2 நிமிடத்தில் உங்கள் தொகுதி வேட்பாளர்களின் விவரங்களை அறியலாம் !

தமிழக சட்டப் பேரவை தேர்தல் நாள் நெருங்கிக் கொண்டிருக்கையில் ஒவ்வொரு அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சார வீடியோக்கள் மற்றும் விளம்பரங்களையே செய்திகளில், தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்களில் அதிகம் கண்டு வருகிறீர்கள்.
உங்கள் தொகுதியில் போட்டியிடுபவர்கள் எந்த சின்னத்தில் நிற்கிறார்கள் என்பதை தாண்டி ஒவ்வொரு வேட்பாளர்களின் பின்னணி மற்றும் சுய விவரங்களை பற்றி பெரும்பாலானோர் அறிவதில்லை. அத்தகைய தகவல்களை அறிய முற்பட்டாலும் ஒருங்கிணைந்த தளத்தை அவர்களால் அறிய முடியாமல் போகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் கல்வி, தொழில், சொத்து விவரங்கள், கிரிமினல் வழக்குகள் குறித்த முழு தகவலும் அடங்கிய செயலி ஒன்றை அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ளது.
அறப்போர் ஆன்ட்ராய்டு செயலி : http://bit.ly/Arappor_android_app
ஐஓஎஸ் செயலி : http://bit.ly/ArapporiOSapp
கூகுள் மற்றும் ஆப்பிள் பிளேஸ்டோர்களில் ”Arappor” எனத் தேடியும் செயலியை டவுன்லோடு செய்யலாம்.
அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.