நடிகர் மாதவனின் ட்வீட்: மாட்டுக்கறியை விட கிட்னி பீன்ஸில் சத்துக்கள் அதிகமா ?

100 கிராம் மாட்டுக்கறியிலும், 100 கிராம் சிவப்பு நிற கிட்னி பீன்ஸ்சிலும் உள்ள புரதச்சத்து, இரும்புச்சத்து, நார்ச்சத்து, அதன் விலை முதலியவற்றை ஒப்பிட்டு இதில் சிவப்பு நிற கிட்னி பீன்சே விலையிலும் சத்திலும் சிறந்தது எனப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Twitter link | Archive twitter link 

இதனை நடிகர் மாதவன் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து ‘Wow’ என குறிப்பிட்டுள்ளார். மேலும் இதனை பலரும் டிவிட்டரில் பகிர்ந்து வருகின்றனர்.

மாட்டுக்கறி குறித்து இந்தியாவில் பல்வேறு சர்ச்சைகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. மாட்டுக்கறி வைத்திருந்ததாகக் கூறி தலித் மக்களையும், இஸ்லாமியர்களையும் அடித்துக் கொள்ளும் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. இம்மாதிரியான வன்முறைகள் பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் பெரிய அளவில் நிகழ்த்தப்படுகிறது.

தற்போது கறி உண்பவர்களுக்கு எதிராகவும் பிரச்சாரங்கள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாட்டுக்கறியையும், சிவப்பு நிற கிட்னி பீன்ஸ்சையும் ஒப்பிட்டுப் பதிவு சர்ச்சை ஆகிறது. 

உண்மை என்ன ?

அப்புகைப்படத்தில் Uncooked, Cooked  என இரண்டு விதமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், சமைத்து உண்ணும் போது என்ன கிடைக்குமோ அதைத்தான் ஒப்பிட முடியும் . எனவே சமைத்தால் அதில் உள்ள சத்துக்கள் பற்றி Healthify me என்ற செயலியில் தேடினோம்.

100 கிராம் வேக வைத்த சிவப்பு கிட்னி பீன்சில் 8.7 கிராம் புரதம், 22.8 கிராம் கார்போஹைட்ரேட்டுகள், 0.5 கிராம் கொழுப்பும், 6.4 கிராம் நார்ச்சத்தும் உள்ளது. 

இதேபோல 100 கிராம் வேக வைத்த மாட்டுக்கறியில் 12 கிராம் புரதம், 2.2 கிராம் கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்பு இல்லை, 0.4 கிராம் நார்ச்சத்தும் உள்ளது. 

இதிலிருந்து பரவக்கூடிய புகைப்படத்தில் புரதம் மற்றும் நார்ச்சத்து தொடர்பாகத் தவறான தகவல் குறிப்பிடப்பட்டிருப்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

மேற்கொண்டு இது தொடர்பாக இணையத்தில் தேடியபோது Foodstruct என்ற இணையதளத்தில் மாட்டுக்கறி மற்றும் கிட்னி பீன்சில் உள்ள சத்துக்களை ஒப்பிட்டுப் பார்க்க முடிந்தது.

இந்த ஒப்பிடலுக்கு தேவையான தரவுகள் U.S. DEPARTMENT OF AGRICULTURE வெளியிட்டுள்ள தரவில் இருந்து எடுக்கப்பட்டது. இதன்படி பார்க்கையில், பீன்சிற்கு சாதகமான பகுதியினை மட்டும் சமூக வலைத்தளத்தில் பகிரும் புகைப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதை அறிய முடிந்தது.

ஜிங்க் (Zinc) : மாட்டுக்கறியில் 6.31 மி.கி, பீன்ஸில் 2.79 மி.கி உள்ளது. அதே போல மாட்டுக்கறியில் விட்டமின் B3 5.378 மி.கி, பீன்ஸில் வெறும் 2.06 மி.கி மட்டுமே உள்ளது. மேலும் விட்டமின் A மற்றும் விட்டமின் B12 மாட்டுக்கறியில் தான் உள்ளது.

சுகர் கண்டென்ட் பீன்ஸில் 2.23 கிராமும், மாட்டுக்கறியில் இல்லை. சுகர் கண்டென்ட் குறைவாக இருப்பது உடலுக்கு நல்லது. இந்த தகவல்கள் ஏதும் பரவக்கூடிய புகைப்படத்தில் குறிப்பிடப்படவில்லை.

மேலும் 100 கிராம் மாட்டுக்கறியின் விலை 3 டாலர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, இன்றைய இந்திய மதிப்பில் 100 கிராம் மாட்டுக்கறி 240 ரூபாய். ஆனால், தமிழ்நாட்டில் சென்னையைச் சுற்றியுள்ள பகுதியில் ஒரு கிலோ மாட்டுக்கறியின் விலை 300 முதல் 400 வரை விற்கப்படுகிறது. அதன்படி 100 கிராம் மாட்டுக்கறியின் விலை 30 – 40. பரவும் புகைப்படத்தில் மாட்டுக்கறி குறித்த விலையும் தவறானது.

இப்படி ஒரு ஒப்பீடு எதற்கு ? உணவின் அடிப்படையில் ஒரு மனிதனின் மரியாதை முடிவு செய்யப்பட வேண்டுமா ? அதுவும் தவறான தகவல்கள் அடிப்படையில்.. சரி நாமும் மாதவன் போல் ஏமாற வேண்டாம்.

மேலும் படிக்க : செயற்கைகோளின் துல்லிய ஏவுதலுக்கு பஞ்சாங்கம் கணிப்பு மிக அவசியம் என்றாரா மயில்சாமி அண்ணாதுரை ?

இதற்கு முன்பாக, ராக்கெட்ரி திரைப்படம் வெளியான போது, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கணிக்கப்பட்ட பஞ்சாங்கத்தின் உதவியுடன் செயற்கைகோள்களை துல்லியமாக ஏவ முடியும் என நடிகர் மாதவன் கிளப்பிய வதந்தி நினைவிருக்கலாம் . கவனம் மாதவன் !

முடிவு : 

நம் தேடலில், மாட்டுக்கறியை விட சிவப்பு நிற கிட்னி பீன்ஸ் சிறந்தது எனப் பரப்பப்படும் புகைப்படத்தில் தவறான தகவல் உள்ளன. அதில் பீன்சிற்கு சாதகமான தரவுகள் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. கிட்னி பீன்சினை ஒப்பிடுகையில் மாட்டுக்கறியில் புரதம், ஜிங்க், விட்டமின் B12, A போன்ற சத்துக்கள் மிகுதியாக இருக்கிறது அறிய முடிகிறது.

Link: 

Beef, ground, 85% lean meat / 15% fat, patty, cooked, broiled

Beans, kidney, all types, mature seeds, raw

Kidney bean vs Beef – In-Depth Nutrition Comparison

Please complete the required fields.
Gnana Prakash

Gnanaprakash graduated from University of Madras in 2017, with a Masters in Journalism and Mass Communication. He worked previously with a couple of other online news outlets as a Sub Editor.
Back to top button
loader