This article is from Sep 25, 2019

அண்ணா பல்கலை பொறியியல் மாணவர்களுக்கு பகவத் கீதை பாடம் !

ண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் மாணவர்களுக்கு வெளியிடப்பட்ட புதிய பாடத்திட்டத்தில் புதிதாக தத்துவவியல் பாடப்பிரிவு தொடங்கப்பட்டு அதில் பகவத் கீதை பாடமும் இடம்பெற்று உள்ளதாக புதிய தகவல் வெளியாகி வருகிறது. ஆனால், பல பொறியியல் துறைகளில் இதுபோன்ற புதிய பாடப்பிரிவுகள் இடம்பெற்று இருப்பதை விரிவாக படிக்கவும்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் அறிக்கையின்படி, பொறியியல் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு தத்துவவியல்(Philosophy) பாடப்பிரிவும் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. அதில், தத்துவவியல் பாடப்பிரிவின் கீழ் பகவத் கீதை பாடமும் இடம்பெற்று இருப்பதாக செய்தியில் வெளியாகி இருக்கிறது.

2019-ம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான பாடப்பிரிவு குறித்த அண்ணா பல்கலைக்கழகத்தின் அறிக்கையில் தத்துவவியல் பாடத்தில், ” இந்திய மற்றும் மேற்கத்திய பாரம்பரிய வேறுபாடுகள் மூலம் தத்துவவியல் பாடம் கற்பிப்பதன் மூலம் புதிய புரிதலை உருவாக்க வேண்டும் ” எனக் குறிப்பிட்டு உள்ளனர்.

தத்துவவியல் பாடத்திற்கு எடுக்கப்பட்ட reference பிரிவில் ஸ்ரீமத் பகவத் கீதை, யோகா, வேத நூல்கள் இடம்பெற்று இருக்கிறது. அண்ணா பல்கலைக்கழகத்தால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள தத்துவவியல் பாடமானது MIT, CEG, ACT , SAP வளாகத்தில் பயிலும் மாணவர்களுக்கு மட்டும் இந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழுமம் அறிவுறுத்தலின்படி தத்துவவியல் படிப்பு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தின் அறிவியல் தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் சார்பில் வெளியான அறிக்கையில் தத்துவவியல் பாடம் இடம்பெற்று இருக்கிறது.

மேற்கண்டது அறிவியல் தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் பாடப்பிரிவுகள் , இதேபோன்று ஏரோனாடிகல் இன்ஜினியரிங், ஆட்டோமொபைல், இண்டஸ்ட்ரியல், எலெக்ட்ரிக் அன்ட் எலெக்ட்ரோனிக் இன்ஜினியரிங் உள்ளிட்ட பல துறைகளில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள பாடங்களை தொடந்து கீழே காணலாம்.

ஏரோனாடிகல் இன்ஜினியரிங் மாணவர்களுக்கான விருப்ப பாடத்தில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள 7 பாடங்கள் விருப்ப பாடங்களாக வழங்கப்பட்டு உள்ளன. அந்த பாடங்களில் ” unnat bharat abhiyan ” உள்ளிட்ட பாடங்களும் இடம்பெற்று இருக்கிறது. மேலும், இந்த பாடங்களுக்கான reference பிரிவுகள் வழங்கப்படவில்லை.

எலெக்ட்ரிக் அன்ட் எலெக்ட்ரோனிக் இன்ஜினியரிங் துறையில் 5-வது செமெஸ்டரில் ” values and Ethics ” பிரிவில் உள்ள பாடங்களை மேலே காணலாம்.

HM 5352, HM 5351, HM 5353, HM 5354 மற்றும் ஆடிட் பாடப் பிரிவுகளில் மேற்க்கூறிய பாடங்கள் இடம்பெற்று இருக்கின்றனர். சில பாடங்களுக்கு ” Reference ” புத்தகங்கள் குறிப்பிடவில்லை. மேற்க்கூறிய பாடங்கள் விருப்ப பாடங்களாக மட்டுமல்லாமல், கட்டாயப்பாடங்களாகவும் இடம்பெற்று இருக்கின்றன.

இந்நிலையில், பகவத் கீதையை உள்ளடக்கிய தத்துவவியலை விருப்பப் பாடமாக மாற்ற அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. ” தத்துவவியல், பகவத்கீதை உள்ளிட்ட பாடப்பிரிவுகள் விருப்பப் பாடமாக வழங்கப்பட்டுள்ளது. விரும்பியவர்கள் மட்டுமே படிக்கலாம் ” என அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்து உள்ளார்.

2017-ல் கல்வி நிறுவனங்களில் பகவத் கீதை பாடம் இடம்பெற வேண்டும் என்ற தனிநபர் மசோதாவை ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் எம்பி ரமேஷ் பித்தூரி தாக்கல் செய்துள்ளதாக இந்தியா டுடே செய்தியில் வெளியாகி இருக்கிறது.

 

Link : 

DEPARTMENT OF INFORMATION SCIENCE AND TECHNOLOGY

Soon, Bhagavad Gita will be taught in education institutes

Please complete the required fields.




Back to top button
loader