இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் வெப்பநிலை.. ‘இந்திய அரசின் சுற்றுச்சூழல் அறிக்கை 2024’ வெளியிட்டுள்ள தரவுகள் இதோ!

மே 31, 2024 அன்று அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்துடன் (Centre for Science and Environment), டிடவுன் டு எர்த் (Down To Earth) பத்திரிக்கையும் இணைந்துஇந்திய அரசின் சுற்றுச்சூழல் அறிக்கை 2024” என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி 2023 ஆம் ஆண்டிற்கான இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (IMD) தரவுகளின் அடிப்படையில், இந்தியா 2023 இல் தனது இரண்டாவது வெப்பமான ஆண்டை (Second-Hottest Year) பதிவுசெய்துள்ளதாக அறிக்கை கூறுகிறது. 

அதிக பாதிப்புக்குள்ளான நாடுகள்:

2023 ஆம் ஆண்டில் தீவிர வானிலை நிகழ்வுகளால் சுமார் 109 நாடுகள் இழப்புகளை சந்தித்துள்ளன. இதில் குறிப்பாக ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியாவில் உள்ள நாடுகள் அதிகப் பங்கைப் பெற்றுள்ளன.

தீவிர வானிலை நிகழ்வுகளால் இந்தோனேசியாவில் மட்டும் அதிகபட்சமாக கிட்டத்தட்ட 19 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் லிபியா அதிக இறப்புகளை சந்தித்துள்ள நாடாக உள்ளது.

122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பத்தை கண்ட இந்தியா:

2023 இல் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் மட்டும் இந்தியா 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பத்தைக் கண்டுள்ளது. ஆண்டு முழுவதும், நாடு கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் ஒரு தீவிர வானிலை நிகழ்வைக் கண்டுள்ளது.

குறிப்பிட்டு சொல்வதென்றால் ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரையிலான 365 நாட்களில், இதுபோன்ற நிகழ்வுகள் இந்தியாவில் 318 நாட்கள் நிகழ்ந்துள்ளன. இந்த தீவிர வானிலை நிகழ்வுகள் 3,287 மனித உயிர்களைக் கொன்றுள்ளதாகவும் Down To Earth வெளியிட்டுள்ள கட்டுரையின் மூலம் தெளிவாக அறிய முடிகிறது.

இவை 2.21 மில்லியன் ஹெக்டேர் பயிர்ப் பரப்பை பாதித்துள்ளதாகவும், 86,432 வீடுகள் இந்த நிகழ்வுகள் மூலம் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது. இதன் மூலம் 124,813 விலங்குகள் மரணம் அடைந்துள்ளன.

இந்தியாவில் அதிக பாதிப்புக்குள்ளான மாநிலங்கள்:

இந்த வானிலை நிகழ்வுகள் மூலம் இந்தியாவில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை கூறுகிறது. குறிப்பாக இமாச்சலப் பிரதேசத்தில் 149 நாட்களும், மத்தியப் பிரதேசத்தில் 141 நாட்களும் அதிக தீவிர வானிலை நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. கேரளா மற்றும் உத்தரபிரதேசம் ஆகியவை கிட்டத்தட்ட 119 நாட்களுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

மேலும் அறிக்கையின் படி, பீகார் இறப்புகளின் அடிப்படையில் மிகப்பெரிய அளவில் பாதிப்புக்குள்ளான மாநிலமாக உள்ளது. இங்கு 642 பேர் தீவிர வானிலை சம்பவங்களால் உயிரிழந்துள்ளனர். ஹரியானாவில் அதிக அளவிலான பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குஜராத்தில் அதிக எண்ணிக்கையிலான வீடுகள் சேதமடைந்துள்ளன, மேலும் பஞ்சாபில் அதிக விலங்குகள் இறந்துள்ளதாகவும் அறிக்கை கூறுகிறது.

ஆதாரங்கள்:

https://www.downtoearth.org.in/news/climate-change/india-is-warming-fast-endured-its-2nd-hottest-year-on-record-in-2023-state-of-environment-in-figures-2024-96449

https://www.downtoearth.org.in/news/environment/anil-agarwal-dialogue-2024-begins-cse-dte-release-2024-state-of-india-s-environment-report-94722

https://www.cseindia.org/state-of-india-s-environment-2024-in-figures-ebook–12210

Please complete the required fields.
Krishnaveni S

Krishnaveni, working as a Sub-Editor in You Turn. Completed her Master's in History from Madras University. Along with that, she holds a Bachelor’s degree in Electrical Engineering and also in Tamil Literature. She was a former employee of an IT Company and now she currently finds fake news on social media to verify factual accuracy.
Back to top button
loader