விஷமாய் மாறும் பாங்காக் நகரத்தின் காற்று !

தாய்லாந்தின் சிறந்த சுற்றுலாப் பகுதியான பாங்காக் நகரில் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு காற்று மாசடைந்து யாரும் நினைத்து பார்க்க முடியாத விளைவுகளை ஏற்படுத்துகிறது. அந்நகரில் காற்று மாசுப்பாட்டின் எச்சரிக்கை மணி ஒலித்துள்ளது.
சிவந்த கண்கள், இருமலின் போது இரத்தம் வருவது, மூக்கில் இருந்து இரத்தம் மற்றும் விஷக் காற்றை சுவாசிப்பதால் மக்கள் அனுபவித்து வரும் துன்பங்கள் அந்நாட்டின் சோசியல் மீடியா, டிவி சேனல்களில் ஹஷ்டாக் மூலம் பதிவிட்டு வைரலாகி வருகிறது.
பாதுகாப்பு அளவைத் தாண்டி காற்றில் இருக்கும் தூசி துகள்கள் PM 2.5 என்ற அளவிற்கு உயர்ந்து அந்நகரின் 41 இடங்களில் காற்று மாசு அதிக அளவில் உயர்ந்து உள்ளதாக மாசுக்கட்டுப்பாடு வாரியம் அறிவித்து இருந்தது. PM 2.5 திரவ துளிகள், திட துகள்கள் மற்றும் புகைக்கரி, தூசிகள், புகை என கலந்த கலவை. அங்கு வசிக்கும் மக்கள் முகத்தில் துணிகளைக் கட்டிக் கொண்டு நடைமுறை வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.
ஒருவரின் கண்களில் இரத்தம் தெரிவது போன்று சிவப்பு நிறத்தில் இருக்கும் புகைப்படங்கள் உலகளவில் வைரலாகி வருகிறது. மேலும், பொதுமக்களும் தங்களின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
“ காற்று மாசுபாடு உயர்ந்த காரணத்தினால் அந்நகரின் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன. டீசல் கார் போன்ற வாகனங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பட்டாசுகள் வெடிக்கவோ, விவசாய பயிர்களை எரிக்கவோ கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால், சீன புத்தாண்டு தினத்திற்கு பட்டாசுகள் வெடிக்கவும் தடை விதித்து உள்ளனர் “.
சாலைகளில் வாகனப் புகை, நகருக்கு வெளியே பயிர்கள் எரிக்கப்படுவது, தொழிற்சாலை புகைகள் அனைத்தும் இணைத்து பாங்காக் நகரின் அதிக அளவிலான காற்று மாசுப்பாட்டிற்கு காரணமாகி உள்ளது.
ஆகாயத்தில் தண்ணீரை அடிப்பது, சாலைகளை சுத்தமாக வைத்துக் கொள்வது, செயற்கை மழை உருவாக்குவது போன்ற பல முயற்சியை அந்நாடு மேற்கொண்டு வருகிறது.
சில வாரங்களுக்கு முன்பு, Airvisual.com வெளியிட்ட காற்று மாசு அதிகம் உள்ள நகரங்களின் பட்டியலில் பாங்காக் 5-வது இடத்தில் உள்ளது. 257 நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் தலைநகர் டெல்லி முதல் இடத்தில் உள்ளது.
டெல்லியில் காற்று மாசு அதிகரித்து மக்கள் சிரமப்பட்டு வருவதை பலமுறை செய்திகளில் படித்து இருப்போம். காற்று மாசு காரணமாக டெல்லியிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இயற்கைக்கு எதிராக வாழும் வாழ்க்கையில் இலவசமாக கிடைக்கும் காற்றிலும் நஞ்சைக் கலந்து விட்டோம் என்பதே மனிதர்களின் அதீத வளர்ச்சி !.
Bleeding Noses And Blood-Red Eyes As Bangkok Battles Toxic Air
Bangkok air is so toxic that people are complaining of blood-red eyes and bleeding noses
Bangkok pollution: Residents complain of bleeding noses, blood-red eyes as air turns toxic; see pics
YouTurn உண்மையை சொல்லும் பணி முக்கியம் என நினைக்கின்றீர்களா? நன்கொடை அளித்து நீங்களே மக்கள் பத்திரிகையாக இயங்க வழி செய்யுங்கள்.