This article is from Mar 14, 2019

அமெரிக்க கார்ட்டூனிஸ்ட் பென் காரிசன் வரைந்ததாக வதந்திகள் !

மதிப்பீடு

அமெரிக்காவின் பிரபலமான கார்ட்டூனிஸ்ட் பென் காரிசன்(Ben Garrison’s) இந்திய அரசியல் நிலவரம் குறித்து வரைந்ததாக பசு மாட்டின் கார்ட்டூன் இங்கு சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது. இதில், காங்கிரஸ் ஆட்சியை குறிப்பிட்டு பகிர்ந்து வருகின்றனர்.

இதே, படத்தில் பிஜேபி பெயரை மாற்றியும் சமூக வலைதளங்களில் பென் காரிசன் பெயரில் வைரலாக்கி வருகின்றனர்.

ஆனால், பென் காரிசன் பெயரில் பரவும் கார்ட்டூன்கள் யாவும் அவர் வரைந்தவை அல்ல. இதனை பென் காரிசன் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.

2017-ல் தன் ட்விட்டர் பக்கத்தில், ” இந்திய அரசியல் குறித்த எந்த கார்ட்டூன்களும் வரையவில்லை என்றும், பரவி வரும் கார்ட்டூன்கள் என்னுடையது அல்ல ” எனக் பதிவிட்டு உள்ளார்.

பென் காரிசன் பெயரில் பரவிய கார்ட்டூன் 2015-ல் Amal Medhi என்பவரால் 2015 செப்டம்பர் 29-ம் தேதி ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டு உள்ளது. அதில், Make In India திட்டத்தை விமர்சித்து கார்ட்டூன் வரைந்து உள்ளார். இதில், போட்டோஷாப் செய்தே பென் காரிசன் வரைந்த கார்ட்டூன் என வதந்தியை பரப்பி வருகின்றனர்.

இதற்கு முன்பாகவும், பென் காரிசன் பெயரில் பிரதமர் மோடி முகம் ஃபோட்டோஷாப் செய்த கார்ட்டூன்கள் போலியானவை என ஃபேஸ்புக்கில் பதிவிட்டு இருந்தோம்.

பென் காரிசன் பெயரில் இந்திய அரசியல் பற்றி பரவும் கார்ட்டூன்கள் போலியானவையே !

Please complete the required fields.




Back to top button
loader