இந்த மலை சுரங்க வழிச் சாலை எங்கே அமைந்துள்ளது ?

மதிப்பீடு
போக்குவரத்திற்காக நீண்ட சாலைகள் அமைப்பதற்கென மரங்களை வெட்டுவதும், காடுகளை அழிப்பதும், மலைகளை இருந்த இடம் தெரியாமல் செய்வதையும் கூட பார்த்து இருப்போம். ஆனால், இங்கோ மலையில் அமைக்கப்பட்ட சுரங்கச் சாலைக்காக இயற்கைக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் செயல்படுத்தி உள்ளனர் என இப்படமானது உலகளவில் இயற்கை சார்ந்த ஆதரவை பெற்று வருகிறது.
எனினும், மலையில் அமைக்கப்பட்ட சாலை எந்த நாட்டில் அமைந்துள்ளது என்பதை பெரும்பாலும் பலர் அறிந்து இருக்க வாய்ப்பில்லை.
“ ஆசியாவின் மிக நீண்ட மலை சுரங்க வழிச்சாலை தைவான் நாட்டில் அமைந்துள்ளது “
Hsuehshan Tunnel :
தைவான் நாட்டில் அமைந்துள்ள Hsuehshan Tunnel ஆனது அந்நாட்டின் pinglin மாவட்டத்தின் New Taipei நகரத்தில் தொடங்கி Toucheng-ன் yilan county-யில் முடிவடைகிறது.
Hsuehshan Tunnel சுமார் 13 கி.மீ(12.941km) தொலைவையும், நான்கு வழிச் சாலையையும் கொண்டிருக்கிறது. 1991-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட Hsuehshan Tunnel-வின் பணிகள் 2016-ல் முடிவடைந்தது.
மலை, காட்டில் அமைக்கப்பட்ட Hsuehshan Tunnel சாலை ஆசியாவின் மிக நீளமான மற்றும் உலகின் 5-வது மிக நீளமான மலை வழிச் சாலையாகும். தைவான் நாட்டின் Hsuehshan Tunnel ஆனது 2 பில்லியன் டாலர்கள் மதிப்பில் உருவாகியது.
வெள்ளம், மலைச் சரிவு போன்ற பல காரணங்களால் மலையில் சாலைகள் அமைப்பதில் மிகப்பெரிய சிக்கல்கள் இருந்தன. ஆகையால், இதன் பணிகள் முடிவடைய 14 ஆண்டுகளுக்கும் மேலாகியது.
மலைப்பகுதிகளில் மரங்களை அழிக்காமலும், மலைகளுக்கு பாதிப்புகள் இன்றியும் முயன்ற வரை இயற்கையோடு ஒன்றிய கட்டமைப்புகள் கண்களுக்கு விருந்தளிப்பவை.
இதுபோன்று மலை சுரங்க வழிச்சாலைகள் அதிகம் இருந்தாலும் தைவான் நாட்டின் Hsuehshan Tunnel இணையத்தில் அனைவராலும் ஈர்க்கப்பட்ட முதன்மையான ஒன்று.
Asia’s longest road tunnel opens