This article is from Jan 09, 2021

அமெரிக்கப் போராட்டத்தில் இந்திய தேசியக்கொடியை ஏந்தியவர்கள் யார் ?

அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் தோல்வியுற்ற டொனால்டு ட்ரம்புக்கு ஆதரவாக ஜனவரி 6-ம் தேதி வாஷிங்டன் கேபிடல் பகுதியில் நடைபெற்ற போராட்டம் கலவரத்தில் முடிந்து உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்தது. போராட்டத்தில் ட்ரம்பிற்கு ஆதரவு தெரிவித்து இந்திய தேசியக் கொடி இடம்பெற்றது இந்திய அளவில் கண்டனத்தைப் பெற்றது.

ட்ரம்பிற்கு ஆதரவாக இந்திய தேசியக் கொடியை காண்பித்தவர்களில் ஒருவர் வெர்ஜினியாவில் வசிக்கும் கேரளாவைச் சேர்ந்த வின்சென்ட் சேவியர் என அடையாளம் காணப்பட்டார். வின்சென்ட் சேவியர்  இந்திய தேசிய காங்கிரஸ் ஆதரவாளர் என்றும், அவர் காங்கிரஸ் எம்.பி சசி தரூர் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வந்தன.

Twitter link | Archive link

இந்திய மூவர்ணக் கொடியை போராட்டத்தில் பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களில் பாஜக எம்.பி வருண் காந்தியும் ஒருவர். சில இந்தியர்கள் ட்ரம்பின் சித்தாந்தத்தைக் கொண்டிருப்பதாக எம்.பி சசி தரூர் வருண் காந்திக்கு பதில் அளித்து இருந்தார்.

Twitter link | Archive link

” அமெரிக்க தேசபக்தர்கள் – வியட்நாமிய, இந்திய, கொரிய, ஈரானிய என பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் வாக்காளர் மோசடி தொடர்பாக ட்ரம்பிற்காக ஒற்றுமையுடன் பேரணியில் இணைந்ததாக ” பிற நாடுகளின் கொடிகள் இடம்பெற்ற புகைப்படங்களுடன் சசி தரூர் மற்றும் வருண் காந்தியை டாக் செய்து வின்சென்ட் சேவியர் ட்வீட் செய்து இருக்கிறார்.

டிரம்ப் ஆதரவாளரான வின்சென்ட் சேவியர் அமெரிக்காவில் உள்ள மலையாளி வெளிநாட்டு சமூகத்தின் முக்கியமான உறுப்பினர். இவர் இந்தோ-அமெரிக்க மையத்தை தொடங்கியதாகவும், இந்த மையம் இரு நாட்டின் உறவுகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துவதாக கூறப்படுகிறது. 2014 முதல் 2016 வரை அமெரிக்காவின் மலையாள சங்கங்கள் கூட்டமைப்பின் துணைத் தலைவராக வின்சென்ட் சேவியர் இருந்துள்ளார்.

வின்சென்ட் சேவியர் காங்கிரஸ் எம்.பி சசி தரூர், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்சிவா ஐயாத்துரை மற்றும் பாஜக எம்பி பூனம் மகாஜன் ஆகியோருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் கிடைத்துள்ளன.

Twitter link | Archive link 

” வன்முறைக்கு நான் வருந்துகிறேன், ஆனால் அங்கு இருப்பதற்கு நான் வருத்தப்படவில்லை. இது ஒரு கலவரம் அல்ல, அமைதியான எதிர்ப்பு ” என இந்திய தேசியக் கொடியை ஏந்திய குடியரசுக் கட்சி ஆதரவாளர் வின்சென்ட் சேவியர் நியூஸ்18-க்கு அளித்த பேட்டி வெளியாகி இருக்கிறது.

வின்செட் சேவியரை போன்று இந்திய தேசியக் கொடியை ஏந்திய மற்றொரு இந்தியரின் புகைப்படம் அதிகம் கவனம் பெறவில்லை. வின்சென்ட் சேவியர் அருகே இந்திய தேசியக் கொடியுடன் இருக்கும் நபரின் பெயர் கிருஷ்ணா குதிபதி.

Archive link 

ட்ரம்ப் ஆதரவு போராட்டத்தில் இந்திய தேசியக் கொடியை ஏந்தியவர்களில் ஒருவரான கிருஷ்ணா குதிபதி என்பவரின் புகைப்படங்கள் மற்றும் அவர் பாஜக எம்.பி சுப்ரமணியன் சுவாமி உடன் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் இணைத்து ஆல்ட் இணையதளத்தின் இணை நிறுவனர் முகமத் ஜூபையர் தொடர்ச்சியாக ட்வீட் செய்து இருக்கிறார்.

Archive link 

2018-ல் பாஜகவின் எம்.பி சுப்ரமணியன் சுவாமியின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தலைவருடன் அமெரிக்காவில் எடுத்துக் கொண்ட புகைப்படம் பதிவாகி இருக்கிறது. கிருஷ்ணா குதிபதி விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் வாஷிங்டன் தலைவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க கேபிடல் போராட்டத்தில் ட்ரம்பிற்கு ஆதரவாக இந்திய தேசியக் கொடியை ஏந்தியவர் யார் என்பதை விட அவர்கள் இந்தியாவில் எந்த கட்சிக்கு ஆதரவானவர்கள் என விவரம் தேடுவதிலேயே பலரும் முனைப்பாக உள்ளனர்.

Please complete the required fields.




Back to top button
loader