தவறுதலாக வங்கி கணக்கில் டெபாசிட் ஆன 50 பில்லியன் டாலர்கள்.. நான்கு நாள் கோடீஸ்வரர் ஆன சம்பவம் !

அமெரிக்காவின் லூசியானாவில் உள்ள ஒரு வங்கி தன் வாடிக்கையாளர் ஒருவரது கணக்கில் தற்செயலாக 50 பில்லியன் டாலர்களை (சுமார் 3.2 லட்சம் கோடி) டெபாசிட் செய்துள்ள சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.” அது தன்னுடைய பணம் இல்லை என்பதால் அதை நான் செலவு செய்யவில்லை” என அந்த பயனாளி தெரிவித்துள்ளார்.
லூசியானாவில் வசித்து வரும் டேரன் ஜேம்ஸ் ஒரு ரியல் எஸ்டேட் ஏஜென்ட் ஆவார். 47 வயதான இவரின் மனைவியின் வங்கிக்கணக்கில் தற்செயலாக 50 மில்லியன் டாலர்கள் டெபாசிட் செய்யப்படவே உலகின் 25 வது கோடீஸ்வரர் ஆனது ஜேம்ஸ் குடும்பம். ஆனால் அந்த பதவியும், பூரிப்பும் அவர்களுக்கு நான்கு நாட்கள் மட்டுமே நிலைத்துள்ளது.
“ ஜூன் 12 அன்று நான் வேலையை முடித்து வீட்டுக்கு வந்தவுடன் என் மனைவி அவரது ஸ்மார்ட்போனில் பெரும் தொகை டெபாசிட் செய்யப்பட்டதை காட்டினார். இதை பார்த்தவுடன் நாங்கள் நினைத்ததெல்லாம் எங்கள் வீட்டின் கதவைத் யார் வந்து தட்ட போகிறார்களோ?! என்று தான்… ஏனென்றால் இவ்வளவு பணத்தை வைத்திருக்கும் யாரையும் எங்களுக்குத் தெரியாது” என இது குறித்து அளித்த பேட்டியில் ஜேம்ஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், “என் பணக்கார மாமா ஒருவர் எனக்கு இந்த பணத்தை விட்டுச் சென்றுள்ளார் என்றெல்லாம் எண்ணினேன்.. இது உண்மையாக இருந்தால் பிரபல நைக் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் நைட்டுக்கு மேல் என் குடும்பம் ஃபோர்ப்ஸ் பில்லியனர்கள் பட்டியலில் இடம்பெற்றிருக்கும்.. உங்கள் வங்கி கணக்கில் பல பூஜ்ஜியங்களைக் காண்பது என்பது அருமையான உணர்வு” என அவரது உணர்வு குறித்து கேட்கையில் வேடிக்கையான பதிலை அளித்துள்ளார் ஜேம்ஸ்.
ஏன் பணத்தை செலவு செய்யவில்லை என கேட்கையில் , “அது எங்களுடையது அல்ல என்பது எங்களுக்குத் தெரியும். நாங்கள் அதை சம்பாரிக்கவில்லை, எனவே எங்களால் எதையும் செய்ய முடியவில்லை. எங்களால் அதைச் செலவிட முடியவில்லை – செலவிட்டால் அது திருட்டாகும்.
இந்த செய்தி அறிந்தவுடன் ஜேம்ஸ் உடனே தாங்கள் சேஸ் வங்கியை அழைத்து தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் அதற்கு பின்பும் பணம் அவர்களது வங்கி கணக்கில் இருந்துள்ளது. “நான் நான்கு நாட்கள் கோடீஸ்வரராக இருந்தேன்.. அதை வைத்து எதுவும் செய்ய முடியாது என்றாலும் இது ஒரு நல்ல அனுபவம் ” என தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து சேஸ் வங்கி கூறுகையில், “ஒரு வாரத்திற்கு முன்னர் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கணக்குகளை பாதிக்கும் ஒரு தொழில்நுட்ப தடையை நாங்கள் கொண்டிருந்தோம்.. அந்த சிக்கல்கள் தற்போது நீக்கப்பட்டது அந்த கணக்குகள் இப்போது துல்லியமான விவரங்களைக் காட்டுகின்றன” என தெரிவித்துள்ளனர்.
Links :
louisiana-couple-shocked-bank-mistakenly-deposits-50b-account
50-billion-briefly-deposited-in-louisiana-familys-bank-account/