This article is from Sep 20, 2020

தாவூத் இப்ராஹிம் உடன் அமிதாப் பச்சன் இருப்பதாக வதந்தி| புகைப்படத்தில் இருப்பவர் யார் ?

பல ஆண்டுகளாக சர்வதேச போலீசாரால் தேடப்படும் மும்பை நிகழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் பதுங்கி இருப்பதாக தகவல்கள் தொடர்ந்து வெளியாவதுண்டு. அவருக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுப்பதாக கூறும் குற்றச்சாட்டுகளும் எழுவதுண்டு. ஆனால், இன்றுவரை தாவூத் இப்ராஹிமை போலீசாரால் பிடிக்க முடியவில்லை.

இந்நிலையில், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் உடன் தாவூத் இப்ராஹிம் இருப்பதாக இப்புகைப்படம் இந்திய அளவில் சமூக வலைதளங்களில் வைரலாகத் தொடங்கியது. தற்போதுவரை தாவூத் உடன் தொடர்பில் இருக்கிறார்கள் எனக் கூறி அமிதாப் பச்சன் மீது வசைப்பாடத் துவங்கினர். ஆனால், அந்த புகைப்படத்தில் இருப்பவர் தாவூத் இப்ராஹிம் இல்லை.

அப்புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2010 மார்ச் 25-ம் தேதி டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியில் அமிதாப் பச்சன் அசோக் சவான் உடன் இருப்பதாக இப்புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அசோக் சவான் 2008 முதல் 2010 வரை மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராக இருந்தவர். 2010-ல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வர் உடன் அமிதாப் பச்சன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தாவூத் இப்ராஹிம் என வதந்தியை பரப்பி வருகிறார்கள்.

Twitter link | archive link

சமூக வலைதளத்தில் வைரலான புகைப்படம் குறித்து அபிஷேக் பச்சனும் தன் ட்விட்டர் பக்கத்தில்விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் படிக்க : சக்திமானுக்கும் போலி ட்வீட்டால் பிரச்சனை.. ஜெயா பச்சனை தாக்கி போலி ட்வீட் !

இதற்கு முன்பாக, சக்திமான் தொலைக்காட்சி நிகழ்ச்சி நடிகர் முகேஷ் கண்ணா பெயரில் போலியான ட்விட்டர் பக்கம் உருவாக்கப்பட்டு ஜெயா பச்சன் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோரை புறக்கணிப்பதாக ட்வீட் செய்து வைரலாகியது. அது குறித்து நாம் கட்டுரை வெளியிட்டு இருந்தோம். பாலிவுட் உலகில் போதைப் பொருள் பிரச்சனை இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் காரணமாகவே இப்படி போலியான செய்திகளும் பரப்பப்படுகின்றன.

Link : 

Ashok Chavan with Amitabh Bachchan

Please complete the required fields.




Back to top button
loader