2 வாழைப்பழம் ஜி.எஸ்.டி-யுடன் 422 ரூபாய்|விஸ்வரூபம் நடிகரின் வைரல் வீடியோ !

ரு வாழைப்பழத்தின் விலை 5 ரூபாய் அல்லது 10 ரூபாய் என விலை கொடுத்து வாங்கி இருப்போம். ஆனால், சாப்பிட்ட இரண்டு வாழைப்பழத்திற்கு 442 ரூபாய் பில் கட்டிய விஸ்வரூபம் திரைப்படத்தின் வில்லன் நடிகர் பற்றிய செய்தி வைரலாகி வருகிறது.

Advertisement

விஸ்வரூபம் திரைப்படத்தில் உமர் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்த ராகுல் போஸ் படப்பிடிப்பிற்காக சண்டிகரில் உள்ள ஒரு 5 ஸ்டார் ஹோட்டலில் தங்கியுள்ளார். ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்த பிறகு 2 வாழைப்பழத்தை ஆர்டர் செய்து  உள்ளார்.

அதற்காக அளிக்கப்பட்ட பில்லில், வாழைப்பழத்தின் விலை ரூ.375, அதற்கான ஜிஸ்டி 66 ரூபாய் என மொத்தம் 442.50 ரூபாய் என குறிப்பிடப்பட்டு உள்ளது. இதையடுத்து, ஹோட்டல் குறித்தும், அங்கு என்ன நடந்தது என கிண்டல் செய்து பேசிய வீடியோ ஒன்றை ட்விட்டரில் ராகுல் போஸ் வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோ தற்பொழுது செய்திகள், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சமூக வலைதள வாசிகளும் தாங்கள் சந்தித்த நிகழ்வுகள், 5 ஸ்டார் ஹோட்டல்களில் உள்ள விலை குறித்து ட்விட்டர் உள்ளிட்டவற்றில் பதிவிட்டு வருகின்றனர். #RahulBoseMoment என்ற ஹாஷ்டக்-ஐ ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisement

இதையடுத்து, UT Excise and Taxation department சம்பந்தபட்ட 5 ஸ்டார் ஹோட்டலுக்கு ரூ.25,000-த்தை அபராதமாக விதித்து உள்ளது. 5 ஸ்டார் ஹோட்டல் என்றாலும் ஒரு நியாயம் வேண்டாமா மக்களே !

Proof : 

Netizens are Sharing Their ‘Rahul Bose Moments’ After the Actor Paid Rs 442 for Two Bananas

Actor Rahul Bose Charged Rs 442 For Two Bananas, Probe On

அரசியல் கட்சி, பெரு நிறுவனங்களின் துணை இன்றி இயங்கும் நிறுவனம் , உண்மை கண்டறிதல் செய்வது எத்தனை சிக்கலான பணி என்பது மக்களுக்கு தெரியும். எங்கள் துணையாக உங்களை அழைக்கிறோம் சந்தா கட்டி தொடர்ந்து YouTurn மக்களின் பத்திரிகையாக இயங்க உறுப்பினர் ஆகுங்கள்.

Join Membership

Ask YouTurn

Please complete the required fields.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button