மனிதமும், விளம்பரமும்.. உணவு வழங்குவதை புகைப்படம் எடுக்காதீர்கள்.

நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு நிலை நிலவுவதால் அன்றாட வேலைக்கு சென்று வாழ்பவர்கள் உணவிற்கு வழியின்றி தவித்து வருகின்றனர். இந்தியாவில் ஏழை மற்றும் ஆதரவற்ற மக்களுக்கு கொரோனா ஊரடங்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement

இந்நிலையில் தான், அரசு சார்ந்தவர்கள், தன்னார்வலர்கள் தங்களால் முயன்ற அளவிற்கு ஆதரவற்ற மக்களுக்கு உணவு, அத்தியாவசியப் பொருட்களை வழங்கி உதவி செய்து வருகிறார்கள்.

பிரபலங்கள் தொடங்கி பொதுமக்கள் என பலரும் தாங்கள் செய்யும் உதவியை சத்தமில்லாமல் செய்து விட்டு செல்கிறார்கள். எனினும், செய்யும் உதவியை புகைப்படம் எடுத்து பகிர்வதன் மூலம் மற்றவர்களுக்கும் உதவும் எண்ணம் வரும் என்ற நோக்கத்தில் அப்புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்வதுண்டு.

ஆனால், சிலர் சமூக வலைதளங்களில் பிரபலமாகவே உதவி செய்வது போன்று புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து பதிவிட்டுக் கொள்கிறார்கள். இது ஒரு வகையான ட்ரெண்ட் ஆகவும் மாறியது. குறிப்பாக, சில டிக்டாக் பைத்தியங்கள்.

இந்நிலையில்தான், உதவி செய்வது போன்று வீடியோக்களை எடுத்துக் கொள்ளும் நபர்களுக்கு எதிராக மற்றொரு முறை ட்ரெண்ட் ஆகி வருகிறது. வீடியோ எடுப்பதற்காக உதவி செய்வது போன்று காட்டிக் கொள்பவர்களின் தவறை சுட்டிக் காட்டி அது அமைந்து உள்ளது.

மேலும், நாடு முழுவதும் ஊரடங்கு நிலவும் தருணத்தில் ஆதரவற்ற மக்களுக்கு உணவு உள்ளிட்ட உதவிகளை செய்பவர்கள் புகைப்படங்கள் எடுக்கக்கூடாது என ராஜஸ்தான் அரசு தடையே விதித்து இருக்கிறது. ஆதரவற்ற மக்களுக்கு உதவி செய்வதை சேவையாக இருக்க வேண்டுமே தவிர, விளம்பத்திற்காக செய்யக்கூடியது அல்ல என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. 3 பேர் சேர்ந்து ஒரு நோயாளிக்கு வாழைப்பழம் வழங்கும் புகைப்படம் வைரலானதை அடுத்து அம்மாநில அரசு இம்முடிவை எடுத்து உள்ளது.

இருப்பவர்களோ அல்லது இல்லாதவர்களோ பிறருக்கு உதவி செய்வது அடிப்படை கடமை. உதவி செய்யாமல் இருந்தாலும் தவறில்லை.. உதவி செய்வதாக காட்டிக் கொண்டு விளம்பரம் தேடுவது மனித தன்மையற்றது என்பதை அறிக.

Advertisement

Do you think Youturn’s fact-checking is important? Donate and make it your own people's newspaper!
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.

Ask YouTurn

Please complete the required fields.




Back to top button