நெறியாளர் முஸ்லீம் என்பதால் பார்க்க மறுத்த இந்து அமைப்பின் தலைவர்.

சமீபத்தில் மத்தியப் பிரதேச மாநிலம் ஜபால்புர் பகுதியை சேர்ந்த அமித் சுக்லா என்பவர் இந்து அல்லாதவர் டெலிவரி செய்யும் உணவு வேண்டாம், அதற்கான பணமும் வேண்டாம், தன்னுடைய ஆர்டரை நீக்குமாறு கூறியதாக தன் ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். அதற்கு சோமோட்டோ நிறுவனம் ” உணவிற்கு மதமில்லை ” என ட்விட்டரில் பதில் அளித்த இருந்தது.
Food doesn’t have a religion. It is a religion. https://t.co/H8P5FlAw6y
— Zomato India (@ZomatoIN) July 31, 2019
மேலும் படிக்க : இந்து அல்லாதவர் டெலிவரி செய்யும் உணவு எனக்கு வேண்டாம் என்றவருக்கு Zomato-வின் பதிலடி.
சோமோட்டோ சம்பவம் நாடு முழுவதிலும் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக தொலைக்காட்சி செய்தி சேனல்களில் விவாதங்களும் நடைபெற்று வந்தன. அதில், நியூஸ் 24 என்ற ஹிந்தி சேனலில் விவாத நிகழ்ச்சியை அந்நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.
இந்த விவாத நிகழ்ச்சிற்கு ” ஹம் ஹிந்து(நாம் இந்து) ” என்ற வலதுசாரி அமைப்பின் தலைவரான அஜய் கவுதமிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இந்தியாவில் ” இந்து ராஜ்ஜியம் ” அமைப்பதை கொள்கையாக கொண்டு 2015-ல் ஹம் ஹிந்து அமைப்பை தொடங்கப்பட்டது.
சோமோட்டோ சம்பவம் குறித்த விவாதம் நிகழ்ச்சியில் செய்தி சேனலின் நெறியாளரை அஜய் கவுதம் பார்க்க மறுத்து தன் கண்களை கைகளால் மறைத்துக் கொண்டே பேசியுள்ளார். அந்த விவாதத்தை நடத்திய நெறியாளர் பெயர் காலீத் என அறிந்ததால் அவரை பார்க்க மறுத்து கைகளை கொண்டு கண்களை மறைத்தே பதில் அளித்து இருக்கிறார்.
News24 के एंकर Saud Md. Khalid को देखकर अजय गौतम ने अपना मूंह छुपाया…
(link: https://t.co/r2V0Gs7PcS )
@sandeep_news24 @maulanadehlavi @ashutosh83B @saud_smk @manakgupta @sakshijoshii pic.twitter.com/lb7VfUxHyJ— News24 India (@news24tvchannel) August 1, 2019
அஜய் கவுதம் எவ்வளவு நேரம் தன் கண்களை மறைத்துக் கொண்டே பேசினார் எனத் தெரியவில்லை. இந்த விவாத நிகழ்ச்சியை நியூஸ் 24 சேனல் ஒளிபரப்பு செய்யவில்லை. ஆனால், தன்னுடைய ட்விட்டரில் பக்கத்தில் விவாத நிகழ்ச்சியின் 32 நொடிகள் வீடியோவை ஆகஸ்ட் 1-ம் தேதி பதிவிட்டு உள்ளது.
we at the newsroom of @news24tvchannel are in shock at the inappropriate & condemnable behaviour of Mr Ajay Gautam . Ethics of journalism do not allow to give platform to such devisive voices & gestures . @news24tvchannel has decided not to invite Mr Ajay Gautam to its studio .
— Anurradha Prasad (@anurradhaprasad) August 1, 2019
ட்விட்டரில் வெளியான வீடியோ வேகமாக பகிரப்பட்டு வைரலாகியது. இதையடுத்து, அஜய் கவுதமிற்கு எதிராக பலரும் தங்களின் கண்டனங்களை தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இனி அஜய் கவுதம் எந்தவொரு நிகழ்ச்சியிலும் அழைக்கப்பட மாட்டார் என நியூஸ் 24 சேனலின் மூத்த ஆசிரியர் அனுராதா பிரசாத் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
கடந்த சில ஆண்டுகளாக மத பிரிவினை சார்ந்த கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பரவி நாட்டின் அமைதிக்கு அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், நெறியாளர் முஸ்லீம் என்பதால் அவரை பார்க்க கூட மறுத்த அஜய் கவுதமிற்கு சமூக வலைதளங்களில் பலரும் கண்டனங்களை தெரிவிக்கின்றனர்.
சாதி, மதம், இனம் என அனைத்தையும் கடந்து ஒருவரை சக மனிதனாக பார்க்க இயலாத உள்ளத்தை அவர் வணங்கும் கடவுளும் கூட ஏற்கமாட்டார். இதுபோன்ற சம்பவங்களில் இருந்து வேற்றுமையை மறந்து ஒற்றுமை பிணைப்பு உண்டாக வேண்டும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
Proof :
Man from right wing group covers eyes on seeing Muslim anchor, sparks outrage online
Twitter users slam Hum Hindu Founder Ajay Gautam for closing eyes on seeing Muslim anchor on TV
The biggest question: should religion be seen by delivery of food?