போலிச் செய்திக்கு எதிராக அஸ்ஸாம் போலீஸின் மாஸ் பாடல் !

இந்தியாவில் போலிச் செய்திகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதும், அவற்றை அறியாமல் மக்கள் பகிர்வதும் தொடர் கதையாய் உள்ளது. சமூக வலைத்தளங்களில் போலிச் செய்திகள், தவறான தகவல்கள் பற்றிய விழிப்புணர்வு முன்பிருந்ததை விட தற்போது அதிகரித்து குறிப்பிட்ட சில மக்கள் செய்தியின் உண்மைத்தன்மையை அறிய முற்படுகின்றனர்.

எனினும், இந்திய அளவில் மக்களிடையே போலிச் செய்திகள் பற்றிய விழிப்புணர்வு முழுமையாக இல்லை. சமீபத்தில் அஸ்ஸாம் மாநில காவல்துறை போலிச் செய்திகள் பற்றியப் பிரச்சாரத்திற்கு வித்தியாசமான முயற்சியை கையாண்டு உள்ளனர்.

Advertisement

நவம்பர் 28-ம் தேதி அஸ்ஸாம் காவல்துறையால் போலிச் செய்திகள் மற்றும் forward செய்திகள் பற்றி அறிந்து பின்னர் பகிர வேண்டும் என்ற தகவலை மக்களிடம் தெரிவிக்க ட்விட்டரில் ஓர் போஸ்டர் உடன் பாடல் வரிகளை வெளியிட்டனர்.

Open your eyes

   Look up to the skies and see,

   Real life not a fantasy

   Fact check before you forward

Advertisement

   There’s no escape from reality “

   Mama I don’t wanna lie #DontFakeit.

என்ற பாடல் வரிகளுடன் திரைப்படத்தின் போஸ்டர் போன்று படத்தையும் இணைத்து ட்விட்டரில் பதிவிட்டனர்.

அஸ்ஸாம் போலீஸின் இந்த பாடல் வரிகள், அம்மாநிலத்தில் 1975 ஆம் ஆண்டில் வெளியாகிய பிரபல பாடலான “ Queen’s, bohemian Rhapsody “ -ஐ மையமாகக் கொண்டு உருவாக்கி உள்ளனர். இப்பாடலுக்கு இன்றும் அம்மக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது.

ஆகையால், அப்பாடலின் வரிகளை எடுத்து போலிச் செய்திகள் மற்றும் Forward செய்திகள் பற்றிய விழிப்புணர்வுக்கு ஏற்றார் போல் உருவாக்கி உள்ளனர். உண்மை செய்திகள் பற்றி மக்கள் அறிய வேண்டும் என்பதால் bohemian Rhapsody  -ஐ bohemian Factsody என குறிப்பிட்டு உள்ளனர்.

போலிச் செய்திகளுக்கு எதிரானப் பிரச்சாரத்தில் அஸ்ஸாம் போலீஸின் வித்தியாசமான முயற்சிக்கு நெட்டிசன்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது.

இதற்கு முன்பாக ஜூலை மாதம் அஸ்ஸாம் மாநிலத்தில் குழந்தை கடத்தல் என்ற வதந்தி பரவி தாக்கத்தை ஏற்படுத்தியது என அஸ்ஸாம் போலீஸ் தெரிவித்து உள்ளது. தற்போது #DontFakeit ஹாஷ்டக் பிரபலமாகி வருகிறது.

போலிச் செய்திகள், தவறான மற்றும் மிகைப்படுத்தப்பட்ட தகவல்களை பகிர்வதற்கு முன்னர் இது உண்மையாக இருக்குமா என ஒரு நிமிடம் யோசித்தால் போதும் பரவும் போலிச் செய்திகளுக்கு முற்றுப்புள்ளியிடலாம்.

Assam Police Warns Against Fake News With Bohemian Rhapsody Post

Cops try to beat fake news with ‘Bohemian Factsody’ 

Youturn பணியை விரும்புகிறீர்களா? இனி நீங்கள் நிதிப் பங்களிப்பு செய்யலாம். எங்கள் உழைப்பும் , நேரமும், இலவசமாக தருகிறோம் , உங்களால் முடிந்த கட்டணத்தை தரலாம் . உண்மையின் குரலாய் , (உங்களின்) மக்களின் பத்திரிகையாக www.youturn.in இயங்க மாதா மாதம் விரும்பியதை சந்தா கட்டுங்கள் .

Support with

Ask YouTurn

Please complete the required fields.
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close