் 4-ம் தேதி பிசினஸ் ஸ்டாண்டர்டு செய்தியில் வெளியாகி இருக்கிறது..

இதையடுத்து, இந்தியாவின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிறுவனமான NTPC (அரசு), அதானியின் நிறுவனங்களுக்கு ரூ.8,308 கோடி மதிப்பில் 6.25 மில்லியன் டன் நிலக்கரியை இறக்குமதி செய்ய பல ஒப்பந்தங்களை வழங்கியது.

மார்ச் மாதத்தில் நிலக்கரி நெருக்கடி வந்த போது என்சிபிசி நிறுவனம் 5.75 மில்லியன் டன் நிலக்கரியை இறக்குமதி செய்ய 5 டெண்டர்களை வழங்கியது. அந்த அனைத்து ஒப்பந்தங்களும் அதானியின் நிறுவனத்திற்கே சென்றது. இந்த ஒப்பந்தகளின் மொத்த தொகை ரூ..8,422 கோடி.

நிலக்கரி இறக்குமதியில் அதானி நிறுவனமே தொடர்ந்து பல்வேறு ஒப்பந்தங்களை பெற்று வருவதன் மூலம் இந்தியாவின் நிலக்கரி தேவையானது அதானி எனும் ஒற்றை நிறுவனத்தை மையப்படுத்தி உள்ளதாக மாறி வருகிறது. இதன்மூலம் அதானியின் நிலக்கரி இறக்குமதி தொழிலுக்கு ஆளும் மோடி அரசு உதவி புரிவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.

links : 

Adani Group to start coal export from Australian mine this week

achieving 2022 renewable energy targets would have averted indias april power crisis

.
.
Please complete the required fields.




Back to top button
loader