This article is from Jan 20, 2021

அர்னாப் வாட்ஸ் அப் சாட் விளக்க வீடியோவின் ஆதாரத் தொகுப்பு !

” Nation wants to Know “ என தனது விவாத நிகழ்ச்சிகளில் உரக்க கத்திக் கொண்டிருந்த ரிபப்ளிக் டிவி நிறுவனரும், தலைமை ஆசிரியருமான அர்னாப் கோஸ்வாமி மீது டி.ஆர்.பி முறைகேடு வழக்கை மும்பை போலீசார் கடந்த ஆண்டு தாக்கல் செய்தனர். இதற்கு அடுத்தப்படியாக, அர்னாப் கோஸ்வாமி பார்க்(BARC) உடைய முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி பார்த்தோ தாஸ்குப்தா உடைய நடத்திய வாட்ஸ் அப் சாட் லீக் ஆகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

டி.ஆர்.பி  முறைகேடு விவகாரம் தொடர்பாக பார்த்தோ தாஸ்குப்தா உடைய வாட்ஸ் அப் சாட் தகவல்கள் வெளியானதில் அர்னாப் பேசிய சாட்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அர்னாப் கோஸ்வாமி வாட்ஸ் அப் லீக்கில் இடம்பெற்ற பல்வேறு விசயங்கள் குறித்து யூடர்ன் வெளியிட்ட விளக்க வீடியோவின் ஆதாரத் தொகுப்பை இங்கே விரிவாக காணலாம்.

அர்னாப் உடைய வாட்ஸ் அப் சாட் உண்மையானதா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். The caravan எனும் பத்திரிகை மும்பை போலீசிடம் அர்னாப் வாட்ஸ் அப் சாட் குறித்து எழுப்பியா கேள்விக்கு, ஆமாம் அது உண்மை தான் என மும்பை போலீஸ் உறுதி செய்து இருக்கிறார்கள்.

ரிபப்ளிக் டிவி வெளியிட்ட அறிவிப்பில், ” நாங்கள் திரும்ப அடிப்போம் என எந்தவொரு தேசப்பற்றாளரும் சொல்வதுதானே. அதைத்தானே நாமளும் செய்தோம் ” என மறைமுகமாக கூறுவதன் மூலம் தாக்குதல் குறித்து சாட் செய்தது உண்மை எனப் புரிய வைத்துள்ளனர்.

2017-ல் தந்தி டிவியின் ஹரிஹரன் குறித்தும் பேசப்பட்டுள்ளது. அவர் சில மாதங்கள் ரிபப்ளிக் டிவியில் பணியாற்றி இருக்கிறார். அவரின் வருகை குறித்து திரு.ரங்கராஜ் அவர்கள் ஜூலை மாதம் ட்வீட் செய்து இருக்கிறார். மே மாதம் ஹரிஹரன் குறித்த பேச்சு நடந்துள்ளது.

சசிகலா சரணடைந்த நாளில், ” சன் டிவி இந்த வாய்ப்பை பயன்படுத்தி வேறு வேறு மாநிலங்களில் வளர்வதற்கான வேலையை செய்வார்கள் ” என சேனல்களை கண்காணித்து டி.ஆர்.பி மதிப்பீடு செய்யும் நபர்கள் பேசி இருக்கிறார்கள். மேலும், குருமூர்த்தி உடனான பேட்டி குறித்தும், ரஜினிகாந்த் அரசியல் வருகை குறித்தும் பேசப்பட்டுள்ளது.

டி.ஆர்.பி விசயத்தில் முறைகேடு செய்வதன் மூலம் அதை ஒளிபரப்பு செய்யும் நிறுவனத்திற்கு அதிக விளம்பரம் கிடைக்கும். அதன் மூலம் அதிக வருவாய் ஈட்ட முடியும். தங்களின் சேனலை பெரிதாக விளம்பரப்படுத்தி கொள்ள முடியும்.

மேற்கு வங்கத்தில் முஸ்லீம் தொடர்பான பிரச்சனை விவகாரத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு பார்க் முன்னாள் சிஇஓ பார்த்தோ தாஸ்குப்தா அர்னாப்யிடம் கூறி இருக்கிறார்.

2017-ல் நியூஸ் 18 தமிழ் நிறுவனம் அமைச்சர் ஒருவருக்கு பணம் கொடுத்து அரசு கேபிளில் இடம்பிடித்ததாக பார்க் அமைப்பைச் சேர்ந்த ஒருவருக்கும், பார்த்தோ தாஸ்குப்தா உடன் நடந்த உரையாடலில் இடம்பெற்று இருக்கிறது. 2019-ல் தமிழகத்தின் தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்த மணிகண்டன் பதவியில் நீக்கப்பட்டு உடுமலை கே.ராதா கிருஷ்ணன் அமைச்சராக்கப்பட்டார்.

அமைச்சர் உடுமலை கே.ராதா கிருஷ்ணன், தனியார் தொலைக்காட்சிகள் தொடர்பான நடவடிக்கை எடுப்பது குறித்து அறிவிப்பை வெளியிட்ட பிறகு அத்துறையின் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ” ஒரேஇரவில் அனைத்தையும் மாற்றிவிட முடியாது ” எனத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

” எகனாமிக் டைம்ஸ் மற்றும் டைம்ஸ் நவ் மீது ட்ரோல் ஆர்மியைப் பயன்படுத்துமாறு “ பார்க் உடைய முன்னாள் சிஇஓ-வே அறிவுரை வழங்கி இருக்கிறார்.

உங்களுக்கும், சுப்ரமணியன் சுவாமிக்கும் சரியாகி விட்டதா என கேட்ட கேள்விக்கு, ” உள்ளே(off record) நன்றாக உள்ளோம், வெளியே(on record) உங்களுக்கே தெரியும் ” என அர்னாப் பதில் அளித்து இருக்கிறார். வெளியே சண்டையிட்டு கொண்டு உள்ளே இணக்கமாக இருப்பதாக கூறியிருக்கிறார்.

டிவி டுடே மற்றும் ரிபப்ளிக் டிவிக்கு இடையே டி.ஆர்.பி தொடர்பான வழக்கு வரும் போது, டிவி டுடேவுக்கு ஆதரவாக ஆஜராகும் காங்கிரஸ்காரரும், வழக்கறிஞருமான மனு சங்வி என்பவர் குறித்து பேசும் போது, நீதிபதியை விலைக்கு வாங்கு என சாதாரணமாக பார்க் முன்னாள் சிஇஓ அறிவுரை வழங்கி இருக்கிறார். இது பேசிய அடுத்தநாளே, அந்த வழக்கில் அர்னாபிற்கு சாதகமான வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

DishTv-ல் தங்களின் சேனல் தெரிவதற்கு செலுத்த வேண்டிய தொகையை அர்னாப் செலுத்தவில்லை. அது தொடர்பாக வந்த கோப்புகளை ரத்தோர்(அமைச்சர்) தள்ளி வைப்பதாக கூறினார் என அர்னாப் பேசி இருக்கிறார். இப்படி ரிபப்ளிக் டிவி  மற்றும் ஜி டிவி செலுத்தாத தொகையால் அரசிற்கு 52 கோடி இழப்பு ஏற்பட்டதாக நியூஸ் லாண்ட்ரி-ல் வெளியாகி இருக்கிறது.

பாலிமர் சேனல் ரிபப்ளிக் உள்பட பல சேனல்களை ” Manipulate ” செய்வதாக பார்க்கை சேர்ந்த ஒருவர் கூறும் போது, ரிபப்ளிக் டிவி-க்கு ஆதரவாக இருந்த பார்க் முன்னாள் சிஇஓ ” இதுதொடர்பாக விசாரிக்க வேண்டும் ” என்றெல்லாம் கூறி இருக்கிறார்.

இதையெல்லாம் பார்க் முன்னாள் சிஇஓ எதற்காக செய்தார் என்கிற கேள்விக்கான விடையும் இருக்கிறது. பாஜகவின் ஸ்மிரிதி இராணி ஒரு விழாவிற்கு வர வேண்டும் என பார்க் முன்னாள் சிஇஓ அர்னாபிடம் கேட்டு உள்ளார். அதையும் அவர் செய்துக் கொடுத்து உள்ளார்.

அதுமட்டுமின்றி, ஸ்மிரிதி இராணியை எப்படி எல்லாம் புகழ வேண்டும் என அர்னாப் எழுதிக் கொடுத்ததை அப்படியே வாசித்தும் உள்ளார். மேலும், அவருடன் தனியாக சந்திக்க ஒப்புக் கொண்டதாகவும் கூறி உள்ளார்.

Tweet link 

முன்னாள் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் ரகசிய சந்திப்பிற்காக தன்னுடைய ஸ்டூடியோவிற்கு வருவதாக அர்னாப் கூறி இருக்கிறார்.

பிரதமர் மோடி குறித்து பேசுகையில், “நான் பிரதமரிடம் பேசினேன். அவர் நம்முடைய சேனலைதான் பார்க்கிறார் ” என அர்னாப் கூறி இருந்தார். அந்நேரத்தில், அதைப் புகைப்படம் எடுத்து விளம்பரம் செய்து இருக்கலாம் என பார்க் முன்னாள் சிஇஓ கூறி இருக்கிறார்.

பிரச்சனைகள் வரும் போது பிரதமர் அலுவலகத்தின் மூலமாக உதவி செய்யுமாறும், அமித்ஷா மூலம் உதவி செய்யுமாறும் பார்க் முன்னாள் சிஇஓ கேட்டு இருக்கிறார். பல்வேறு நேரங்களில், பல்வேறு பிரச்சனைகளில் பாஜக, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திற்கு உதவி செய்து இருப்பதாக பார்க் முன்னாள் சிஇஓ கூறி இருக்கிறார். சில இடங்களில் ” NM ” மற்றும் ” AS ” என குறிப்பிட்டப்பட்டுள்ளது.

TRAI-யிடம் இருந்து தான் எப்படி தப்பிப்பது குறித்து பார்க் முன்னாள் சிஇஓ கேட்கும் போது, ” TRAI குறித்த விசயத்தை AS-யிடம் கொண்டு செல்வதாக அர்னாப் பதில் அளித்து இருந்திருக்கிறார். ட்ராய் மீது அதிகாரம் செலுத்தும் நபராக இருப்பது அமித்ஷாவாகவே இருக்க முடியும். பெரும் அதிகார மையத்தை அணுகக் கூடிய நபராக இருந்திருக்கிறார் அர்னாப்.

400 கோடியும், பால் தாக்கரேவிற்கு சிலை வைப்பதும் சிவசேனா கட்சிக்கும், பாஜகவிற்கும் இடையேயான கூட்டணி ஒப்பந்தமாக இருப்பதாக இருவரும் பேசி உள்ளனர். 

புல்வாமா தாக்குதலை குறித்து அனைவருக்கும் 20 நிமிடத்திற்கு முன்பாக கவர் செய்ததாக பெருமையுடன் அர்னாப் பேசி இருக்கிறார். புல்வாமா தாக்குதலால் டி.ஆர்.பி உயரும் என்கிற தோணியில் பேசியதோடு, இந்தியா நடத்த உள்ள தாக்குதல் குறித்த ராணுவ ரகசியத்தையும் பேசி இருக்கிறார்.

அருண் ஜேட்லி உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அமைச்சர் பதவிக்கு வரவில்லை என தகவல்கள் வெளியாகின. ஆனால், அழுத்தம் கொடுத்து வெளியே அனுப்பியதாக அர்னாப் உரையாடலில் பேசி இருக்கிறார். Signal அப் பாதுகாப்பு குறித்தும் பேசி இருக்கிறார்கள்.

காணொளி :

ஆதாரம் :

the-barc-chats-published-in-full-mumbai-police-whatsapp-chat-annexures-trp-scam-case

Rangaraj tweet  1 | tweet 2 | tweet 3

Leaked Transcripts
Volume 7 – https://www.scribd.com/document/490832785/Vol-VII
Volume 8 – https://www.scribd.com/document/490832761/Vol-VIII

Delhi HC refuses to hear TV Today’s plea against Arnab Goswami’s Republic

Did Rajyavardhan Rathore bury Republic TV’s multi-crore corruption complaint?

The Mysterious Numbers Game in TN News Space…!

‘One must play dirty’: Chats show how Arnab Goswami plotted with BARC CEO

How we were turned into a nation of elated suckers

https://www.newslaundry.com/2017/06/06/india-today-versus-republic-who-won-the-trp-battle

Republic TV – https://youtu.be/Jpf7q_Ga2RE

Why Tamil Nadu IT minister Manikandan was dropped from Palaniswami cabinet

Please complete the required fields.




Back to top button
loader