“விநாயகர் என்னும் அரசியல் கருவி” வீடியோவின் ஆதாரத் தொகுப்பு

இந்தியாவில் கொண்டாடப்படும் மதரீதியான விழாக்களும், அதை மக்கள் கொண்டாடும் விதமும் ஒரு அழகான புகைப்படம் போல தான் இருக்கும், ஆனால் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் வரலாறு ரீதியாக பல கலவரங்களுக்கும், பல மதரீதியான பிரச்சினைகளுக்கும் தொடக்க புள்ளியாக அமைத்து இருக்கிறது.

விநாயகர் சிலை ஊர்வலம் செல்லும் பாதைகளில் அடையாள அணிவகுப்பு, பலத்த போலீஸ் பாதுகாப்பு, பதற்றமான வழிகளில் ஊர்வலம் செல்ல தடை என கொண்டாட்ட மனநிலையை தாண்டி ஒரு பயமும், பதற்றமும் சூழ்வதற்கு காரணம் யார் ?

தமிழ்நாட்டில் உள்ள மாரியம்மன் மற்றும் நாட்டார் தெய்வ வழிபாட்டில் இந்து, முஸ்லீம், கிறிஸ்துவ மக்கள் அனைவரும் ஒற்றுமையாக கொண்டாடி வருகின்றனர். அவரவர் மத விழாக்களில் மாற்று மதத்தினருக்கு மரியாதையும், அதேபோல உதவிகளையும் செய்து வருகின்றனர். சமீபத்தில் திருச்சி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவிலில் நடந்த பால்குடம் விழாவில் ஒரு முஸ்லிம் வியாபாரி, வெயில் காரணமாக கால் சுடக்கூடாது என்பதற்காக பெண் பக்தருக்கு தண்ணீரை பீச்சு அடித்தார். இச்செயல் அங்கு இருப்போர் மட்டுமின்றி பலரையும் பாராட்ட செய்தது.

விநாயகர் சதுர்த்தி விழா என்பது இந்து மக்களினால் பல ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வரும் நிகழ்வு, ஆனால் அதன் வடிவம் 19வது நூற்றாண்டில் இருந்து மாற தொடங்கியது. அந்த தொடக்க புள்ளியில் இருந்து தான் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் குறித்த சர்ச்சைகளும், பிரச்சனைகளும் அதன் பின் நடக்கும் மதரீதியான வன்முறைகளும் காரணமாக அமைந்துள்ளன.

விடுதலைப் போராட்ட தியாகியும், சுவராஜ் இயக்கத்தின் தந்தை என போற்றப்படும் பால கங்காதர திலகருக்கும், விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கும் ஒரு பெரிய வரலாற்று ரீதியான தொடர்பு உள்ளது. 1891 ஆம் ஆண்டு அன்றைய ஆங்கிலேயர் ஆட்சியால் கொண்டுவரப்பட்ட பாலிய விவாக தடை சட்டத்திற்கு எதிராக இந்து மக்களை ஒன்றிணைப்பதற்கு விநாயகர் சதுர்த்தி ஊர்வலகங்களை திலகர் பயன்படுத்தினார் என பல ஆதாரங்களும் உள்ளன.

ஆங்கிலேயர் ஆட்சி கீழிருந்த அன்றைய இந்தியாவில் இந்துக்களின் மரபுப்படி ஒரு பெண் பருவமடைவதற்கு முன் திருமணம் செய்ய வேண்டும் என ஒரு கட்டாயம்  மனுரீதியாகவும், சாஸ்திரங்கள் ரீதியாகவும் இருந்து வந்தன. இதற்கு எதிராக பிரிட்டிஷ் அரசு ஒரு சட்டம் கொண்டுவர எண்ணியது. இதற்கு காரணமாக அமைந்தது கல்கத்தாவை சேர்ந்த 10 வயது சிறுமி புல்மோனி மரணம், தன்னைவிட இருபது வயது மூத்த ஆணை திருமணம் செய்து வல்லுறவால் மரணமடைந்த செய்தி இந்தியாவை மிகவும் உலுக்கியது. அதன் விளைவாக கொண்டுவரப்பட்ட சட்டம் தான் பாலிய விவாகத் தடைச் சட்டம் 1891, இதை எதிர்த்து தான் இந்து மக்களை ஒன்றிணைக்க வேண்டும் என திலகர் குரல் கொடுத்து அந்த ஒன்றிணைக்கும் விழாவை விநாயகர் சதுர்த்தி ஊர்வலமாக பயன்படுத்தினார். மேலும் இச்சட்டம் குறித்து திலகர் கூறியதாவது,

“இச்சட்டம் இந்து மக்களுக்கும், இந்திய மக்களுக்கும் எதிராக உள்ளது. எங்களின் பெண்களின் திருமண வயதை நாங்களே முடிவு செய்து கொள்கிறோம். அதுவும் இல்லாமல் ஒரு பெண் சாஸ்திரங்கள்படி வயது வருவதற்கு முன்னே திருமணம் செய்து இருக்க வேண்டும். அதனால் எங்கள் சாத்திரங்களிலும், சம்பிரதாயங்களையும் ஆங்கிலேயர்கள் தடையிட, தலையிட வேண்டாம்” என கூறியிருந்தார்.

இதுபோல பெண்களை பாதுகாக்க கொண்டுவரப்பட்ட சட்டத்தை  எதிர்க்க விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் பயன்பட்ட வரலாறு இந்தியாவில் என்றால், தமிழ்நாட்டின் இதன் வரலாறு வேறு மாதிரி இருக்கிறது.

1980 தொடக்கத்தில் தமிழ்நாட்டில் விநாயகர் ஊர்வலங்கள், விநாயகர் சிலைகளை வைத்து கொண்டாடும் வழக்கம் இந்து முன்னணி அமைப்பினாலும், ஆர்எஸ்எஸ் பின்புலத்தினாலும் சென்னையில் இந்த கலாச்சாரம் அறிமுகப்படுத்தப்படுகிறது. அவர்கள் இந்த ஊர்வலங்களை ஒரு அரசியல்ரீதியாகவே அணுகினர்.

சிலைக்கான நிதியாக உள்ளூர் வியாபாரிகள், பிரமுகர்களிடம் பணம் வசூல் செய்து இலவசமாக விநாயகர் சிலைகளை மக்களிடமும், பொது இடங்களிலும் வைத்து வழிபட்டனர், தொடக்கத்தில் சிறுசிறு பிரச்சனைகளாக இருந்து வந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் 90களின் இறுதியில் ஒரு உச்சகட்ட பதட்ட நிலையை அடைந்தது. ஊர்வலங்களை செல்லும் பாதைகளை தாண்டி சிறுபான்மை மக்கள் இருக்கும் இடங்களில் செல்ல அனுமதி கேட்பது, காவல் துறையினர் அனுமதி அளிக்காவிட்டால் போராட்டம், மறியல் செய்து பிரச்சனையை கொதிநிலையில் வைத்திருப்பதை இந்து முன்னணி மற்றும் இதர இந்து அமைப்புகள் செய்துவந்தனர். இதனை மக்களிடமும் எடுத்துச் சென்ற இந்து அமைப்பினர் விநாயகர் சிலைகளை அனைத்து இல்லங்களிலும் வழிபட்டு அதை ஊர்வலங்களாக எடுத்து வர செய்தனர்.

இன்று பொது நீரோடையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் ஒரு பெருவிழாவாக காணப்பட்டாலும், அவற்றின் வரலாற்றுப் பின் குறிப்பையும், அதன் முதன்மையான நோக்கங்கள் எதுவென்று ஆராய்ந்தால் இருப்பையும்,  சிறுபான்மையினர் மேல் உள்ள அவர்களின் வெறுப்புமே முதன்மையாக இருப்பதை நம் கண்முன் நிறுத்துகிறது. ஆனால் தமிழ்நாட்டு போன்ற சமூக நீதி சார்ந்த மாநிலங்களில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் நடக்கும் பிரச்சனைகள் மிகப்பெரிய பேசு பொருளாகவும், அதை அடுத்த கட்ட அரசியலுக்கு இங்கு பயன்படுத்தும் இயக்கங்களும் பெருகி வருவதை நாம் மறந்து விட முடியாது.

Proof links : 

communal-tension-mounts-during-ganesh-chaturthi-procession-in-madras

Bal Gangadhar Tilak: The Misogynist, Casteist, Xenophobic, Communal, Pro British Hindu Leader

Muslim Man from Tamil Nadu Wins Hearts by Helping Hindu Pilgrims Cope with Heat

In Tamil Nadu’s Kalathur, Hindus & Muslims give peace a chance

bal-gangadhar-tilak-here-are-some-lesser-known-facts-about-the-father-of-swarajya

விநாயகர் சதூர்த்தி ஊர்வலங்கள் தமிழ்நாட்டில் இந்து அமைப்புகளின் வளர்ச்சிக்கு உதவியிருக்கின்றனவா ?

Please complete the required fields.




Back to top button
loader