This article is from Mar 17, 2019

இரும்பு ஆணிகள் தடை வேலியால் யானைகள் இறப்பு | எங்கே ?

கடந்த சில தினங்களாக சோசியல் மீடியா தளங்களில் யானை வலம் வரும் பகுதியில் சிமென்ட் தளம் அமைத்து அதில் பெரிய இரும்பு ஆணிகள் பதிக்கப்பட்டு இருக்கும் புகைப்படங்கள் அதிகம் வைரல் ஆகிக் கொண்டிருக்கின்றன.

விலங்குகள் வரக் கூடாது என்பதற்காக மனிதன் மிருகமாக சிந்திக்கின்றான் என்ற கருத்து இப்படங்களினால் மேலோங்கியது. இதற்காக கடுமையான கண்டங்களும் எழுந்தன. எனினும், இப்படங்கள் தமிழகத்தைச் சேர்ந்தவையாக இல்லாவிடினும் இதைப் பற்றிய செய்தியை அறிய வேண்டும்.

அஸ்ஸாம் மாநிலத்தில் குவஹாத்தி எல்லைப் பகுதியில் அமைந்து இருக்கும் அம்சாங் வனவிலங்கு சரணாலயப் பகுதியில் ராணுவ வீரர்களின் சமையல் அறை மற்றும் பண்டகசாலைக்கு வரும் கால்நடைகளை தடுக்க தடை வேலியாக ராணுவம் சிமென்ட் தளத்தில் இரும்பு ஆணிகளை பதித்து உள்ளனர்.

இதனால் கடந்த டிசம்பர் மாதத்தில் ஒரு யானையும், பிப்ரவரி மாதத்தில் இன்னொரு யானையும் இரும்பு ஆணிகள் குத்தியதில் காயமடைந்து நீண்ட நாட்கள் காலில் காயம் முற்றி இறந்துள்ளன.

முதல் யானை இறப்பின் போதே இந்தக் கொடூரமான யோசனைக்கு எதிராக எதிர்ப்புகள் எழுந்தன. அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும் என புகார்கள், கண்டனங்கள் எழுந்தன.

இது குறித்து பேசிய மூத்த ராணுவ அதிகாரி, ” யானை இறந்த தருணத்தில் புகார்கள் எழுந்த உடனே இரும்பு ஆணிகளை நீக்குவதற்கான பணிகள் துவங்கப்பட்டதாக கூறியுள்ளார் “.

சரணாலயப் பகுதியல் வனவிலங்குகள், கால்நடைகள் ராணுவப் பகுதியில் நுழைவதை தடுக்கவே இரும்பு ஆணிகள் பதித்த தடை வேலியை அமைத்து உள்ளனர். இதனால் இதுவரை இரண்டு யானைகள் காயமடைந்து இறந்துள்ளன. மேலும், பல வன விலங்குகள் காயமடைந்து இருக்க வாய்ப்புகளும் உண்டு எனத் தெரிவிக்கின்றனர்.

ஆதாரம்  : 

After elephants deaths in Assam, Army begins removing spikes cemented to keep the animals off

Please complete the required fields.




Back to top button
loader